பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

கணவன் மனைவிக்குள் உள்ள காதல் இயல்பு சரி இதுல நம்ம ரெண்டுபேரும் ஒரு கட்சி விட்டுடலாம்

திருமணத்துக்குமுன் காதலே வரலயா…சரிங்க நல்லவிஷயம்தான்..
ஒருவேளை வந்துட்டா அப்போ அந்த காதல் சரியா? தவறா?

திருமணத்துக்கு முன்னால காதலே தவறுன்னா நம்ம இத விட்டுட்டு வேற தலைப்புக்கு போயிடலாம்..

சரின்னா..எந்த காதல் சரி?

காதல்ன்ற உணர்வு இயல்புதான் அது தவறில்லைன்ற எண்ணம் எங்களுக்கு இருக்கு அது உங்களுக்கும் இருந்தா நம்ம ஓரே கட்சி தொடர்ந்து பேசலாம்..

இப்ப காதல் தவறில்லைன்னா…எந்தெந்த காதல் தவறில்லைன்னு எதிரணி
சொல்லுங்க பார்ப்போம்
எல்லா நட்புக்குள்ளும் காதல் வராது உதாரணத்துக்கு

திருமணமான ஆண்/பெண்,பிற திருமணமான/ஆகாத ஆண்/பெண் இவர்களுக்குள்ள நட்பு மட்டும்தான் இருக்கமுடியும் அது தவிர்த்து காதல் வரவே வராது..

திருமணத்துக்கு நிச்சயம்பண்ணிட்டு கல்யாணத்துக்கு காத்திருக்கும் ஆண்,பெண்ணுக்குள்ள காதல் சரின்னு சொல்றீங்களா… ?

ஒகே சரிதான்

திடீர்ன்னு மின்னல் மாதிரி ஒரு ஆண்/பெண் பார்த்தவுடன் இதுதான் போன ஜென்ம உறவுன்றமாதிரி கிட்டதட்ட காதலுக்கு மரியாதை மாதிரி காதல் சரின்னா

ஓகே அதுவும் சரிதானுங்கோ..

வேற எப்படி காதல் சரி?உறவுகளுக்குள் காதல்…. சரியா?ஓகே

புதிதாக முளைத்த பக்கத்துவீட்டு ,எதிர்வீட்டு ஆண்/பெண் காதல் சரியா?
ஓகே…

இதெல்லாமே மேலே உள்ள எல்லா காதலும் சரியாத்தான் இருக்குமின்னு நம்பறோம்..ஏத்துக்கிறோம்….ஆனா நட்பின் முடிவில் காதல் வந்தால் ஏத்துக்கமாட்டோமின்னா எப்படி..??

நட்பு + நூலிழை -காதல்
.
நட்பு கடைசிவரை துணைவரக்கூடாதான்றது எதிரணிகேள்வி…

ஆழமான ஒரு நட்பு அப்படி துணை வந்தா ,அது புதுவசந்தம் கதை மாதிரி ஆகும்..

ஆனா அது சினிமா அதனால நட்புதான் முக்கியம் ன்னு காதல தூக்கி போட்டு போகலாம்..நிஜ வாழ்க்கையில் நட்ப தான் தூக்கிபோடுவோம்.வேற வழியில்லாமல்
…ஆனால் ஒரு நட்ப வேறு வழியில்லாமல் ஒரு முகம் தெரியாவரப்போகும் புது உறவு வந்து அதற்காக தூக்கிபோடமுடியாதுன்னு தோணும்போது அந்த நட்போடு அந்த நூலிழை சேர்ந்து போகிறது…

இது எப்பவும் நடக்குதுன்னும், நடக்கணுமின்னும் நாங்க சொல்லவேயில்லங்க..ஆனா எப்பவாச்சும் நடந்தா அது கொலை,குற்றம் இல்லை..

//நட்பு எப்படி காதலாகும்?// அடடா இங்க ஆகணுமின்னோ /ஆகலேன்னோ

யாரும் தர்க்கம் பண்ணலைங்கோ..

:)
ஆனா ஆகிடகூடாதுன்னும்..ஆகவே ஆகாதுன்னும்.. நீங்கதான் தர்க்கம் பண்றீங்கோ...

