வடகறி

தேதி: April 20, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வடைக்கு:-
கடலைப்பருப்பு - 1 டம்ளர்,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு.
மசாலாவிற்கு:-
தக்காளி - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 4+1,
முழு பூண்டு - 2,
காய்ந்த மிளகாய் - 5,
பச்சை மிளகாய் - 5,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
கிராம்பு - 3,
ஏலக்காய் - 3,
தனியா - 1 மேசைக்கரண்டி,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி,
கொத்தமல்லி - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு.


 

வடை செய்யும் முறை:-
கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். (வடை அளவு மொறு மொறுப்பாக பொரிக்க வேண்டாம்.)
மசாலா செய்யும் முறை:-
1 வெங்காயம், இஞ்சி, 4 பல் பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, தனியா, பொட்டுக்கடலை, சீரகம் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
4 வெங்காயம், மீதி பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் அரைத்ததை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
மசாலா நன்கு வாசம் வந்ததும் அரைத்த தக்காளி, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
5 நிமிடம் கொதித்ததும் பொரித்த உருண்டைகளை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவவும்.


இட்லி, ஆப்பம், செட் தோசை போன்றவற்றுக்கு பொருந்தும். மசாலாவில் தண்ணீரை நிறைய சேர்த்தால் தான் வடை உறிஞ்சுவதற்கு சரியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாவ் இதுவும் நல்லாயிருக்கு..உங்களோடதையும்,சுபாவோட குறிப்பையும் சேர்த்து மிக்ஸ் பன்னி செய்தேன் ...செம அசத்தலா இருந்தது..நன்றி

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

செல்வீக்கா இங்க ரெஸ்டாரன்ட்டில் சாப்டது தேங்காய் பால் சேத்தது போல் தோனிச்சு அது தேங்காய இல்லை முந்திரியான்னும் தெரீல...அது தேவையில்லை தானே

ஹாய் ரூபி,
தேங்க்காய்ப் பால் சேர்க்க வேண்டியது இல்லை. திகட்டிடும், ஏற்கனவே வடையை எண்ணெயில் பொரிப்பதால். இப்படி செய்து பார். தோசைக்கே நல்லாயிருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரி செல்வி அவர்களுக்கு,

நலமா? உங்கள் வடகறியைப் படிக்கும் போதே சாப்பிட வேண்டும் போல ஆசையா இருக்கு. இட்லி கடையில் வாங்க வேண்டியது,வடகறி உங்களுடையது,வார இறுதியில் செய்து விட வேண்டியது தான்.எனக்கு பர்னிஷ்ட் வீடு என்பதால் வெயிங் மிஸினும் இருக்கு.எடுப்பதற்கும் சுலபம்,சுவையும் மாறாமல் வரும்.அதனால் எனக்கு முடிந்தால் கீழே உள்ளவற்றிற்கு கிராம் அளவு தாருங்களேன்.
வடைக்கு கொடுத்திருப்பதில் : கடலைப்பருப்பு,பெரிய வெங்காயம் போன்றவற்றிற்கு
அரைப்பதற்கு கொடுத்திருப்பதில்: பெரிய வெங்காயம்,இஞ்சி,பூடு போன்றவற்றிற்கு
நறுக்க கொடுத்திருப்பதில் : பெரிய வெங்காயம்,பூடு போன்றவற்றிற்கு.

குக்கிங் செக்ஸன் என்னுடையது,கட்டிங் செக்ஸன்(பூடு,வெங்காயம்) என் பிரெண்ட்ஸ் வேலை.சமையல் எங்களுக்கெல்லாம் ஒத்து வராது,நீ தான் சரியான ஆளென்று சொல்லிட்டாங்க.

நன்றி.
ஜோயல்

அன்பு சகோதரர் ஜோயலுக்கு,
நான் நலமே. ரொம்ப சுலபமா செய்யலாம் இந்த வடகறியை. எடை பார்த்து செய்யும் உங்கள் நேர்த்தியை பாராட்டுகிறேன். உங்களுக்கு அப்போதுதான் சரியான அளவு கிடைக்கும்.
கடலைப்பருப்பு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 50 கிராம்(வடைக்கு),
பெரிய வெங்காயம் - 250 கிராம் (இதில் சுமார் சைஸில் உள்ள ஒரு வெங்காயத்தை அரைக்க பயன் படுத்தவும்).
பூண்டு - 15 கிராம் (அதில் 4 பல் பூண்டை மட்டும் தனியாக எடுத்து அரைக்க பயன்படுத்தவும்).

சமையலில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பாராட்டத்தக்கது. உங்களுக்கு மனைவியாக வரப்போகிறவர் கொடுத்து வைத்தவர்(இனிதானே வரவேண்டும்?)
நான் தற்போது கொஞ்சம் பிசியாக இருப்பதாலும், நெட் பிரச்னையினாலும் பதிலளிக்க சிறிது தாமதம் ஆகலாம், பொறுத்துக் கொள்ளுங்கள். நான் தற்போது அறுசுவைக்கு வருவதே பார்வையிட மட்டுமே. கிடைக்கும் சிறிய பொழுதில் நன்றி சொல்லவும், சந்தேகத்திற்கு பதிலளிக்கவும் மட்டும் தான் முடிகிறது. உங்களுக்கான சில சுலப சமையல் குறிப்புகள் கைவசம் உள்ளது. கொடுப்பதற்கான நேரம் தான் இல்லை. விரைவில் தருகிறேன்.
இன்னும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
நல்ல முறையில் வடகறி செய்ய (சாப்பிட) வாழ்த்துக்கள் :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரி செல்வி அவர்களுக்கு,

உங்கள் நேரமின்மையிலும் ,டைம் ஒதுக்கி எனக்கு தெளிவான விளக்கம் அளித்தமைக்கும்,உடனே அனைவருக்கும் பதில் அளிக்கும் தங்கள் சின்சியாரிட்டிக்கும் மிக்க நன்றி.சமையலில் ஆர்வம் என்று சொல்வதை விட,அம்மா கையால் சுவைபட உணவுகளையே சாப்பிட்டு,தற்காலிகமாக அது மிஸ்ஸிங் என்பதால்,நாமளாகவே ட்ரை பண்ணுவோம் என்று தான்.வார நாட்களில் அலுவலக பிஸி என்பதால்,வெளி சாப்பாடு தான்.வார இறுதி நாட்களில் ப்ரீ - ஆக இருப்பதால்,ப்ரெண்ட்ஸ் உடன் ட்ரை பண்ணுவேன்.அதுவும் உங்கள் உதவி இருப்பதால் சுவையாகவும் சமைக்க முடிகிறது.அந்தப் பெருமை உங்களையே சாரும்.
தமிழ்நாட்டில் சிங்காரச் சென்னை.பணி ஸாப்ட்வேர் துறையில் ப்ரோகிராமராக.
இந்தியா போன்று இல்லாமல்,வெங்காயம்,பூடு எல்லாம் பெரிய அளவில் தான் கிடைக்கிறது.அதனால் 250 கிராம் ஆனியன் அளவில் அரைப்பதற்கு எவ்வளவு கிராம் பயன்படுத்த வேண்டும் என்றும்,15 கிராம் பூடு அளவில் அரைப்பதற்கு எவ்வளவு கிராம் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லவும்.இஞ்சி அளவு கேட்டிருந்தேன்.அதையும் முடிந்தால் சொல்லுங்கள்.வார இறுதியில் செய்து விட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்.உங்களின்
பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

ஜோயல்.

