திருமணங்களுக்கான ஹென்னா டிசைன்

தேதி: May 26, 2012

4
Average: 3.9 (27 votes)

 

ஹென்னா கோன் - ஒன்று

 

மணிக்கட்டில் பூ வரைந்து அதன் மேலே வளைவுகள் வரைந்து இலைகள் கொண்டு நிரப்பவும்.
அதன் மேல் கோபுரம் போன்ற வடிவம் கொடுத்து அதனுள் விருப்பம் போல் நிரப்பவும்.
அதை சுற்றி மயில் தோகை போன்ற வடிவம் வரைந்து மீண்டும் வளைவுகள் வரையவும்.
வளைவுகள் மேல் சிறு சிறு கோபுரங்கள் வரைந்து அவற்றின் உள்ளே புள்ளிகள் வைக்கவும்.
முதலில் வரைந்த பூ டிசைனுக்கு கீழே கோடுகள் வரைந்து விருப்பம் போல் நிரப்பவும். கடைசியாக முதலில் வரைந்த அதே பூ வடிவம் வரைந்து இலைகள் வரைந்து முடிக்கவும்.
விரல்களில் படத்தில் உள்ள டிசைன் வரைந்து முடிக்கவும்.
சுலபமாக வரையக்கூடிய டிசைன் இது. சிறு பிள்ளைகள் கைக்கு தோதான டிசைனும் கூட.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹையா!! நான்தான் முதலாவதா! ;)
டிசைன் அழகா இருக்கு வனி.

‍- இமா க்றிஸ்

அருமையிலும் அருமை. உடனே போடனும் போல இருக்கு கைகளில்

டிசைனை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

இமா... முதல் பதிவு!!! எவ்வளவு காலத்துக்கு பின் ;) மகிழ்ச்சியா இருக்கு. நன்றி இமா.

லீனா... மிக்க நன்றி. அவசியம் போட்டு பார்த்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகோ அழகு. அதுலேயும் அந்த பில்லிங் செய்து நடுவில் சிறிய வட்டம் இடைவெளி விட்டிருக்கீங்க பாருங்க.....என்னத்த சொல்ல.....எனக்கு ஹென்னா சீக்கிரமே போவரதுக்கு ஒரு ஐடியா மட்டும் கண்டு பிடிச்சி வைங்க. அப்போ தானே அங்கே வந்தால் குறைந்த காலத்திலே அதிக டிசைன் போட்டுக்க முடியும் ;) லவ்லி. பாராட்டுக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நன்றி. சீக்கிரம் போக கூடிய ஹென்னாவை இனி நான் கண்டு தான் பிடிக்கனும் ;) நிறைய பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறதுன்னு கைக்கு வேலை கொடுத்தா சீக்கிரம் போகும்... ஆனா அது நம்ம லாவிக்கு ஒத்து வராதே ;) அதனால் முடிஞ்சவரை கையை நிரப்புவோம்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஐயோ வனிதா,கொன்னுட்டீங்க போங்க ,என்ன ஒரு புத்திசாலித்தனம் :-) ,ஒரே பொண்ணுக்கு இத்தனை திறமையா ,சுத்திபோடுங்க முதல்ல

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

முடியல... என்னால முடியல... ஏன்??? ஏன்?? ஏன்??? நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு... எப்படியோ நீங்க சொன்னா சரி தான் :) நன்றி பாத்திமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிஷைன் மட்டுமா பொறுமை கலைநயம், உழைப்பு எல்லாம் தெரிகிறது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

Very nice. design is very superbbbbbbbb... today i will try this. Your pictures also very nice.

மிக்க நன்றி. குட்டீஸ் போட சொல்லி உட்கார்ந்து கையை பொறுமையா காட்டும் போது போடும் நமக்கும் தானா வந்துடும் போல. எங்க நாத்தனார் மகள் கையில் போட்டது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பெயர் அழகா இருக்கு. :) மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வழக்கம் போல் டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. வரைவதற்கும் ஈஸியா இருக்கு. உள்ளங்கையில் வரைந்த டிசைன் சூப்பர். வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி. ஆக்‌ஷுவலா இந்த டிசைனை எங்க இருந்தோ டவுன்லோட் பண்ணி தான் வெச்சிருந்தா. ஆனா அதை அப்படியே போட கூடாதுன்னு அவளே என்ன சேஞ்சஸ் வேணும்னு கேட்டு போட்டுகிட்டா. அவளோட டிசைனுன்னு தான் சொல்லனும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹென்னா டிசைன்ஸ் சுலபமா அழகா விரிவா சொல்லி தந்திருக்கீங்க... என் கல்யாணத்துக்கு தான் இதை எல்லாம் மிஸ் பண்ணிட்டேனேன்னு வருத்தமா இருக்கு... அப்பறம் நம்ம நார்த் இந்தியாவில் சைனா மேஹெண்டிநு இருக்காம் அது நல்ல டார்க்கா பிடிக்குமாம் என் பிரெண்ட் சொன்னாங்க.

உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். (வனி அமுத சுரபி மாதிரில)

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மிக்க நன்றி. மெஹந்தியில் கூட சைனாவா???!!! அவனுக்கும் மெஹந்திக்கு என்ன சம்பந்தம்? நம்ம ஊர் மெஹந்தி கலர் கம்மியா வந்தாலும் உண்மையான மெஹந்தி, தரமா இருக்கும். சைனாவெல்லாம் ட்ரை பண்ணாதீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

it is very nice i try to do this do u know mahathi very well.....plz u teach me ......i like ur design

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மிக்க நன்றி. ரொம்ப நல்லா தெரியாதுங்க, ஏதோ அந்த நேரம் தோணுறதை போடுவேன். மூட்’அ பொறுத்து நல்லா வரும் அல்லது சொதப்பும் ;) இங்க இருக்குறதை அப்படியே ஸ்எப் ஸ்டெப்பா ஃபாலோ பண்ணுங்க, என்ன சந்தேகமோ கேளுங்க... 2 டிசைன் போட்டா மூனாவதில் நீங்க எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க :) கத்துக்குறதுக்கு ஆர்வம் இருக்கே... சுலபமா வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா,
உல்லங்கையில் வரும் வெற்றிலை டிசைன் எப்படி போட்டிங்க.............அது எனக்கு புரியல ஏதோ போட்டுவிட்டேன்................உங்க அளவுக்கு இல்லை........................சுமாராதான் போட்டேன்................நன்றி

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அடடா... அது இன்னும் கொஞ்சம் டீடெய்ல்ஸ் கொடுத்திருந்தா உங்களுக்கு சுலபமா இருந்திருக்கும். பரவாயில்லை போட்டுட்டீங்க தானே... இனி டிசைன்ஸ் இன்னும் கொஞ்சம் ஸ்டெப்ஸ் அதிகமா கொடுக்க பார்க்கிறேன். போட்டு பார்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அனு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா,
நீங்கள் தெளிவாக தான் கொடுத்து இருக்கிங்க.........எனக்குதான் போட முடியல என் பையன் அழுதான் அவசரமா போட ஆரம்பித்து முடித்து விட்டேன்................
வனிதா அக்கா ஒரு சின்ன வேண்டுகோள்.................... உங்கள் புகைப்படம் இனைத்து அனுப்பவும்...................... இவ்வளவு திறமையான உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை.................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

ஹிஹிஹீ. :D உங்கள் அன்புக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா