முட்டைக்குழம்பு

தேதி: April 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

முட்டையில் கலக்க:
முட்டை - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை பாகம்
பச்சை மிளகாய் - ஒன்று
குழம்புக்கு:
பட்டை - ஒரு துண்டு
ஏலம் - ஒன்று
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
மல்லி இலை - கால் கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - 3/4 கப்
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

முதலில் எண்ணெயை காயவைத்து அதில் பட்டை, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கி பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி, மல்லி இலை மற்ற பொடிகளை சேர்த்து நன்கு வதக்கி தக்காளி மசிந்து மையாகும் வரை வதக்கவும்.
பின் தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து இளம் தீயில் கொதிக்க விடவும். அதே சமயம் கலக்கக் கொடுத்துள்ள முட்டை, பச்சை மிளகாய், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து அடித்து பணியாரம் சுடும் சிறிய குழிசட்டியில் சிறிது எண்ணெய் விட்டு கலக்கிய முட்டைகளை குழியில் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
பிறகு முட்டைகளை கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். மிகவும் சுவையான முட்டைக் குழம்பு தயார்


3 முட்டை இருந்தால் 5 பேர் சாப்பிடலாம். அதுவும் அழகாக பந்து போல சுவையாக இருக்கும் குழம்பில்.

மேலும் சில குறிப்புகள்


Comments

என்னிடம் பணியார குழி/ தாளிக்கும் இரும்பு கரண்டி இல்லை. முட்டைகளை வேறு எவ்வாறு பந்து போல் செய்யலாம்? எதுவும் ஐடியா தோன்றினால் கூறவும். இல்லை என்றால் முட்டையை அடையாக ஊற்றி குழம்பு வைக்கவா?

ஹாய் வித்யாநந்தினி,
என் ப்ரன்டோட அம்மா முட்டையை நல்லா அடிச்சு, இட்லி தட்டுல இட்லி ஊத்தற மாதிரியே சின்னசின்னதா ஊத்தி வேக வைத்து எடுத்து குழம்பில் போடுவாங்க. ட்ரை பண்ணிப்பாருங்க. நல்லா இருக்கும்.
Rajini

வித்யா இதனை ஒரு நாள் நான் குழிப்பாத்திரத்தில் ஊற்றும் சலிப்பில் அடை போல செய்து(ஆம்லெட்) கட் பன்னி போட்டேன் ஆனால் அது ஒரு மாதிரி கசமுசா என்று குழம்பு அசிங்கமாக ஆகிவிட்டது மற்றபடி சுவை நல்ல இருக்கும்.அனி சொல்வது நல்ல ஐடியா..இவ்வளவு மெனக்கெட முடியாட்டால் முட்டையை முழுவதும் வேக வைத்து வெள்ளையில் கீறி போடலாம்

தளிகா அனி சொல்லும் முறையில் முட்டையை வேக வைத்து, குழம்பு வைத்து விட்டு சொல்கிறேன். நன்றி தளிகா, நன்றி அனி