ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

தேதி: April 18, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (10 votes)

 

சால்மன் மீன் - 200 கிராம்
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ரோஸ்மேரி (அ) புதினா - சிறிதளவு
முட்டை - 2
கார்ன் ஃப்ளொர் (அ) ஆல் பர்பஸ் மாவு - ஒரு மேசைக்கரண்டி
பார்மிசான் சீஸ் - 3 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பல்
ப்ரெட் - 5 துண்டுகள்
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

மீனை சுத்தம் செய்து விரல் நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
முட்டையின் வெள்ளைகருவை மட்டும் தனியே பிரித்தெடுக்கவும். அதனுடன் இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் மற்றும் மாவு சேர்த்து அடித்து வைக்கவும்.
ப்ரெட்டை மிக்சியில் போட்டு பொடித்து வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
அதனுடன் துருவிய பூண்டு, சீஸ், பொடியாக நறுக்கிய ரோஸ்மேரி அல்லது புதினா சேர்த்து பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறிய மீன்துண்டை எடுத்து முட்டை கலவையில் முக்கி ப்ரெட்டில் பிரட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். முட்டை கலவையில் அதிக நேரம் வைத்திருக்க கூடாது. அப்படி வைத்தால் மீனில் உள்ள மசாலா முட்டை கலவையில் கரைந்து விடக் கூடும். உள்ளே முக்கி உடனே எடுத்து ப்ரெட்டில் பிரட்ட தான் வேண்டுமே தவிர அங்கேயும் அதிக நேரம் விட்டால் ப்ரெட் க்ரம்ப்ஸ் நமுத்து விடும்.
சுவையான ஃபிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி. இதை மேயநீஸ், டார்டர் சாஸ் அல்லது கெச்செப்புடன் பரிமாறவும்.

சால்மன் மீனில் ஒமேகா த்ரீ ஃபாட்டி ஆசிட் இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. எண்ணெயில் பொரிக்க வேண்டாம் என்றால் பேக் செய்தும் கொடுக்கலாம். அவனை 400 F முற்சூடு செய்து பேக்கிங் ட்ரேயில் பாயில் போட்டு குக்கிங் ஸ்ப்ரே அடித்து மீனை அடுக்கி வைக்கவும். ஆறு நிமிடத்திற்கு பின் திருப்பி போடவும். வேக குறைந்தது பத்து நிமிடமாவது ஆகும். இதை முள் அதிகம் இல்லாத எந்த மீனிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்த்ததும் நம்ம லாவின்னு கண்டு பிடிச்சுட்டனே ;) சூப்பர்... சூப்பர்... சூப்பர்... ரொம்ப சூப்பர். வேறென்ன சொல்ல... அழகான படங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nice receipes with good images.once again thanks for ur receipes.

thanks

லாவண் அழகான படங்கள் அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அட்டகாசமா இருக்கு போங்க உங்க பிஷ் பிங்கர்..... :)
பார்க்கவே நாக்கு ஊருது.... படங்கள் அனைத்தும் அருமை..... வாழ்த்துக்கள்.....

குட்டீஸ்க்கு பிடித்த அருமையான, சத்தான உணவு. ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கிறீங்க! வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஹலீமா

Wow லாவன்யா அட்டகாசமான குறிப்பு. வாழ்த்துக்கள்!!! பார்க்கும் போதே நா ஊருது சாப்பிடனும்னா கேட்கவா வேணும்!!!. இந்த வாரமே செஞ்சு அசத்திடுறேன்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

நானும் முகப்பிலேயே கண்டுபிடித்துவிட்டேனே, இது நீங்கதான்னு... :)
குறிப்பும், படங்களும் சூப்பராயிருக்கு லாவண்யா!

இப்பல்லாம் நான் ரெகுலர் பிஷ் ஃப்ரையே, மசாலா தடவி இப்படிதான் அவன்ல வைச்சு பேக் பண்ணி எடுக்கறேன்! (எண்ணெயை கொஞ்சம் குறைப்பதற்காக! :)) அடுத்தமுறை சால்மன் வாங்குபோது, நீங்க சொல்லியிருக்கறமாதிரி ரேஸ்மேரி, சீஸ், ப்ரெட் க்ரம்ஸும் சேர்த்து போட்டு செய்துபார்த்து சொல்றேன். கடைசிப்படம் வெகு அழகு! வாழ்த்துக்கள் லாவண்யா!

