இறால் வறுவல்

தேதி: May 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

இறால் - 15
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
இஞ்சி&பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது கசக்கியது

குத்தி வைக்க
=============
பச்சை தென்னங்குச்சி - 1 இறால் அளவுக்கு பார்த்து ஒரு குச்சியை பல துண்டுகளாக ஒடித்து வைக்கலாம்


 

முதலில் இறாலில் உப்பு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது,கறிவேப்பிலை சேர்த்து 1 மணிநேரம் ஊற வைக்கவும்
பின்பு நல்ல சுத்தமான பச்சை தென்னங்குச்சியை ஒடித்து சீவி சிறு துண்டுகளாக்கி இறாலில் வாலிலிருந்து தலைவரை நீளமாக சொருகவும்
பின்பு எண்ணையில் குச்சியோடு சேர்த்தே வறுத்து எடுக்கவும்


மிகவும் சுவையாக இருக்கும்.தென்னங்குச்சி சேர்ப்பதால் சுருளாது நீளமாகவே வறுத்து எடுக்கலாம்.மட்டுமல்லாது பரிமாறவும் அதிகப்படியாக தெரியும்..விருப்பம் போல் ஒவ்வொரு குச்சியிலும் பச்சை மிள்காயை உடன் சொறுகி வறுக்கலாம்.காரம் விரும்புபவர்களுக்கு பிடிக்கும்..இது அக்கால முறைப்படி இன்று டூத் பிக்ஸ் குத்தியும் வறுக்கிறார்கள்

மேலும் சில குறிப்புகள்


Comments

ARUMAYANA OLD SAMAYAL

மிக்க நன்றி திவாகரன் சார்.ரொம்ப சந்தோஷம்

very easy to make its taste good

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram