இறால் கருவாட்டு சம்பல்

தேதி: June 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காய்ந்த இறால் - 2 கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 3
நாட்டு வெங்காயம் - 4 அல்லது 5
முழு மிளகு - அரை ஸ்பூன்
கல் உப்பு - கால் ஸ்பூன்


 

காய்ந்த இறாலை ஒரு சட்டியில் போட்டு வாசம் வரும்வரை லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு மிக லேசாக (விட்டு விட்டு) சுற்ற விட்டு எடுக்கவும்.
பிறகு தோலை ஒரு முறத்தில் போட்டு புடைத்து எடுத்தால் சதைப்பாகம் தனியாக வந்து விடும்.
பிறகு அதை மீண்டும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு காய்ந்த மிளகாய், மிளகு, உப்பு மூன்றையும் போட்டு கொரகொரப்பாக பொடித்து, அத்துடன் தேங்காய் துருவலையும், நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு லேசாக 2 சுற்ற விட்டு எடுத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு ஏற்கனவே பொடித்து வைத்துள்ள இறால்பொடியை இத்துடன் நன்றாக கலந்துக் கொள்ளவேண்டும்.
இது ரசம் வைத்து சாப்பிடக்கூடிய சாப்பாட்டிற்கு நன்றாக இருக்கும்.


இறால் கருவாட்டுக்கு உகந்தது ஆற்று இறால் தான்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் அஸ்மா,
இந்த சம்பலை செய்து பார்த்தேன். சுவையும், மணமும் பிரமாதமாக இருந்தது. நன்றி!!!

Vazhga Tamil!!!

Dear சித்ரா!
சம்பல் செய்து பார்த்தது சந்தோஷம்!