ஒரு தருணத்தில் நட்பின் பிரிவு பொறுக்க முடியாத வலியை கொடுத்தால்

அதுவும் காதல்தான்... இயல்புன்னு அக்ரீ பண்ணுங்கோ :)

அதை விட்டுட்டு காதலுக்கு சமாதி கட்டி அதன்மேல் நட்புக்கு கோட்டை

கட்டாதீங்கோ :(

காதலில் நட்புணர்வு இல்லன்னாலோ,இருந்து தொலைந்துபோனாலோ அது

வெறும் எமோஷனல் எவாப்ரேஷனாக காணாமல் போகிடும் சீக்கிரமே..

ஒரு நட்பின் முடிவில் காதல் பூத்தால் அது உதிர்வதேயில்லை.தவறுமில்லை

நண்பர்கள் நண்பர்களாகவே இருக்கணும்னு தான் எல்லாருக்கும் ஆசை..அப்படி

நட்பாவே எல்லாரும் இருந்துட்டா இந்த தலைப்பு ஏன் வருது?

ஏன்னா எல்லா நேரமும்,எல்லாருக்கும் நட்பா இருக்கவங்க நட்பாவே இருக்கறது இல்லன்றது உண்மை..அது தவறில்லை..

நட்பு இயல்பு.. காதல் இயல்பு ..நட்பின் முடிவில் காதல் வந்தாலும்

இயல்புதான்

//நட்பு நிலைக்கட்டும்// கண்டிப்பாக...நிலைக்கட்டும்..

ஆனால் .நட்பின் முடிவில் ஒருவேளை காதல் வந்தாலும் துண்டிக்காமல் அது தொடரட்டும் வாழ்நாள் முழுதும்..நட்போடுகூட...

ஏன்னா நட்பின் அங்கமாய் காதல் இருக்கவேண்டியதில்லை..

..ஆனால் காதலின் அங்கமாய் நட்புணர்வு வேண்டும்

1.நட்பு ------>நட்பு ----> சரி

2..நட்பு + எமோஷனல் நூலிழை -> காதல்------>சரி

3.வெறும் எமோஷனல் நூலிழை ->காதல்..........>சரிவராது

(இதுல கண்டதும் காதல்,பிள்ளைகள் விருப்பம் அறியாமல் செய்யப்படும் திருமண காதல்,பக்குவமில்லா வயதில் இன்பாக்சுவேஷன் வந்து ஓடிப்போய் திருமணம் செய்யும் காதல் எல்லாம் அடங்கும்)

4.எமோஷனல் நூலிழை + நட்பு -......>காதல்----சரி(அரேஞ்சுடு மேரேஜ்ல வரும் காதல்..அதாவது முதல்ல எமோஷனல் நூலிழை அப்புறம்தான் நட்பு..)

2லும், 4லும் இரண்டு உணர்வும் இருக்கு..ஆனா ஆர்டர்தான் மாறியிருக்கு...நூலிழையில் தொடங்கி நட்பில் வாழும் காதல்(ஆசை அடங்கியவுடன் தம்பதிக்குள் கடைசியாய் மிச்சமிருப்பது நட்புதானே) சரின்னா நட்பில் தொடங்கி நூலிழையில் இணைந்து வாழும் காதலும் சரிதானுங்கோ..

இந்த நூலிழை என்பது உண்மையில் பசி,தாகம்,தூக்கம் போல ஒரு தேவை..அவ்வளவே..நூலிழையை மட்டும் வச்சு தொங்கிட்டு இருக்கமுடியாது அதோடு நட்புணர்வு சேர்ந்தாதான் மகிழ்ச்சி..இல்லேன்னா வெறுமைதாங்க..

அதிர்ஷடவசமாய் இந்த நூலிழையோடு கூட நட்புணர்வு சேர்ந்தா அது சுவாரஸ்யமான தம்பதி காதல்..அது சரி...

நூலிழையோடு நட்பு சேர்ந்தா சரியா இருக்குன்னா நட்போடு நூலிழை சேராவிட்டாலும் சரிதான்..சேர்ந்தாலும் சரிதான் பாதகமில்லைங்க

இன்று ஒரு நட்பின் முடிவில் வரும் காதலை இயல்பாய் ஏற்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் ....இதுகூட சரிதான் என நினைப்பதால்தான்...

நடைமுறை உதாரணங்கள் எத்தனை சொல்ல எத்தனை விட..

நீங்களும் வெல்லலாமில வர்ற பாதிபிரபலங்கள்,நடுத்தர வயதுள்ள தம்பதிகள் எல்லரும் பெரும்பாலும் காதலித்து திரும்ணம் பண்ணியவர்களாக இருக்காங்க ...அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கிறோம்தானே தினம்..

நாங்கள்எல்லாரும் சின்னவயதில் ஒன்றாய் படித்து பழகியவர்கள் வளர்ந்தபின் ஒரு கட்டத்தில் காதலாய் மாறி திருமணம் ஆச்சுன்னும்,கல்லூரியில் அல்லது வேலைபார்க்கும்போது நட்பாக பழகி காதல் திருமணம் ஆச்சுன்னும் அது தவறில்லைன்னு நினைப்பதால்தான் சபையில் சொல்றாங்க...

அதை கேட்கும் நம்மில் பலர் சகஜமாய் கேட்டு புன்னகைப்போமே தவிர அட என்ன இது நட்பா பழகிட்டு காதலாகி கல்யாணமின்னு சொல்றது கேக்க சகிக்கலன்னு காதை மூடிக்கொள்வதில்லை...ஏன்னா அது தவறில்லைன்றது பொது அபிப்பிராயம்தாங்க..
.
நான் வேலை பார்த்த சூழலில் ஒரு சில பெண்கள் மட்டுமே முற்றிலும் ஆண்கள்தான் அதிக எண்ணிக்கை அதனால் எனக்கு பெண்களைவிட ஆண் நட்பு வட்டம் அதிகமுங்க...ஆனால் காதல் வரும் வயதில் கூட நேரில் பார்த்து பழகிய எந்த நட்பும் காதலாய் மாறவில்லை..இன்றுவரை நல்ல நட்பாய் மட்டுமே இருக்கு ..என்றும் அப்படித்தான்அதுக்காக நான் எல்லாருக்கும் அப்படி பழகும் நட்புவட்டம் காதலாய் மாறக்கூடாதுன்னோ..மாறாதுன்னோ நினைக்கலைங்க..

எனக்கு அந்த அனுபவம் வரலன்ற ஒரே காரணத்திற்காய் யாருக்கும் அப்படி வரக்கூடாதுன்னும்,வராதுன்னும் அது தவறுன்னும் நான் முடிவு பண்ண முடியாதில்லைங்களா..

காதலுக்கு பல பரிணாமம்..அதில் இதுவும் ஒன்று...அது சரிதான்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அப்போ பெண் பார்க்கும் படலத்திற்கு இது தான் உண்மையான காரணமா? இது தெரியாம யாருப்பா அது வெறும் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட மட்டுமே போறது?

நண்பர்களாய் இருந்து காதலர்களாய் மாறி பின்பு நீங்க சொல்கிற மாதிரி குத்தி காண்பிக்கும் சீன என் நெருங்கிய தோழியின் வாழ்வில் நடந்திருக்கிறது. அந்த சுதந்திர மாட்டரும் தான். ரொம்பவும் வேதனையான விஷயம் தான். எடுத்துக்காட்டை லபக்குனு புடுசிக்கிட்டேன்.

எத்தனை வீடுகளில் இதை கேட்டிருப்போம் " கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க ரொம்பவே மாறிட்டீங்க. காதலிக்கும் போது இருந்த மாதிரியே இல்லை".

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தண்ணீரா இவ்வளவு நேரம் ஊத்தினேன்......எண்ணைன்னு இல்ல நினச்சேன். (இதை வடிவேல் வாய்சில் படிக்கவும்!)

காதலில் தான் நட்பு பலப்ப்படுமாமே......யாருப்பா அது காதல் உண்டானவுடன் அது கானல் நீராக மறையும்னு சொன்னது.

//நட்பை நேசிக்கிறேன் !!
நிலைக்கும் நட்பை காதலிக்கிறான் !!
நட்பு உன் மீது ! காதல் உன் நட்பின் மீது … !!!//

எப்படி பார்த்தாலும் நட்பு தானே இங்கே நிலைத்து நிற்கிறது. ஒருவேளை சரியா தன் சொல்றாங்களோ?

//எத்தனை உறவுகள் இருந்தாலும் நாம யாரோ ஒரே ஒரு மனுஷனை தானே வாழ்க்கை துணையாக கை பிடிக்கிறோம்// சட்டத்துலே இடம் இல்லையே அதானாலோ என்னவோ ;)

// தோழமையுடன் தானே பழக ஆசை படுவீங்க.// அதெல்லாம் இல்லீங்க. ஃபோனுக்கு வாய் இருந்தால் கதறி அழும் :)

எனக்கெனவோ இந்த விட்டுக் கொடுத்தல் நண்பராய் இருந்து பிறகு புரிந்துக் கொண்டு கல்யாணம் செய்துக் கொள்வதால் மட்டுமே வரும் என்று தோன்றவில்லை. இதை நான் பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணங்களிலும் நிறையவே பார்த்திருக்கிறேன்.

//நட்பினுள் பூக்கும் அழகான காதல் - தவறேதும் இல்லை// ஆணித்தரமாக சொல்லிட்டு போயிருக்காங்க. பார்ப்போம் பாப்போம் இதற்க்கு எதிரணி என்ன பதில்/கவிதை சொல்றாங்கன்னு.

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாங்க வாங்க ப்ரியாஅரசு. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஒரு வழியாய் எந்த பக்கம்னு தீர்மானமும் பண்ணிட்டீங்களா? சரி சரி நீங்க கூடாது அணியா? ரொம்ப சந்தோஷம்.

இவங்களை பார்த்து நாமளும் அப்படி செய்யலாம்னு செய்தா அப்போ அது "தங்க முட்டை வாத்து" கதையா இல்ல போயிடும்.

// காதலுக்கு இடம் கொடுக்காத நல்ல நட்புகள் கூட சந்தேகத்திற்கு இடமான வகையில் அமைந்துவிடுகிறது // அப்படியெல்லாம் கூட நடக்குதுங்களா? நாம சும்மா இருந்தா கூட நம்மளை சும்மா இருக்க விட மட்டங்க போல.

இப்போ சொல்லலைனா நீங்க விட மாட்டீங்க போல....இருங்க என் சார்பா எதிரணி சொல்லுவாங்க. கேட்டு வாங்கி சொல்றேன்.

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாங்க சீதாலக்ஷ்மி நீங்களும் கூடாது அணியா. பட்டியின் ஜோதி இப்பம் தான் கொழுந்து விட்டு எரியுது.

ஏன் இருக்காது? என்ன ஒரு வில்லத்தனம். என்ன சிரிப்பு என்ன சிரிப்புனேன்.....சின்ன புள்ளை தனமா இல்ல இருக்கு (இது யார் வாய்ஸ்ல படிக்கணும்னு உங்களுக்கு நான் சொல்லிய கொடுக்கணும்). பொற்கிழி எல்லாம் இந்த காலத்தில் நமக்கு கட்டுபடியாகுமா வாத்தியாரே......பெட்ரோல் தரேன். வாங்க வாதத்துடன்.

வாய்ப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி.

இப்போ கூட ஆண் பெண் படிக்கும் சில கல்லூரிகளிலும் அந்த மாதிரியான கட்டுபாடுகள் இருக்க தானே செய்கிறது. அதற்க்கு தானே அவர்கள் சொல்கிறார்கள் // ப்ரேக் த ரூல்ஸ்//

//கால மாற்றத்தினால் கிடைத்திருக்கும் மாபெரும் பரிசு - ஆண் பெண் நட்பு. அதை வாழ விடுங்கள்!// இந்த வரியை திரும்ப திரும்ப படிக்கிறேன். யாராவது பரிசை வேண்டாம்னு சொல்லுவாங்களா சொல்லுங்க? பரிசு எனக்கே எனக்கு.

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//அதே போல நட்பும் ஒரு உறவு... நிச்சயம் நிரப்ப படாதா வெற்றிடம் இல்லை நட்பு நடுவரே// ஆமாம்ல....அதான் சொல்லிட்டாங்களே நட்ப்பென்பதே ஒரு மிக சிறந்த உறவு அதை ஏன் மாத்தனும்? அத்தையை சித்தியாக்க முடியுமா சொல்லுங்க.

//அம்மா கூட பிறந்த உறவு மட்டும் எப்படி வேற மாதிரி???// அட இதை பத்தி நான் யோசிக்கவேயில்லையே. நான் கூட ஏதோ மருத்துவ ரீதியா தான் இப்பொழுதெல்லாம் அப்படி கல்யாணம் பண்ணிக்கிரதில்லைன்னு நினைச்சேன்.

//என் நண்பர் என்னிடம் பழகும் விதம் வேறு... ஆனால் அவர் தன் மனைவியிடம் பழகும் விதம் வேறு.// நண்பனையே கணவனாக்கிட்டா???

எங்கைங்க இப்போ தான் எல்லோருமே கணவனின் பெற்றவர்களை அம்மா அப்பா என்றில்லை அழைக்கிறார்கள்?

//நட்பு காதலாகும் போது இனிக்க தான் செய்யும் என்பது அர்த்தமில்லாதது// ரொம்ப கரெக்ட்.

யாருப்பா அது பட்டி இழையை உள்ளே தள்ளினது? என்ன செய்யறது வனி நீங்கெல்லாம் இருக்கிற தைரியதுள்ள தான் நாங்கெல்லாம் நடுவர் பொருப்பேத்துள்ளோம். பாருங்க உங்களுக்கு நடுநிசி எனக்கு இங்கே சூரியன் பல்லை இளிக்கிறான்.

பொறுமையா ரெஸ்ட் எடுத்துட்டு முடியும் போது மீண்டும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க சரின்னு சொன்ன சரி, தப்புன்னு சொன்ன தப்பு, சரி தப்பாகாது தப்பு சரியாகாது. சரி தானே?

ஆனாலும் திருமணத்துக்கு முன் யாருக்கும் யாருக்கும் வரும் காதல் சரியா இல்லை தப்பான்னு நீங்க கேக்குறீங்க? உனக்கு அவன் அவனுக்கு நீ என்று சொல்லி தானே பெற்றோரே நம்பர் வாங்கி தராங்கலாமே?

//நட்பு + நூலிழை -காதல்// ரசித்து ரசித்து படிக்கிறேன். ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து இருக்கு இந்த கூட்டல் வாய்ப்பாட்டில்.

எதிர்கட்சியினரே இப்படி காதலுக்கு சமாதி கட்டி நடப்புக்கு கோட்டை கட்டி என்னத்தை சாதிக்க போறீங்க? இதை நான் இல்லவே இல்லை மாறலாம் கட்சியினர் கேட்கிறார்கள்?

இப்பெல்லாம் யாருங்க நான் இவளை காதலிக்கிறேன் அப்படின்னு போய் பெற்றோரிடம் சொல்கிறார்கள். அதற்க்கு முன்னமே திருமணத்தை ரிஜிஸ்டர் செய்து விட்டு தானே காதலையே சொல்கிறார்கள். பெற்றோர்கள் ஒத்துக் கொண்டால் தடபுடலாக கல்யாணம் இல்லையென்றால் அப்படியே ஒன்றாக வாழ்கிறார்கள். இது தானுங்க இப்பெல்லாம் நடக்குது? பெற்றோரும் செலவும் மிச்சம்னு கப்சிப்ப்னு இருக்கிறதா கேள்வி...கேள்வி மட்டும் தாங்க....இதை நானா சொல்லவில்லை.

//ஆசை அடங்கியவுடன் தம்பதிக்குள் கடைசியாய் மிச்சமிருப்பது நட்புதானே) சரின்னா நட்பில் தொடங்கி நூலிழையில் இணைந்து வாழும் காதலும் சரிதானுங்கோ..// கடைசியில் இவர்கள் இடையேயும் நட்பு தானே மிஞ்சும்?

அதானே நட்புடன் பழகுற எல்லா ஆண்கள் மேலையுமா காதல் வரும் இல்லை எல்லோருக்குமே அதே எண்ணம் தான் வருமா என்ன? இது ஒவ்வொரு தனி மனிதனின் உணர்வை பொருத்தது அதுவுமில்லாமல் பழகும் நண்பரின் குணத்தையும் பொருத்தது. இதற்கு என்ன சொல்றீங்க எதிரணியினரே?

உங்களின் பதிவு என்னை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழிகளே நடுவர் இல்லாட்டியும் பட்டியில் வாதங்கள் மழை போல கொட்டி இந்த கோடையில் அறுசுவையை குளுமை ஆக்கட்டும். மீண்டும் நடுநிசியில் வந்து பதிவிடுகிறேன்.

என்ன செய்வது நான் உலகத்தின் கடைசியில் இருக்கிறேன்......அங்கே சூரியன் உதயமாகும் நேரம் இங்கே அஸ்தமனம் :(

பி.கு பட்டி இழையை உள்ளே அனுப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள் தோழிகளே!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எங்கள் அன்பு நடுவரை பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து தந்து வருக வருக என பட்டிக்கு வரவேற்கிறோம்.

சூடான தலைப்பு கொடுத்த தோழி சுகந்திக்கு பாராட்டுகள் மற்றும் போட்டி போட்டுக்கொண்டு வாதாட வந்திருக்கும் நம் அறுசுவை தோழிகள் அனைவருக்கு என் இனிய மதிய வணக்கங்கள்.

4 நாட்கள் ஊர் சுற்றலுக்கு பின் இன்று தான் அறுசுவையில் நுழைந்தேன், ஆனால் அதற்குள் பட்டி பல பக்கங்களை தாண்டிவிட்டது.

நிச்சயம் வாதிட வேண்டிய அருமையா தலைப்பு... ஆனால் எந்த அணியில் வாதாடுவது என்பதே பெரும் குழப்பம்.

சிறிது சிந்தனைக்கு பின் வருகிறேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இன்றைய காலத்தில் காதலையே நட்பு என்றே அனைவரிடமும் ஏமாற்றி சொல்லி சுற்றி திரியறாங்க... ஏன் நட்புக்கு யாரும் தடைபோடுவதில்லை. அப்படிபட்ட நட்பின் புனிதத்தை நட்பால் மட்டுமே தான் பாதுகாக்க முடியும்.

நட்பு என்பது ஆண் பெண், ஏழை பணக்காரன், ஜாதி மதம், நாடு மொழி எதையும் சார்பற்றது மட்டுமின்றி புரிந்துகொள்வதும் உண்டு, சண்டையிடுவதும் உண்டு. ஒரு நண்பனை நண்பனாக மட்டுமே பார்ப்பது தான் நட்பு, நண்பனை ஒரு கட்டத்தில் காதலனாகவோ அல்லது காதலியாகவோ பார்த்தால் அங்கே நட்பு எங்கே இருக்கிறது. நண்பர்களின் தீண்டல்களில் விரசம் இருப்பதில்லை, அதுவே காதலில் அப்படியா? விரல் பட்டாலே பட்டாம்பூச்சி பரப்பதில்லையா?

ஒரு நல்ல நண்பன் கடைசிவரை நல்ல நண்பனாகவே இருக்க முடியாதா? திருமணம் ஆனா பின்னும் நட்பை தொடர முடியாதா?
என் நண்பன் ஒருவன் (சாரி அவன் இப்பொழுது உயிரோடு இல்லை) தன் திருமணத்தின் முன்னும் சரி திருமனத்திருக்கு பின்னும் சரி தன் கடைசி வாழ்நாள் வரை என் நல்ல நண்பனாகவே இருந்தான். இதில் அவன் மனைவிக்கோ அல்லது என் கணவனுக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லையே. நட்பை கடைசி வரை நட்பாகவே கூட தொடர முடியும். அது காதலாகவோ அல்லது கணவன் மனைவியாகவோ ஆனால் மட்டும் தான் தொடர முடியும் என்று கட்டாயம் இல்லை. ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்... அதை ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துக்கலாம்... என்ற பாடல் வரிகளே காதில் ஒலிக்கிறது...

ஒரு ஆண் பெண் நட்பில் அவங்க அவங்களோட நிறை குறைகள் தெரிந்திருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நட்பை தொடர முடியும். ஆனால் தனக்கே உரிமை என்று காதல் வந்த பின் அவர்களில் நிறை குறைகளை ஏற்க மனம் ஒத்துழைக்க தயங்கும், அது விரிசலை உண்டாக்கும். நட்பில் தொடங்கி காதலில் தொடர்ந்து திருமண பந்தத்தில் பிரிபவர்களும் இருக்கிறார்கள் தான். எல்லா காதலும் வெற்றி பெறுவதில்லை அது நட்பில் உருவாகும் காதல் உட்பட.

பெண் பார்த்த பின் போன் நம்பர் குடுத்தாலும் ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்து கொள்வதை நட்பென்று சொல்ல முடியாது... அப்படி அது நட்பானால் திருமணத்தில் ஒத்து போகலைனாலும் ஏன் அந்த நட்பை தொடருவதில்லை? நச்சயம் செய்யப்பட்ட ஆணோ பெண்ணோ தான் கட்டிக்கபோகும் பெண்ணிடம் நண்பராக தான் பழகுகிறேன், இங்கே காதல் இல்லை என்று சொல்ல முடியாது... உண்மை என்னவென்றால் அங்கே காதலே இருக்கும் ஆனால் நாணத்தால் மற்றவரிடம் அதை வெறும் நட்பென்று கூறுவார்கள். என் கணவரிடம் முதல் முறையாக பேசும்போது நட்பும் இல்லை, காதலும் இல்லை... ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு திருமணபந்தத்தில் இணைய போகிறோம் என்ற போதே காதல் அரும்பியது.

அப்பறம், நம் நண்பர்களுடன் சினிமாக்கு போனால் சும்மா ஜாலியா இருக்கும். ஆனால் அதுவே காதலனுடன் சினிமாக்கு போகும்போது. ஒரு வித பதற்றம், விரல் நுனியில் நிற்பது போன்று ஒரு உணர்வு, நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு புழு நெளிவது என்று எவளவோ சந்தோஷமான பீலிங்க்ஸ் இருக்கும் இல்லையா? நட்பின் உணர்வுகள் வேறு, காதலின் உணர்வுகள் வேறு. நட்பையும் காதலையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.

நடுவர் மேம், எல்லாருக்கும் ஒரு ப்ரைவசி இருக்கு, அதை காதலனிடமோ அல்லது கணவனிடமோ கூட விட்டு குடுக்க மாட்டோம். ஆனால் நண்பனிடம் எல்லாவற்றையும் மறந்து மனம் விட்டு பேசுவோம். அதுமட்டுமின்றி நம் நிறை குறைகள் அறிந்த நண்பன் காதலனாகும்போது குறைகளை சுட்டி காட்டி கோபப்படவோ திட்டவோ அல்லது சந்தேகப்படவோ கூட முடியும். இது காதலையும் அழித்து நட்பையும் சேர்த்து அழித்து விடும்.

கணவன் நண்பனாகவும் காதலனாகவும் இருந்தால் அங்கே திருமண உறவு வலுப்படும். ஆனால் நண்பன் காதலனாகவோ அல்லது கணவனாகவோ மாறும்போது அது நட்பை காணாமல் போக செய்யும்.

பூத்துக்குலுங்கும் பூக்களை செடியிலேயே வைத்து அழகு பார்த்தல் அது வெகு நாட்கள் வாடாமல் இருக்கும் நட்பை போல. ஆனால் அதை கில்லி நம் தலையில் சூடி காதல் எனும் கயிற்றில் கட்டினால் வெகு சீக்கிரமே வாடிவிடும்.

சோ நட்பு நட்பாகவே இருக்க வேண்டுமே தவிர காதலாக மாறக்கூடாது...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்