பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

எத்தனையோ பேர் இன்ற காதலித்து திருமணமும் ஆகி சந்தோஷமாக வாழ்கிறார்கள் காரணம் அவர்களுக்குள் இருக்கும் புரித மட்டுமே . இதே முன் பின் தெரியாத ஒருவரை காதலித்து மன வாழ்கைக்கு பின் நாடாகும் சிறு சிறு சண்டைகளில் குட அவளோ, இல்லை அவரோ பேசும் மிக அழுத்தமான வார்த்தை என்னவென்றால் உன்னை பற்றி முன்பே தெரிந்து ஒருந்தால் உன்னை காதலிச்சு இருக்கவே மாட்டேன் என்பது தான். அனால் நட்பாக இருந்த இருவர் காதல் வாழ்கையில் இணையும் போது அவர்களுக்குள் வரும் சண்டைகலில் கூட புரிதல் இருக்கும் நட்பாக பழகிய காலத்திலே ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து கொண்டு இருப்பதால் பிடித்தது பிடிக்காதது என்று அனைத்தையும் தெரிந்து வைத்து கூடுமானவரை பிரச்சனைகள் வராமல் சந்தூசக வழ முடிகிறது எனவே நண்பர்கள் நிச்சயமாக காதலர்களாக மாறலாம் என்பதே எண் கருத்து. தங்களின் ஆழமான தலைப்புக்கு நன்றி ..............

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

I tried my level best to type in tamil but mudiyala athan sorry. eppa matter ku varean kandipa friends lover ya mara kudathu yeana friends na entha expectation yum illama namma manasula irukurathu ellam share pannipom ayioo avanga eppadi yeaduthupanganu namma yosika vendam but avanga lovers ya irunthu marriage nu aaita evalu relations varum ellam athula kandipa problem mum varum apaa nama mansula neanikirathu free ya solla mudiyathu antha freedom poidum husband ku enna than irunthalum wife nu oru superior feeling vanthurum aana friend kula athu ellam kidayathu.. poda wait pannuda na solratha first kealu aparm sollu nu nama friend kita sollalam atheye husband kita solla mudiyuma and ellathukum mela friendship nejama oru periya visayam atha kadhal nu solli namma oru chinna vatathukula adika vendam and last ya enga neriya peruku college la school la pasanga friend ya irunthu irupanga avanga kita namma kandipa manasu vitu peasi irupom athu ellam namma husband kita peasa mudiyathu eathu ellarukum theriyum so pls naduvar avarlage friends friend ya irunthathan nallu thu

மாலை ரோஜாப்பூ மாலையா ரொம்ப அழகா இருக்கு. மனமாகவும் இருக்கு. டாங்க்ஸ். மரியாதை பார்த்து தான் கொஞ்சம் பயமா இருக்கு. இருந்தாலும் கோடைக்கு குளிர்ச்சியா தான் இருக்கு.

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க......எனக்கும் அப்படி தாங்க இருக்கு. எப்படியும் யோசிச்சி ஒரு அணியை தேர்ந்தெடுத்து வந்து மத்தவங்களை மிரட்ட வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மதிய வணக்கம். என்னங்க நீங்க என் குழப்பத்தை தெளிவு பண்ணுவீங்கன்னு பார்த்தா விசு ரேஞ்சுக்கு மேலும் குழப்புறீங்களே? // காதல் நட்பாக மாறுவதுதான் தவறு // அதான் ஏன்னு கேக்குறேன்? வந்து தெளிவு படுத்திட்டு போயிடுங்க பார்ப்போம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அட யாருப்பா இது......என்ன இந்தியாவில் ஊரடங்கு உத்திரவா? சுகி அதுவும் பட்டியில்.....சரி வாங்க வாங்க. நல்லதொரு விறுவிறுப்பான தலைப்பை கொடுத்து எல்லா குழப்பத்துக்கும் காரணகர்த்தாவே வருக.

இப்போ தான் இந்த பணியை எடுத்திருக்கேன். ஒரு கோர்ஸ் முடியட்டும் அப்புறம் வந்து சொல்லுங்க....சரியா?

நீங்களும் மாறலாம் அணியா? சரியா போச்சு. வாங்க வாங்க சீக்கிரம் வாதங்களுடன் அப்படியே உண்மையுடனும் வாங்க ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப டாங்க்ஸ்....

நீங்களும் மாறலாம் அணியா? ஒருவேளை நீங்க சொன்ன சரியா தானே இருக்கும். அனுபவசாலி ;)

இதை தாங்க நான் கேக்குறேன். நண்பர்களாக இருக்கும் போது உண்மையாக நடந்துக் கொள்வார்கள் என்று சொல்லியிருக்கீங்க. அப்புறம் ஏங்க இந்த காதலில் பொய் தான் அழகுன்னு சொல்ராங்க? அப்போ அது உண்மையில்லையா?

என்னங்க எல்லோரும் இதையே சொல்றீங்க //காதலர்கள் தான் நண்பர்களா மாறினா.. அபத்தம்..// எதிரணி எங்கே?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாங்க இளவரசி வாங்க....வாங்க நீங்களும் மாறலாம் கட்சியா?

வனி அதிரணியை பலபடுத்த எதாவது முயற்சி செய்யனும் போலிருக்கே!

நண்பர்கள் காதலர்களானால் ஒளிவு மறைவு இருக்காதுன்னு சொல்றாங்க, கண்டதும் காதல் என்றால் அதிலே ஒரு போலித்தனம் இருக்கும் என்று சொல்றாங்க....எனக்கும் அப்படி தான்னு தோணுது. என்ன எதிரணி சரின்னு சொல்லிடலாமா?

அட எனர்ஜிக்கு ஒரு புதிய பரிமாணமே கொடுத்திருக்கீங்க. சபாஷ்.

//
நட்பு- இன்டெலக்சுவல்

காதல்-எமோஷனல்// ஆஹா ஆஹா திரும்ப திரும்ப படிக்கிறேன்..

//எல்லா நண்பர்களுக்குள்ளும் காதல் பூப்பதில்லை// எங்கே இடிக்கற மாதிரி இருக்கே.

அருமையான வாதம். கொஞ்சமே தெளிவான மாதிரி இருக்கு. இப்படியே போச்சுனா தீர்ப்பு உங்க பக்கம் தான். பதிலடி கொடுக்க யாராவது இருக்கீங்களாப்பா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்களும் மாறலாம் பக்கமா? குட் குட்.

என்னெங்க இப்படி சொல்லிட்டீங்க. இவங்க இப்படி சண்டை போட்டா அவங்க " உன்னை பத்தி எல்லாம் தெரிந்திருந்தும் உன்னை போய் நான் கட்டிகிட்டேனே" நு சொல்லுவாங்க. வீட்டுக்கு வீடு வாசப்படி தானுங்களே!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

-

மன்னிக்கவும். பட்டிமன்ற விதிமுறைகளில் ஒன்று தான் தமிழில் உள்ள பதிவுகளை மட்டுமே வாதத்திற்கு ஏத்துக் கொள்ளப் படும். அதனால் நீங்கள் தமிழில் பதிவிடவும். நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்