அன்புடன்
சுஸ்ரீ

முகப்பில் இப்படி அழகான படங்களை பார்த்தாலே நீங்க அல்லது வனிதாவாக இருக்கும்னு தெரியும். பார்ட்டிக்கு ஸ்டார்டெர்சாக குடுக்க நல்லா இருக்கும். கண்டிப்பாக ட்ரை பண்ணி பாக்குறேன், வாழ்த்துக்கள்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

லாவி, செய்முறையும், படங்களும் உடனே சாப்பிட தூண்டுது. கடைசிப்பட ப்ரெசெண்டேஷன் சூப்பர். இதை நம்ம ஊர் வஞ்சிர மீனில் ட்ரை பண்ணி பார்த்துடுவோம். எப்பன்னு கேட்டீங்கன்னா நீங்களே அலுதுடுவீங்க. அதனால அப்படியெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு தெரியும் ;) வாழ்த்துக்கள் லாவ்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வனி;)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி காயத்ரி :)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்வர்ணா :)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தீபா :) அப்படியெல்லாம் ஊற விடக்கூடாது. உடனே செய்து சாப்பிட வேண்டியது தானே ;)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஹலீமா :) குட்டீஸ்க்கு மட்டுமில்ல பேக் செய்தால் பெரியவர்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமானதும் சத்தானதும் கூட.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஷிபா. செய்துட்டு மறக்காம வந்து சொல்லிபோடனும் சரியா?

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுஜா. எப்படி கண்டுபிடிச்சீங்க? நான் இதை அனுப்பும் போதே நம்ப டெலிபதி வொர்கவுட் ஆயிருக்குமோன்னு நினைத்தே தான் அனுப்பினேன். ஒன்ஸ் இன் எ வயல் பொரித்தது சாப்பிடலாம். அட ஆமாங்க டயட் இருக்கும் போதுமே கூட.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அனுஷ்யா. அப்படியெல்லாம் சொல்லி என்னை பறக்க வெச்சி வனியை கேவலப்படுத்திடாதீங்க. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கல்பூ. நான் கேட்கவே மாட்டேன். அலுப்புக்காக இல்லை பாவம் நீங்களே எவ்வளவு வேலைக்கு நடுவில் பதிவும் போட்டு, குறிப்பையும் தந்து, பட்டியிலும் கலக்கி, பேக்கிங்கும் செய்து, கதையும் எழுதி, இந்த மாதிரி செய்யறேன்னு சொன்ன குறிப்பை எல்லாம் பட்டியலும் எடுத்து....ஐயோ சொல்லும்போதே எனக்கு மூச்சு வாங்குது. ஆனா விட மாட்டேன். செய்யறேன்னு சொன்னதையெல்லாம் ஊருக்கு போனதுக்கு அப்புறம் செய்து சொல்லியே ஆகணும். இது அன்புக் கட்டளை.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//......எப்படி கண்டுபிடிச்சீங்க? ...... ஒன்ஸ் இன் எ வயல் பொரித்தது சாப்பிடலாம். அட ஆமாங்க டயட் இருக்கும் போதுமே கூட. ....//

ஓஒ... அதுவா? எல்லாம் உங்க செர்விங் வேர், அந்த ஸ்கொயர் ஷேப்டு ப்ளேட்டை வைத்துதான்! ;)

அட, நீங்க வேற லாவண்யா, ஒன்ஸ் இன் எ வயல் என்று இல்லை, அதெல்லாம் அப்பப்ப செய்து நகர்த்திட்டுதான் இருக்கேன்! :) எதெதுல மாத்தி எண்ணெய் குறைக்க முடியுமோ, அதுவும் அப்பப்ப செய்துப்பார்ப்பேன்!! (பாருங்க... இதை எழுதும்போதே போன வெள்ளிக்கிழமை பால் பாயாசத்துடன் கூட, செய்து உள்ளே தள்ளிய சூப்பர் உளுந்து வடைகள் எல்லாம் நியாபகத்துக்கு வருது! :) :) ) ஓகே, இப்ப லன்ச்சுக்கு கிளம்பனும்! Bye... :)

அன்புடன்
சுஸ்ரீ

நேற்று ஃபிஷ் ஃபிங்கர்ஸ் செய்தேன். சுவை அபாரமா இருந்தது. செய்வதற்கும் ரொம்ப சுலபமாக இருந்தது. சுவையான குறிப்பிற்கு பாராட்டுக்கள்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

lavanya enna samayal kalai kattuthu pola