சிக்கன் சேவு

தேதி: July 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

சிக்கன் எலும்பில்லாதது - 100 கிராம்
அரிசிமாவு- 25 கிராம்
கான்ப்ளவர்-25 கிராம்
கடலைமாவு-25 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
சிக்கன் 65 பொடி- 1 ஸ்பூன்
சீரகம்- கால் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எலுமிச்சை சாறு- 4 ஸ்பூன்


 

சிக்கனை சுத்தம் செய்து மிக்ஸியில் ஒரு சுற்று அடித்து தனியாக வைக்கவும்.

அதில் எலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை சேர்த்து பிசைந்து அரைமணீ நேரம் ஊற விடவும்.

கையில் எண்ணெய் தேய்த்து சிறு உருண்டை எடுத்து சுண்டுவிரல் அளவு நீளவாக்கில் உருட்டவும்.

எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

அதன் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இனிப்பு சேவு ,கார சேவு தான் தெரியும். இது வித்தியாசமான குறிப்பு . கண்டிப்பா செஞ்சு பார்க்குறேன் .நன்றி .

புதுசாக இருக்கு.அருமை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.