பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

லாவண்யா அக்கா எனக்கு வயசு 22 தாணுங்கோ , பொசுக்குனு அண்ணா"னு சொல்லிபுட்டீங்க நட்பு எனும் மொட்டு காதலாக மலரும் போது அப்படியே ஆகாயத்திலே பறக்கலாம்.மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும் இன்பமே தனிதான். .அதனால் நம்மை புரிந்துகொண்ட தோழி காதலியாக மாறினால் அவனைவிட அதிர்ஷ்டசாலி உலகில் இல்லை . இதை கூடாது என்பவர்கள் மனநிலை வேறு. நல்லவங்க கண்களுக்கு நல்லதே படும். எதிர்மறை ஆட்களுக்கு எதிராகதான் விஷயம் தோன்றும். நட்பு காதலாக மாறுவதால் இருமடங்கு வலிமை பெறும். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் அது போல நட்புடன் சேர்ந்த காதலும் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது கருத்துங்க :-)

நட்புடன்
குணா

ஹாய்,

ரொம்ப நாளாச்சு, இந்தப் பக்கம் வந்து. பட்டி தலைப்பு நல்லா இருக்கு. ஃப்ரெண்ட்ஷிப் அப்படியே இருந்தால் நல்லா இருக்கும், இல்லன்னா கல்யாணத்துக்கு அப்புறம் மத்த ஃப்ரெண்ட்ஸ் கூட பேசறப்ப, பழகறப்ப, குடும்பத்தில் ஒரு டவுட் இருந்துட்டே இருக்கும். இவன்/இவள் நம்ம ஆளை சைட் அடிச்சிருப்பாங்களோன்னு, தேவையா இது

மணிமுத்துமாலை

நடுவர் அவர்களே நட்பு வேற காதல் வேற அதுக்குள்ள வேறுபாட்ட புரிஞ்சிக்கணும்

"கண்களில் தோன்றி
இதயத்தில் வாழ்வது காதல்!!
இதயத்தில் தோன்றி
உயிரில் வாழ்வது நட்பு!!!

நட்புக்குள்ள காதல் என்பது எல்லாம் சும்மா ஒரு கட்டு கதை.எத்தனையோ நண்பர்கள் இருக்காங்க அவங்க எல்லார் கூடையும் இவங்களுக்கு காதல் வருவதில்லை.யாரோ ஒரு நெருங்கிய நண்பர் கூட மட்டும் தானே காதல் வருகிறது.அப்படினா இவங்களுக்கு முதலையே அவங்க மேல ஒரு soft corner இருக்கும்.அது காதலா நட்பா நு பிரிச்சி பாக்க தெரியாதவங்க அதாவது பக்குவம் இல்லாதவங்க,அப்படினா பாக்கும் போதே காதல் வந்து இருக்கும்.ஆனா அத வெளிபடுத்த தைரியம் இல்லாமலும் இந்த சமுதாயத்துக்கும் பயந்துகிட்டு friends என்ற போர்வைல சுத்திகிட்டு இருக்காங்க.அதாவது பசுதோல் போர்த்திய புலி.

அதாவது இவங்க காதல் என்பது டிராபிக் சிக்னல் எல்லோ லைட் மாதிரி. அது கிரீன் கு போகலாம் ரெட் லைட் கும் போகலாம்.சிவாஜி படத்துல ஒரு வசனம் வரும் என்கிட்டே ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க பழகி பிடிச்சா கல்யாணம் பண்ணிகொங்க இல்லைனா friends சாகவே இருப்போம் நு.அதே மாத்ரி தான் இவங்களுக்கும் ஒருத்தர ஒருத்தருக்கு பிடிச்சிருக்கும்.. ஆனா பிரிஎண்ட்ஸ்-எ பழகி பாப்பாங்க. அதாவது safer Zone.

//எத்தனை உறவுகள் இருந்தாலும் நாம யாரோ ஒரே ஒரு மனுஷனை தானே வாழ்க்கை துணையாக கை பிடிக்கிறோம்// அப்போ அந்த ஒருத்தர் எப்படி நண்பனாக இருக்க முடியும்? அப்போ நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? இப்படி கேட்டா நூலிழை வித்தியாசம் நு சொல்வான்ங்க? அந்த நூலிழை வித்தியாசம் நமக்கும் புரியாது பழகற அவங்களுக்கும் புரியாது.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

விவாதங்களில் பங்கு கொண்டு எனக்கு பழக்கம் இல்லை... இருந்தாலும் இந்த தலைப்புக்கு என்னுடைய கருத்து இது தான்....

ஆண் பெண் என்ற பாகுபாடு எல்லாம் கடந்தது தான் உண்மையான நட்பு... அப்படி இருக்கும் போது நட்பு எப்படி காதலாக மாற முடியும்? நட்பு நட்பாக தான் இருக்கும்...
இவன் ஆண் / இவள் பெண் என்ற எண்ணத்தோடு பழகினால் அல்லவா மற்ற எண்ணங்கள் தோன்ற? ஆணானாலும், பெண்ணானாலும் 'பிரெண்டாக' பார்த்தால் வேறுபாடு ஏது? அப்படி வேறுபாடுடன் பழகினால் அதன் பெயர் நட்பே இல்லை...

எத்தனை வருடங்கள் ஆனாலும் தாய், தந்தை, அண்ணன், அக்கா, தங்கை என்ற உறவுகள் மாறுவதில்லை.... அதே போன்றது தான் நட்பும்... நண்பன் நண்பனாகவும், தோழி தோழியாகவும் தான் இருக்க முடியும்...

நட்பு என்பது பகிர்ந்து கொள்வது (more about sharing)... காதல் / திருமணம் என்பதெல்லாம் சொந்தமாக்கி கொள்வது (more of possessiveness)...

நட்பு நட்பாக தான் இருக்க வேண்டும் வேறு எந்த வடிவமாகவும் மாறலாமா என்ற கேள்விக்கே இடமில்லை :)

- பிந்து

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்னை கண்ணு கலங்க வெச்சிட்டீங்களே......பொன்னாடை, பூங்கொத்து......சரி ரைட்...விடுங்க :)

சுற்றுலாவா?? நல்லபடியா முடிந்தா? பேச்சில் இருக்கும் தெம்பை பார்த்தல் நல்லாவே என்ஜாய் பண்ணியிருப்பீங்கன்னு தெரியுது.

வந்ததும் வராததுமாய் கூடாது அணிக்கு பலம் சேர்க்க வந்துவிட்டீர்கள். வாங்க வாங்க.

//நண்பர்களின் தீண்டல்களில் விரசம் இருப்பதில்லை, அதுவே காதலில் அப்படியா? விரல் பட்டாலே பட்டாம்பூச்சி பரப்பதில்லையா?// அதான் அவர்கள் நண்பர்கள் என்ற இடத்திலருந்து காதலர் என்ற இடத்துக்கு ப்ரோமோஷன் ஆயிடுச்சி இல்ல....

// ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்... அதை ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துக்கலாம். // எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட. இந்த பாட்டிலே சொல்லியிருப்பார் ஒரு ஆண் பெண் நட்பாகவே பழக முடியும் என்று அந்த பெண் ஆணித்தரமாகவே சொல்லியிருப்பார்கள்.

ஓ காதலனுடன் படத்துக்கு போனா அப்படியெல்லாமா இருக்கு? இந்த சங்கதி எல்லாம் எனக்கு எப்படிங்க தெரியும்?

//பூத்துக்குலுங்கும் பூக்களை செடியிலேயே வைத்து அழகு பார்த்தல் அது வெகு நாட்கள் வாடாமல் இருக்கும் நட்பை போல. ஆனால் அதை கில்லி நம் தலையில் சூடி காதல் எனும் கயிற்றில் கட்டினால் வெகு சீக்கிரமே வாடிவிடும்.// ஆஹா ஆஹா அருமை அருமை. பூக்களை தான் பறிக்காதீங்க. ஆனா பூக்களை பாரித்தால் காதல் தான் முறிந்து போகுமாமே ;)

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கோயம்பத்தூர் காரக எல்லாம் மரியாதையாய் இல்ல பேசுவாங்க. வயசில் சின்னவகளா இருந்தாலுமே கூட அப்படி தானுங்களே கூப்பிடுவாக. அது சரி பெண்களின் வயதை எப்படி நீங்காளாகவே தீர்மானிக்க முடியும்?

// பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் அது போல நட்புடன் சேர்ந்த காதலும் வெற்றிபெற வேண்டும்// வெற்றி பெற வேண்டுமா இல்லை வெற்றி பெறுமா?? நீங்களே தெளிவா அதையும் சொல்லிபோடுங்க.

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பல நாள் கழித்து வந்தாலும் பட்டியில் பதிவிட்டு என்னை சந்தோஷப்படுத்தீங்க. மாறக்கூடாது அணியா?

நட்பை இருந்து காதலித்து திருமணம் செய்துக் கொண்டா சந்தேகத்துக்கு இடமிருக்கும்னா சொல்றீங்க. அதெல்லாம் பேசி தீர்த்து விட்டு தானே கல்யாணம் பண்ணியிருப்பாங்க இல்லையா? அது சரி சந்தேகம் என்பது இப்படி வரும்னே யாருக்குமே தெரியாது. சந்தேகப்படுறவங்களையும் சேர்த்தே.....

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//"கண்களில் தோன்றி
இதயத்தில் வாழ்வது காதல்!!// இது பழசு.....

//இதயத்தில் தோன்றி
உயிரில் வாழ்வது நட்பு!!!// புதுசு கண்ணா புதுசு.....

அதானே எல்லார் மேலையுமா காதல் வருது. ஒருத்தர் மேல மட்டும் தானே வருது. அதானே தீடீரென்னு நட்பு எப்படி காதாலாகும்? அதுக்கு எதாவது காரணம் இருக்கணும் இல்ல....

//டிராபிக் சிக்னல் எல்லோ லைட் மாதிரி// எல்லோவுக்கு அப்புறம் ரெட் தானே? இல்லை இந்தியாவில் வேறையா? இல்லை இங்கெல்லாம் கண்டிப்பா ரெட் மட்டுமே தான்!

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இப்படி தாங்க முதலில் ஆரம்பிக்கணும் அதுக்கப்புறம் அதுவே தானாக பழகிடும். இங்குள்ள பல தோழிகளுக்கு அறுசுவை பட்டிமன்றம் தான் முதல் விவாத மேடை. என்னையும் சேர்த்தே (தமிழில்)!

மாறாது அணியா. மாறாது அணி பலப்பட்டுக் கொண்டே போகுதே!

//நட்பு என்பது பகிர்ந்து கொள்வது (more about sharing)... காதல் / திருமணம் என்பதெல்லாம் சொந்தமாக்கி கொள்வது (more of possessiveness)...// ரொம்ப அழகாக சொல்லிட்டீங்க. நடப்பை சொந்தமாக்க நினைத்து தான் காதல் மலர்கிறது என்று சொல்றீங்க. அழகான கருத்து.

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவர் அவர்களே எங்க அணி தோழி கூறியது போல் நானும் ஒரு உதாரணம் சொல்லுறேன்... என் அலுவலக நண்பர் ஒருவர் நல்ல குணம் கொண்டவர், அனைவரிடமும் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் எப்பவும் இருப்பார்... நாங்க எல்லாரும் அவங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சவங்க நு அடிக்கடி பேசிப்போம். ஒரு முறை ஒரு கெட் டூ கெதர் ல அவங்க மனைவியை சந்திச்ச போது தான் அவங்க இவரை பற்றி கதை கதையா சொன்னங்க... அப்பொழுது தான் வீட்டில் அவரோட முகம் என்னனு புரிஞ்சது... நாமும் அதே போல் தான் நம் பெற்றோரிடம் ஒரு மாதிரி பழகுவோம், நண்பனிடம் ஒரு மாதிரி பழகுவோம், அதுவே கணவனிடம் ஒரு மாதிரி பழகுவோம். இதில் நண்பன் கணவனாகும்போது அதே மாதிரி இப்பங்கன்னு சொல்ல முடியாது.

பெற்றோர்கள் தன் பொன்னை நம்பி ஆண் நண்பர்களுடன் பழக விடுகிறார்கள் என்றால் அந்த நட்பு புனிதமான நட்பாகவே இருக்கும்ங்கற நம்பிக்கையில் தான். அப்படி அது காதலாக மாறும்போது பெற்றோர்கள் தன் பொன்னை எப்படி ஆண் நண்பர்களுடன் பேச அனுமதிப்பார்கள்.

ஒரு ஆண் நண்பனை நம் வீட்டில் அறிமுகபடுத்தும்போது நம் தங்கை தம்பிகள் அவரை அண்ணா என்றே அழைப்பார்கள். பின் அதில் காதல் எனும் சாயம் பூசும்போது அண்ணா என்ற உறவு மாமா என்று கூப்பிட நேரும். இது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு உகந்ததா.

இந்த மாடர்ன் வேல்டில் பல பேர் காதல் செய்வதற்காகவே நட்பெனும் பெயரை உபயோகிக்கிறார்கள். முதல்ல நண்பனா இருக்க ஆசைப்படறேன்னு சொல்ல வேண்டியது அப்பறம் கொஞ்ச நாளைக்கு அப்பறம் ஐ லவ் யு ஸ்வீட்ஹார்ட் நு சொல்லிட வேண்டியது. இதில் தூய்மையான பரிசுத்தமான நட்பு எங்கே?

//நட்பை நேசிக்கிறேன் !!
நிலைக்கும் நட்பை காதலிக்கிறான் !!
நட்பு உன் மீது ! காதல் உன் நட்பின் மீது … !!!// நடுவரே, இங்கே காதல் என்று குறிப்பிடுவது அதிகபடியான அன்பை தான். ஐ லவ் யு அப்பா நு சொன்னால் இங்கே காதலன்ற வார்த்தைக்கு அன்பு என்றே பொருள். அதே போல் இந்த வரிகளில் நட்பு உன் மீது, காதல் (அதிக அன்பு) உன் நட்பின் மீது. இந்த வரிகளே நட்பிலக்கனத்தை அழகாக விளக்குகின்றன.

//ஒரு தருணத்தில் நட்பின் பிரிவு பொறுக்க முடியாத வலியை கொடுத்தால், அதுவும் காதல்தான்...// பெண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பில் கூட இந்த மாதிரி பொறுக்க முடியாது வலி இருக்குங்க. ஆனால் பெண்ணுக்கு பெண்கள் திருமணமா செய்கிறார்கள். அதுவே ஆணுடன் மட்டும் காதல் வருகிறதென்றால் அது ஒரு வகையில் பால் ஈர்ப்பு என்றே அர்த்தம்.

என் பிரண்ட்ஸ் அடிக்கடி சொல்லுவாங்க. நட்பில் பொசஸ்சிவ்னஸ் வர கூடாது அப்படி பொசஸ்சிவ்னஸ் வந்தால் அது நட்பே இல்லை, காதலே என்று. நட்பில் கட்டுபாது கிடையாது நீங்கள் எவ்வளவு நண்பர்கள் வேண்டுமானால் சேர்த்துக்கொண்டே போகலாம். ஆனால் காதல் நீ எனக்கு மட்டுமே என்று ஒரு கட்டுபாட்டுக்குள் உள்ளது. மற்றும் நட்பு என்பது மனம் சம்பத்தப்பட்ட ஒன்று. அதுவே காதல் என்பது மனம் மற்றும் அல்ல உடலும் சம்பந்தப்பட்டது. அப்படி இருக்க ஒரு நல்ல நண்பன் எப்படி தன் தோழியை காதல் கொள்ள முடியும், அப்பொழுது அவர்கள் நட்பின் புனிதம் கெடுகிறதே. பிறர் மனைவியை அடைய நினைக்காதே என்பது மூதோர் சொல் அதே போன்று ஒரு சிறந்த நட்பில் காதலும் காமமும் வரக்கூடாது என்பதே என் கருத்து. திருமணத்திற்கு முன் காதல் வருவதை நாங்கள் ஒன்னும் தவறென்று கூறவில்லை. ஆனால் நட்பின் பெயரை உபயோகித்து நட்பையே அழித்து பின் காதாலாகும் காதலை தான் கூடாது என்கிறோம்.

காதலில் நட்பு இருக்காலாம், ஆனால் நட்பில் காதல் வரக்கூடாது.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்