சிக்கன் தோபியாசா

தேதி: June 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

சிக்கன் - 400 கிராம்
வெங்காயம் - 2 (நீளமாக அரிந்தது)
தக்காளி - ஒன்று சிறியது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லி இலை சிறிது
மல்லி பொடி - 1 1/2 தேக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
அரைக்க:
வெங்காயம் - 2
பட்டை - சிறிய துண்டு
ஏலம் - 2
கிராம்பு - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி


 

வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் அரைத்த விழுது மற்றும் எல்லா பொடிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்..
பின்னர் அதில் தயிர், பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும்.
அவை நன்கு வதங்கியவுடன் கறியை சேர்த்து நன்கு வதக்கவும்.
கறி நன்கு வதங்கியவுடன் ஒரு கப் நீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
கறி வெந்தவுடன் பொரித்த வெங்காயம் போட்டு கிளறி, மல்லி இலை தூவி இறக்கவும்.
சிக்கன் தோபியாசா ரெடி. .

இது ஒரு வடஇந்திய உணவு, சாம்பார் சாதம், கலந்த சாத வகைகளுக்கு, ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றுக்கு சிறந்த பக்க உணவு ஆகும். காரம் தேவை என்றால் கூட்டிக் கொள்ளலாம். இது ஒரு வடஇந்திய உணவு, தோ என்றால் இரண்டு, பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள். அதாவது இருமுறை வெங்காயம் சேர்ப்பது அல்லது இரண்டு மடங்கு வெங்காயம் சேர்ப்பது என பொருள் கொள்ளலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா செய்திருக்கீங்க. போட்டோஸ் பளிச்சுன்னு நல்லா இருக்குங்க குறிப்பு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்லா இருக்கு சீக்கிரமே செய்து பார்கிறேன் கடைசி படம் அதன் சுவையை சொல்லுது வாழ்த்துக்கள் by Elaya.G

சிக்கன் தொபியாசா ரொம்ப நல்ல இருக்குங்க... இந்த வாரமே செய்திடலாம்.. படங்கள் பளீரென அருமையா இருக்கு...

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

எனது குறிப்பை உடனே வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றி.

வனிதா,
உண்மையிலேயே இன்று உங்கள் புதிய குறிப்பை எதிர்பார்த்துதான் வந்தேன்(ஸேம் பின்ச் சொல்லலாம்னு பார்த்தேன்).நான் அனுப்பியது பிறகு வரும் என நினைத்தேன் ஆனால் வந்த இடத்தில என் குறிப்பையும் உங்கள் முதல் வருகையும் கண்டு இன்ப அதிர்ச்சி . வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, உங்கள் குறிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்பு இளையா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி,கண்டிப்பா செய்து பாருங்கள்.

தோழி பிரேமா ,
பதிவுக்கு ரொம்ப நன்றி,கண்டிப்பா செய்திட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

..

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

குறிப்பு நல்லாயிருக்கு. அதற்க்கு கொடுத்திருக்கும் பெயர் விளக்கமும் நன்றாக இருக்கு. ஆனா ஒரு சின்ன சந்தேகம் நிறைய வெங்காயம் ஓகே ஆனாலும் இரண்டு வகையான வெங்காயம் தானே சேர்க்கணும்.......இல்லை எனக்கு சொல்லி கொடுத்தவங்க அப்படி தான் சொல்லி கொடுத்தாங்க அதான் கேட்டேன்.....

வனி நானும் உங்களுடைய குறிப்புன்னு நெனச்சேன்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப நன்றி லாவண்யா ,சின்ன வெங்காயமும் போடலாம்,ஆனால் கொஞ்சம் வேலை ஜாஸ்தி அவ்வளவுதான்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

Super. Idhu taste panni iruken. inikku than epdi seynumnu parkiren.very thanks