அன்பு சகோதரர் ஜோயல் (வித்தியாசமான பெயர்),
நலமா? தங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.
ஓ, சாரி. நான் இங்கு போல் நினைத்து விட்டேன்(நீங்கள் எந்த நாடுன்னு சொல்லலையே). உங்களுக்காக நான் வாங்கும் பழமுதிர் நிலையத்தில் ஒரு வெங்காயத்தையும், 4 பல் பூண்டையும் எடை போட சொல்ல, அந்த பெண் முறைத்த முறை இருக்கிறதே... நான் வழக்கம் போல அசடு வழிந்து, சிரித்து சமாளித்தேன்.
வெங்காயம் அரைக்க 25 லிருந்து 30 கிராம் வரை எடுக்கவும்.
பூண்டு 5 கிராம் எடுக்கவும்.
இஞ்சி 1 அங்குல நீளம் அல்லது 5 கிராம் அளவு போதும்.
விளக்கமாக இருக்கிறதா?
செய்து பார்த்து பதில் சொல்லுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரி செல்வி அவர்களுக்கு,

நலமா? ஜோயல் என்பது கிறிஸ்தவப் பெயர்.உங்கள் சுவையான வடகறி செய்தாச்சு.நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.அவ்வளவு சுவையாக இருந்தது.இட்லிக்கு வெகு பொருத்தம். ஜோயலுக்கு ஒரு 'ஓ போடுங்க' என்று சொல்லி பிரெண்ட்ஸ் சாப்பிட்டாங்க.அனைத்துப் பாராட்டும் உங்களையே சாரும்.உங்கள் உதவிக்கு நன்றி.என் பிரெண்ட்ஸ்-ம் உங்களிடம் தங்களது நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.
வெரி ஸாரி,நான் அளவுகள் கேட்டவுடன் உடனே உடனே நீங்கள் சொன்னதால்,உங்கள் வீட்டில் வெயிங் மிஷின் இருக்குன்னு நினைத்துட்டோம்.மிகவும் சிரத்தை எடுத்திருக்கிறீர்கள்,எங்களுக்கு உதவுவதற்கு.மிகவும் சாரி.இனி நான் கேட்கும் விளக்கங்களுக்கு,உங்களால் முடிந்ததை மட்டும் கூறவும்.ரிஸ்க் எடுக்க வேண்டாம்,ப்ளீஸ்.அடுத்த வார இறுதியில் செட் தோசை செய்ய விருப்பம்.தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் தாருங்கள்.

மீண்டும் நன்றியுடன்,
ஜோயல்

அன்பு சகோதரர் ஜோயல்,
நலம். தாங்கள் நலமா? கிறிஸ்தவ பெயர் என்பதை அறிந்தேன். அதிலும் வித்தியாசமாக இருக்கவே கேட்டேன். (பைபிளில் வரும் பெயரா?)
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் நண்பர்கள் ஓ போட்டதில் தப்பே இல்லை. அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து பர்ஃபெக்டாக செய்தீர்கள். குறிப்பு சொன்னாலும் சொதப்பாமல் அழகாக அதை செய்ய வேண்டுமே:-)

எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை ஜோயல், குறிப்பில் சந்தேகம் வரும் போது தீர்க்க வேண்டுவது எனது கடமை இல்லையா? நிறைய அளவுகளை நிதானத்திலேயே சொல்வேன். சரியாக இருக்கும். சிலது சந்தேகத்திற்கு சரி பார்த்துக் கொள்வேன். கடைக்கு போனால் கூட, ஒரு கிலோ தக்காளி வாங்கணும்னா, நான் எடுத்து கொடுப்பதை வெயிட் பார்த்தால் சரியாக இருக்கும். சில இடங்களில் நான் கொடுப்பதில் குறைத்தால் வெயிட்டில் ஏமாற்றுகிறார்கள் என வாங்க மாட்டேன் (அந்த அளவு என் கணிப்பில் நம்பிக்கை:-))
மேலும் நான் வழக்கமாக வாங்கும் கடை என்பதால், தெரிந்த பெண் தான் அங்கு இருக்கும். என்ன, இதற்கு பதிலாக அந்த பெண்ணிற்கு ஏதாவது குறிப்பு சொல்லி விட்டு வருவேன். மீண்டும் நன்றி ஜோயல்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ரேணுகா அவர்கள் தயாரித்த வடகறியின் படம்

<img src="files/pictures/vadacurry.jpg" alt="picture" />

அன்பு ரேணு,
வடகறி சூப்பர்! இப்படி ஆளாளுக்கு படமெடுத்து போட்டு, ஆசையை கிளப்பறீங்களே:-(
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.