மட்டிக்கறி

தேதி: April 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டி - 1/4 கிலோ
வெங்காயம் - பாதி
கத்தரிக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
மசாலாதூள் - 3 தேகரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கருவேப்பிலை - சிறிது
கருவா - ஒரு துண்டு
ஏலம் - 1
பூண்டு - 3பல் தோல் (உரிக்காதது)
தேங்காய்பால் - 2 மேசைக்கரண்டி
தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் மட்டியை கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும் தன்னாலயே வாய் பிளந்துவிடும் பின் அதன் உள்ளே இருக்கும் கறியை மட்டும் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து 1 தேக்கரண்டி மசாலாதூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வரட்டிவைக்கவும்.

வெங்காயம்(சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்),கத்தரிக்காயை பொடியாக நறுக்கிவைக்கவும்.

பூண்டு,கருவா,ஏலம் இவற்றை சேர்த்து தட்டிவைக்கவும்.

பின் வரட்டிய மட்டிக்கறியில் வெங்காயம்,கத்தரிக்காய் தேங்காய் விழுது,மசாலாதூள்,மஞ்சள்தூள்,உப்பு,சிறிது கருவேப்பிலை போட்டு கலந்துவைக்கவும்.

பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,கருவேப்பிலை போட்டு தாளித்து,தட்டிவைத்ததை போட்டு வதக்கி சேர்த்துவைத்த கறிக்கலவையை போட்டு கிளறி நன்கு வேகவிடவும் தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். நன்கு வெந்ததும் தேங்காய்பாலை ஊற்றி கிளறி தண்ணீர் அனைத்தும் வற்றியதும் இறக்கவும்.


இதை சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மட்டி என்றால் என்னவென்று சகோதரி ரஸியா அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இதே கேள்வியை சுமக்கும் மற்ற நேயர்களுக்கும் சேர்த்து எனக்குத் தெரிந்த பதிலை அளிக்கின்றேன்.

மட்டி என்பது கடின ஓடு உடைய ஒரு வகை மீனினம்(Shellfish). நத்தை, ஆயிஸ்டர் எல்லாம் இந்த வகையைச் சார்ந்ததே. கடற்கரையில் சிப்பிகளைப் பார்த்திருப்பீர்கள். இறந்த மட்டி மீன்களின் மேலோடுதான் நாம் பொறுக்கும் சிப்பிகள். இரண்டு சிப்பிகளை ஒன்றாய் ஒட்ட வைத்தது போன்று இருக்கும். அந்த ஓட்டின் உள்ளேதான் சதைப்பகுதி இருக்கும். பாறைகளில் ஒட்டிக்கொண்டு வாழக்கூடிய ஒரு உயிரினம்.

குளம் ஏரிகளிலும்கூட மட்டிகளை காணலாம். கடல் மட்டிதான் அதிகம் உணவாகப் பயன்படுகின்றது. என்னிடம் தற்போது மட்டியின் படம் இல்லாததால் வெளியிட முடியவில்லை. கூகிளில் அல்லது விக்கிபீடியாவில் Clam, Mussel என்ற பெயர்களில் தேடுதல் நடத்துங்கள். படங்களைக் காணலாம்.

மட்டி என்பது கடின ஓடு உடைய ஒரு வகை மீனினம்(Shellfish). நத்தை, ஆயிஸ்டர் எல்லாம் இந்த வகையைச் சார்ந்ததே. கடற்கரையில் சிப்பிகளைப் பார்த்திருப்பீர்கள். இறந்த மட்டி மீன்களின் மேலோடுதான் நாம் பொறுக்கும் சிப்பிகள். இரண்டு சிப்பிகளை ஒன்றாய் ஒற்ற வைத்ததுபோன்று இருக்கும். அந்த ஓட்டின் உள்ளேதான் சதைப்பகுதி இருக்கும். பாறைகளில் ஒட்டிக்கொண்டு வாழக்கூடிய ஒரு உயிரினம்.
தாங்கள் கூறியதுதான்எங்கள் ஊரில் இது நல்ல கிடைக்கும் கடல் கரைக்கு போனால் அலை அடித்துவிட்டு போகும் சமயம் தன்னாலயே மண்ணுக்குள் புதையும் அப்பொழுது ஈசியாக எடுக்கலாம். இதை அடையும் சுட்டு சாப்பிடலாம். கறி சமைத்தும் சாப்பிடலாம்.மிகவும் சுவையாக இருக்கும்.
இங்கே ஜப்பானிலும் அது ரெம்பவும் பிரபலம் குறைந்தவிலை என்று பார்த்தால் 400 அல்லது 500 yen கிடைக்கும். வீட்டில் இருந்தது முடிந்துவிட்டது அதனால் இனிமேல் வாங்கினால் படம் எடுத்து அனுப்புகிறேன்.
நன்றி