ஷிட்டாக்கி

நான் ஷிட்டாக்கி காளான் வைத்து இருக்கிறேன்,இதுவரை நான் மஷ்ரூம் பயன்படுதியதில்லை ,அதை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்,ஸ்கின்,ஸ்டெம் நீக்க வேண்டுமா,தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் அறுசுவை
தோழிகளே .

ஃபாத்திமா பட்டன் மஷ்ரூமை போலத்தான் ஷிட்டாக்கி மஷ்ரூமையும் சுத்தம் செய்ய வேண்டும். ஈரத்துணியால் துடைத்து எடுத்தாலே போதும். தண்ணீர் ஊற்றி கழுவக் கூடாது. ஸ்டெம்மின் கீழ் பகுதியை மட்டும் நீக்கினால் போதும். பொதுவாக ஸ்டெம்மை ஸ்டாக் தயாரிக்க பயன் படுத்துவார்கள். கூட்டு வதக்கல் செய்யும் போது பயன் படுத்தலாம்.

ஷிட்டாக்கி மஷ்ரூம் ஸ்மெல் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆக இருக்கும். அதனால் நம்ம ஸ்டைல் சமையலுக்கு குறிப்பாக மசாலா போல செய்யும் போது கொஞ்சம் பார்த்து செய்யுங்கள். சுவை இருக்கும் ஆனால் மணம் மாறிவிடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

விரிவான விளக்கம் ,தெளிவாக தந்ததற்கு மிக்க நன்றி கவிசிவா,நீங்கள் சொன்னது மாதிரிதான் நடந்தது,நான் பாஸ்தாவில்,கழுவி சேர்த்து விட்டேன்,நன்றாக இல்லை.
பட்டன் மஸ்ரூம் நன்றாக இருக்குமா,இதேபோல்தான் அதையும் செய்ய வேண்டுமா? நீங்கள்,வனிதா,கல்பனா,கவிதா போன்ற தோழிகள் யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வது போற்றத்தக்கது(இன்னும் மற்ற அனைவரது பெயரையும் குறிப்பிட முடியவில்லை கோபிக்காதீர்கள்)மீண்டும் நன்றி.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

ஃபாத்திமா எல்லா வகை மஷ்ரூமையும் இப்படித்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஷிட்டாக்கி மஷ்ரூம் எல்லாருக்கும் பிடிக்காது. காரணம் ஸ்ட்ராங் ஸ்மெல்தான். பட்டன் மஷ்ரூமில் ஸ்மெல் இருக்காது. எல்லாவகை சமையலுக்கும் ஏற்றது.

தண்ணீரில் மஷ்ரூமைக் கழுவும் போது மஷ்ரூம் தண்ணீரை இழுத்துக் கொள்ளும். அதனால் வதக்கும் போது தண்ணீர் விட்டுக்கொண்ண்டு சொத சொதன்னு ஆகிடும். அதான் தண்ணீரில் கழுவக் கூடாது. பாஸ்தாவில் சேர்த்து உங்களுக்கு அது பிடிக்கலேன்னா அதோட ஸ்மெல் காரணமா இருக்கலாம். ஃப்ரை மாதிரி இஞ்சி பூண்டு மிளகுதூள் சேர்த்து செய்யுங்க. ஸ்மெல் கொஞ்சம் குறையும்.

இங்கே எல்லா தோழிகளுமே அவங்களுக்கு பதில் தெரிஞ்சிருந்தா கண்டிப்பாக சொல்வாங்க ஃபாத்திமா. ஏதும் சொல்லாம போறோம்னா பதில் தெரியலைன்னு அர்த்தம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மீண்டும் மிக்க நன்றி கவிசிவா.நானும் அதேதாங்க சொல்றேன் ,ஆனால் என்னால் எல்லோர் பெயரும் குறிப்பிட நேரம் போதவில்லைங்க.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்