மட்டன் பிரியாணி

தேதி: May 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

ஊற வைக்க :
மட்டன் - அரை கிலோ
தயிர் - ஒரு கப்
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
மல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - சிறிது
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா, மல்லி தழை - ஒரு கைப்பிடி
வாசனை பொருட்கள் :
பட்டை - 3
கிராம்பு - 4
ஏலக்காய் - ஒன்று
பிரியாணி இலை - 3
முந்திரி - 5
வதக்க :
பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2
புதினா மல்லி தழை - ஒரு கைப்பிடி
மல்லி, மிளகாய், மஞ்சள், கரம் பொடி - தலா அரை தேக்கரண்டி
நெய் மற்றும் எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், மல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊற வைக்க தேவையான பொருட்களை கறியுடன் நன்கு கலந்து அரை மணி நேரம் மேரினேட் செய்யவும்.
பின் குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு பட்டை, இரண்டு கிராம்புகளை போட்டு, சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கி கறியை போட்டு 5 விசில்கள் வந்ததும் இறக்கவும்.
பின் ஒரு கடாயில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வாசனை பொருட்களை சேர்த்து பொரிந்ததும், பச்சை மிளகாய் மற்றும் சிறிது புதினா, மல்லி தழைகளை போட்டு வதக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு குழையும்படி வதக்கி பொடி வகைகளை சேர்க்கவும்.
ஒன்று சேர நன்கு வதங்கியதும், குக்கரில் இருக்கும் கறியை சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
பின் எலக்ட்ரிக் அடுப்பில் தேவையான நீர் சேர்த்து வைக்கவும். பிரஷர் குக்கரில் வைப்பவர்கள் கறியுடன் தாளித்து அரிசி சேர்த்து தேவையான நீருடன் வைக்கவும்.
அரை மணி நேரத்தில் மணமான பிரியாணி ரெடி
பத்து நிமிடம் கழித்து சிறிது நெய் சேர்த்து ஒன்று சேர பிரட்டி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யாக்கா மட்டன் பிரியாணி பார்க்கவே நாக்கில் எச்சில் ஊறூது. படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.

கடைசி படத்தில் பாஸ்மதி அரிசி அப்படியே நல்லா தெளிவா இருக்குது ரம்யா
ம்ம் எனக்கே எனக்கு தானே அது

ரம்யா வாவ் அப்படியே சாப்பிடலாம் போல் இருக்கு, மாஷாஅல்லாஹ் ,ப்ரெஷர் குக்கரில் போட்டால் எத்தனை விசிலில் இஅறக்க வேண்டும், நான் தனியே சோறு மட்டும் சமைக்கும் போது 3விசிலில் இறக்கினால் உதிரியா அழகா வரும். பாஸ்மதி அரிசிக்கும் அப்படி உதிரியா வருமா? அதிக தடவை பாஸ்மதி அரிசி குழைந்து போய் விடும்.தயவு செய்து சொல்லவும் நாளை சமைத்துப் பார்க்கலாம்னு இருக்கேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ரம்யா மட்டன் பிரியாணி சூப்பர். பார்க்கவே அவ்வளவு அழகா இருக்குது, சாப்பிடா கேட்க்கவா வேணும்.படங்கள் எல்லாம் அருமை. இந்த வாரமே செய்து அசத்த வேண்டியது தான். அருமையான குறிப்பு தந்த ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி ;)

நசீம்

ரொம்ப நன்றி :)

நிகிலா

ரொம்ப நன்றி டா. செய்து பாருங்க ;)

பூங்காற்று.

நான் செய்து இருப்பது எலக்ட்ரிக் குக்கர்.எல்லாம் ஆனா பின் தான் அது விசிலே கொடுக்கும்.

பாஸ்மதி கொஞ்ச நேரம் இருந்தாலே வெந்திடும்.மேலும் இறக்கி வைத்தாலும், சூட்டிற்கு குழைந்துவிடும்.

நீங்க கறியை நல்லா வேக வைத்து, பாஸ்மதியை போட்டு கொஞ்சம் நேரம் கறியுடன் கிளறிட்டே இருங்க. ஒரு 10 நிமிடம் கழித்து, குக்கரை முடி 10 நிமிடம் சிம்மில் வைத்தாலே போதும்.. எடுத்து பார்த்து இன்னும் கொஞ்ச நேரம் வேக வேண்டுமெனில் கிளறி இன்னும் ஒரு ஐந்து நிமிடம் சிம்மில் வைங்க. செய்துட்டு சொல்லுங்க.

சிபா

ரொம்ப நன்றி பா.. அவசியம் செய்து பார்த்து பதிவு போடுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்மி நீங்க மட்டுமே எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருந்திருக்க கூடாதா? அப்படியே அந்த ப்ளேட்டோட எனக்கு கொடுங்க :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் ரம்யா நல்லா இருக்கீங்களா பேசி ரொம்ப நாள் ஆச்சி பிரியாணி பார்க்க சூப்பர்ரா இருக்கு அப்புறம் அறுசுவை தோழி அனைவர்க்கும் ஒரு சந்தோசமான செய்தி எனக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு இரண்டு மாதம் ஆகுது ரொம்ப லேட்டா சொல்லுறேன்பா அறுசுவைக்கு வரவே முடியல

ரம்யா நேற்று மட்டன் பிரியாணி செய்தேன். சுவை அபாரம் என்ற பாராட்டைப் பெற்றேன். வாழ்த்துக்கள் சுவையான குறிப்பை தந்ததற்கு.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ஹாய் ரம்யா உங்க மட்டன் பிரியாணி செய்தேன் நன்றாக இருந்தது

suuuuperrrr....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா