பஸ்பௌசா

தேதி: June 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (6 votes)

இது ரவாவினால் செய்யப்படும் ஒரு வகையான மெடிட்டரேனியன் ஸ்வீட்.

 

சன்னமான ரவை - 2 கப்
(உப்பு சேர்க்காத) வெண்ணெய் - அரை கப்
சர்க்கரை - 3/4 கப்
முட்டை - 2
கெட்டியான தயிர் - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
பிஸ்தா, வால்நட் - கால் கப்
சிரப் செய்வதற்கு :
சர்க்கரை - 2 கப்
ரோஸ் எசன்ஸ் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்


 

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். நுரை வரும் வரை கலக்கவும். சர்க்கரை பொடியாக இருந்தால் சீக்கிரமே கலந்து விடும். சர்க்கரை பொடித்து சேர்த்தால் இன்னமும் நல்லது. எல்லாம் ஒன்றாக கலந்து இந்த பதத்தில் இருக்கும்.
பிறகு முட்டையை தனியே வேறு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு கலந்து விட்டு இந்த கலவையில் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். நுரை பொங்க அடிக்க வேண்டும் என்று அவசியமில்லை.
வேறு ஒரு பாத்திரத்தில் ரவை, பேக்கிங் பவுடர், சோடா எல்லாவற்றையும் கலந்து விட்டு சலித்து வைக்கவும். ரவை கலவை மற்றும் தயிரை சர்க்கரை கலவையில் சேர்க்கவும். கலவையை நன்கு கலக்கினால் தான் வேகும் போது பொங்கி வரும்.
எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு கலக்கவும். எல்லாம் கலந்த கலவை இந்த பதத்தில் இருக்கும்.
ஒரு பேக்கிங் ட்ரேவில் சிறிதளவு வெண்ணெயை தடவி அதில் இந்த கலவையை ஊற்றவும். பிஸ்தா மற்றும் வால்நட்டை பொடியாக நறுக்கி மேலே தூவவும். இதை 300 டிகிரி F முற்சூடு செய்யப்பட்ட அவனில் 30-35 நிமிடம் வேக வைக்கவும். ஒரு போர்க் கொண்டு குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் அதுவே சரியான பதம்.
இதற்கிடையில் வேறு ஒரு பாத்திரத்தில் சிரப் செய்ய கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
5-7 நிமிடம் கொதித்த பின்னர் அதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி ஊற்றவும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் வாட்டர் பிடித்து அதில் இந்த சிரப் உள்ள பாத்திரத்தை வைக்கவும். மூழ்காமல் பார்த்துக் கொள்ளவும். இப்படி தான் சிரப்பை ஆற வைக்க வேண்டும்.
கேக் வெந்ததும் சூடாக இருக்கும் போதே ஆறிய சிரப்பை அதன் மேல் ஊற்றவும். அப்படியே 15 நிமிடம் விடவும்.
பிறகு துண்டுகளாக்கி மேலே க்ரீம் அல்லது விருப்பமான பழத்துண்டுகளுடன் பரிமாறவும். சுவையான பஸ்பௌசா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இங்க உண்டு இங்க உண்டு... இது இங்க உண்டு ;) ஆனா பேரு வேற. இங்க இதில் பாயாசம் கூட பண்ணுவாங்க, இந்த ரவையில். ஹிஹிஹீ. அனுப்பறேன் ஒரு முறை, சித்ரா செய்யட்டுமா செய்யட்டுமான்னு கேட்டுகிட்டே இருக்காங்க. கலக்கலா வந்திருக்கு குறிப்பு. கட் பண்ணி ப்ரெசண்ட் பண்ண விதம் சோ கியூட். யாரு நம்ம லாவி வேலையாச்சே... நல்லா தான் வரும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பஸ்பெளசா படத்தையே பார்த்துட்டு இருக்கேன் அப்படி சுண்டி இழுக்குதுங்க அப்பப்பா அப்படியே தந்தா நான் பாத்திரத்தை காலிபண்ணிட்டு தந்துடுவேன். நிச்சயம் நல்லா தான் இருக்கும்னு பார்த்தாலே தெரியுதுங்க நாவூருது.

mediclaim insurance free

lifela onnum illai 8344525601

அப்படியா.....அப்போ இங்கே உள்ள உணவிற்கும் உலகத்தில் பல நாடுகளில் உள்ள சமையலுக்கும் சம்மந்தம் இருக்குன்னு சொல்லுங்க. சீக்கிரம் அனுப்புங்க....பாயசமா அனுப்புங்க.....சித்ரா ஆசையை நிராசை ஆக்கிடாதீங்க ........வாழ்த்துக்கு நன்றி.

உமா.....அப்படியா......இருங்க நானும் ஒரு முறை பார்க்கிறேன்.....சீ போங்க இருந்தாலும் நீங்க ரொம்ப தான் புகழ்றீங்க.....அப்படின்னு நான் சொல்லலை....ஸ்வீட் சொல்லுது.....கேட்கவே கூடாது அப்படியே எடுத்து சாபிடோனும்....சரியா.....வாழ்த்துக்கு நன்றி.

வேல் எப்படிங்க அவ்வளவு தைரியமா நான் செய்த ஸ்வீட்டுக்கு நீங்க ஃப்ரீயா இன்ஷுரன்ஸ் வேற கொடுக்கறேன்னு.......சரி அது என்னங்க உங்க மொபைல் நம்பரா......நீங்க இன்ஷுரன்ஸ் ஏஜென்டா.....ஃப்ரீயா என் குறிப்பில் மார்க்கெட்டிங்கா ......அது சரி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு லாவண்யா,

சூப்பராக இருக்கு, ரவை சேர்த்து, ஷுகர் சிரப் டிப் செய்து, என்று ஒவ்வொரு ஸ்டெப்பும் தெளிவாகக் கொடுத்திருக்கீங்க.

என்னால முட்டை சேர்த்து செய்ய முடியாது, அதனால் நீங்க என்ன பண்றீங்கன்னா, - நாங்க உங்க வீட்டுக்கு வர்றப்ப, இதை செய்து கொடுங்க, சரியா.

(ஆனா, இதுல முட்டை சேர்த்திருக்குன்னு அங்கிள்கிட்ட போட்டுக் குடுத்துடக்கூடாது:))

அன்புடன்

சீதாலஷ்மி

செய்முறை, படம்லாம் பார்க்க நல்லா இருக்கும்னு தெரியுது. ட்ரை பண்ணிட்டு திரும்ப வரேன் லாவி..

‍- இமா க்றிஸ்

//வேல் எப்படிங்க அவ்வளவு தைரியமா நான் செய்த ஸ்வீட்டுக்கு நீங்க ஃப்ரீயா இன்ஷுரன்ஸ் வேற கொடுக்கறேன்னு.......சரி அது என்னங்க உங்க மொபைல் நம்பரா......நீங்க இன்ஷுரன்ஸ் ஏஜென்டா.....ஃப்ரீயா என் குறிப்பில் மார்க்கெட்டிங்கா ......அது சரி.// - ஹஹஹா... முடியல லாவி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கவே எடுத்து சாப்பிட தோணுது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

லாவி,

கடைகளில் விற்கும் இனிப்பு வகைகளை எல்லாம் அடிச்சு தூக்கிடுச்சு உங்க பஸ்பௌசா.

ஸ்வீட்ஸ் செய்வது மட்டுமில்லை, அதை சிந்தாமல் சிதறாமல் நேர்த்தியுடன் அலங்கரித்து பருமாருவதே ஒரு கலை தான். நீங்கள் அதில் கைதேர்ந்தவர் என்பது நல்லாவே தெரியுது.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

லாவி

படம் அமர்க்களமா இருக்கு..
ரொம்பவும் வித்தியாசமான குறிப்பு.
கடைசி பட துண்டுகளை அப்படியே எடுத்துக்கறேன் :)
வாழ்த்துக்கள்
செய்திட்டு சொல்றேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

படங்கள் பார்த்தாலே செய்யணும்னு தூண்டுது...சீக்கிரமா செய்துட்டு வரேன்

Kalai

அட, புதுசா இருக்கே லாவி!

கொஞ்சம் ரவை பேஸ்டு கேக், கொஞ்சம் பக்லாவா டச்னு (நட்ஸ் + சுகர் சிரப்)... பார்க்கவே யம்மியா இருக்கு. :) ஓக்கே, இதையும் செய்து சாப்பிடிடுவோம்! ;) வாழ்த்துக்கள்!

//வேல், எப்படிங்க அவ்வளவு தைரியமா நான் செய்த ஸ்வீட்டுக்கு நீங்க
ஃப்ரீயா இன்ஷுரன்ஸ் வேற கொடுக்கறேன்னு.......//

ஹாஹா... நல்லா சிரிக்கவெச்சிங்க லாவி! :D :)

அன்புடன்
சுஸ்ரீ

எப்போ வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க சீதாலக்ஷ்மி.....பெரிய விருந்தே ஏற்பாடு பண்ணிடறேன். இருந்தாலும் அங்கிள் கிட்டே போடுக்குடுக்காம கண்டிப்பா இருப்பேன் ;) சொல்லும்போதே இனிக்குது. சீக்கிரம் ட்ரிப் போடுங்க. வாழ்த்துக்கு நன்றி.

கண்டிப்பா டேக்ஷரே வித்தியாசமா இருக்கும் இமா. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. நன்றி.

இல்ல வனி மன்றத்தில் எங்கையாவது சொன்னால் போச்சு......நாம் அதை கண்டித்திருந்தால் கண்டிப்பாக நம்மையே கடிந்துக் கொண்டிருப்பார்கள்....அதான் என் குறிப்பில் இப்படி போட்டால் எனக்கு பொறுக்கவே இல்லை.

இளையா உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.

பிரேமா உங்களின் வாதம் மட்டுமில்லை உங்களின் பின்னூட்டம் படிக்கவே ஆசையாக இருக்கு. என் பெரியம்மா எப்பவுமே சொல்லுவார் சமைப்பதை விட அதை பதமாக பரிமாறவும் தெரிந்திருக்கணும் என்று......இன்னைக்கு நான் இவ்வளவு செய்யறேன் என்றால் அதற்க்கு ஒரு காரணம் அவங்களும் .....மிக்க நன்றி.

ரம்மி கண்டிப்பா.....அடுத்த துண்டை கார்த்திக்கு கொடுங்க சரியா.....செய்துட்டு சொல்லுங்க. வாழ்த்துக்களுக்கு நன்றி.

செய்துட்டு சொல்லுங்க கலா காத்திருக்கேன். நன்றி.

இங்குள்ள ஒரு கடையில் சாம்பிள் வைத்திருந்தார்கள்....என்னை வற்புறுத்தி சாப்பிட சொன்னார்கள்.....சின்னதாய் எடுத்து கடித்தேன் பிடித்தது......முழு பீஸும் எடுத்க்கவா என்றேன்....சிரித்தார்.....பிறகு அவருடன் எப்படி செய்ய என்று கேட்டு செய்தேன். செய்து பாருங்க. வாழ்த்துக்கு நன்றி. என்னை வெச்சி காமடி கீமடி பண்ணலியே (சும்மா....)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கேக் எல்லாம் பக்கத்துல்ல நிக்க முடியாது போலவே!!! பிரமாதம் லாவி. பெரிய செய்முறை, பண்ணுவது சிரமம் மாதிரியே இருக்கு :-(

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இந்த குறிப்பு வந்தபின் பலமுறை செய்துவிட்டென்..ஒவ்வொரு முறையும் ரொம்ப அருமையாக வந்தது..பிரியாணியை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது உங்க பஸ்பௌசா....ரவையில் இப்படி ஒரு ஸ்வீட்டா என்று விருந்தினர்கள் அசந்து போயிட்டாங்க..முக்கியமா என் கணவர், இரண்டு பையன்களுக்கும் ரொம்ப பிடித்தது...செய்யவும் எளிமையாகத்தான் இருந்தது..

சுவையான குறிப்பை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.