கோக்கனட் லைம் மஃபின்ஸ்

தேதி: July 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (5 votes)

கோக்கனட் லைம் மஃபின்ஸ் வித் க்ரீம் சீஸ் ஃப்ராஸ்டிங் - இது தான் இந்த குறிப்பினுடைய பெயர்.

 

மைதா மாவு - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப் - 3/4 கப்
ஃப்ரெஷ் தேங்காய் துருவல் - கால் கப்
வெண்ணெய் - கால் கப்
முதல் தேங்காய் பால் - கால் கப்
பசும்பால் - கால் கப்பில் பாதி
முட்டை - ஒன்று
லைம் சாறு - ஒரு மேசைக்கரண்டி
ஃப்ராஸ்டிங் செய்ய:
க்ரீம் சீஸ் மற்றும் வெண்ணெய் - தலா 100 கிராம்
பவுடர்ட் சுகர் - 2 கப்புக்கு குறைவு
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி


 

மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து வைக்கவும். அவனை 180Cல் முற்சூடு செய்யவும்.
தேங்காயை துருவினாலும் சரி, இல்லை பின்னால் உள்ள ப்ரவுன் கலர் பகுதியை நீக்கி விட்டு மிக்சியில் சுற்றி எடுத்தாலும் சரி. அதை மாவுடன் கலந்து கொள்ளவும்.
சர்க்கரை, தேங்காய் பால், பசும்பால், உருக்கி ரூம் டெம்பரேச்சருக்கு வந்த வெண்ணெய் அனைத்தையும் ஒரு கப்பில் கலந்து கொள்ளவும். கையால் கலந்தால் போதுமானது. எலக்ட்ரிக் ப்ளெண்டர் பயன்படுத்த வேண்டாம்.
சர்க்கரை கரைந்த இந்த கலவையை மாவில் ஊற்றி லைம் ஜூஸும் கலந்து வைக்கவும்.
மஃபின் செய்யும் ட்ரேவில் லைனர் வைத்து கலவையை 3/4 பாகம் நிரப்பவும். இனி 20 - 30 நிமிடம் பேக் செய்யவும். டூத் பிக்கால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது எடுத்தால் சுவையான கோக்கனட் லைம் மஃபின்ஸ் தயார்.
ஃப்ராஸ்டிங் செய்ய வெண்ணெய் மற்றும் சீஸ் கலந்து ப்ளெண்டரில் சாஃப்டாக அடிக்கவும். இதில் சிறிது சிறிதாக பவுடர்ட் சுகர் சேர்த்து அடிக்கவும். குறைந்த ஸ்பீடில் அடித்தால் போதுமானது. சர்க்கரை அளவு பார்த்து நிறுத்தி விடவும். அதிகமானால் ஃப்ராஸ்டிங் பைப் செய்யும் போது தொடர்ச்சியாக வராமல் உடைந்து விழும். கடைசியாக லைம் ஜூஸ் கலந்து விடவும். இதை கேக் மேல் பைப் செய்யலாம், அல்லது சாதாரணமாக பூசி விடலாம். மேலே விருப்பம் போல் அலங்கரிக்கவும்.
இவை சுவை சூப்பராக இருக்கும். ரொம்ப சாஃப்ட் & ஸ்பாஞ்சி. ஆனால் மேலே க்ரிஸ்பியாக இருக்கும். முட்டை சேர்ப்பதால் நன்றாக எழும்பி வரும். மிதமான சூடோடு சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட அட அட..........என்ன அருமை.........வனி வனி தான்.........

தோழி

இது ரொம்ப புதுசா இருக்கு அருமை

K. ஐஷ்வர்யா கிருஷ்னன்

அழகான கலர்புல்லான டேஸ்ட்டான கோக்கனட் லைம் மஃபின்ஸ்!!!

பார்க்கும் போதே கண்ணை கவர்கிறது!! பார்சல் ப்ளீஸ்....

எனக்கென்னமோ உங்க கணவர் நல்ல குண்டா இருப்பாரோன்னு தோணுது... பின்னே இப்படி மனைவி வித வித சமைச்சு குடுத்தால் அவர் என்ன செய்வார் பாவம்...

கோக்கனட் லைம் மஃபின்ஸ் டக்கர் வனி.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வனி,
அருமையான கோக்கனட் லைம் மஃபின்ஸ்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு வனிதா

கோகனட் டேஸ்டுடன் மஃபின்ஸ் சூப்பராக இருக்குமே, அதுவும் மேலே இளம்பச்சை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் ஸ்டார் வடிவம் அருமையாக வந்திருக்கு.

பாராட்டுக்கள் வனிதா

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப அழகா இருக்கு உங்க கடைசி படம். நிச்சயம் ட்ரை பண்ணி பார்க்கறேன். பார்க்கவே ரொம்ப ஆசையாஇருக்கு. சூப்பர் வனிதா. வாழ்த்துக்கள்.
அபி.

வாழ்க வளமுடன்

வனிதா இதறக்கு பசும் பால்தான் போடனுமா? பிறகு தேங்காய் பால் சேர்பதால் கேக்கில் தேங்காய் ஸ்மெல் வருமா? விளக்கம் plz

வாவ்! சிம்ப்ளி சுபர்ப்! கலர்ஃபுல்லா.... உடனே சாப்பிடணும் போல இருக்கு.

‍- இமா க்றிஸ்

கோக்கனட் லைம் மஃபின்.என் பிழ்ளைகலுக்கு பிடித்த ஒன்ரு பாக்கும்போதே சாப்டனுன்னு தோனுதே, வாழ்த்துக்கள் வனிதா.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

பானு... மிக்க நன்றி :)

ஐஷ்வர்யா... மிக்க நன்றி :)

சுபா... மிக்க நன்றி. அவசியம் பார்சல் வந்துடும். :)

பிரேமா.. மிக்க நன்றி. //உங்க கணவர் நல்ல குண்டா இருப்பாரோன்னு தோணுது// - சிரிப்பை அடக்கவே முடியல :)

கவிதா... மிக்க நன்றி :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி :)

அபி... மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

பர்வீன்... மிக்க நன்றி. பசும்பால் கட்டாயம் இல்லை. அதுக்கு பதிலும் தேங்காய் பாலே சேர்க்கலாம். தேங்காய் மஃபின் தானே... தேங்காய் வாசம் வர வேண்டும் என்று தானே தேங்காய் பால், தேங்காய் எல்லாம் சேர்த்திருக்கோம். :)

இமா... மிக்க நன்றி :) எடுத்துக்கங்க.

மகா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி உங்க வீட்டுக்கு வந்தா வித விதமா சாப்டலாம் போல..ரொம்ப நல்லா இருக்கு ஆன இதை என்னால செய்ய முடியுமானுதன் தெரியல. வாழ்த்துக்கள் வனி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சூப்பர்....மஃபின்ல தேங்காய் சேர்த்து ட்ரை பண்னினதேயில்ல..
உங்க கோக்கெனெட் கேக்கும் ட்ரை பண்ணனுமின்னு நினைச்சுகிட்டுதான் இருக்கேன் :)

அழகா அருமையா ப்ரசண்ட் பண்ணியிருக்கீங்க...கோக்கனெட் சுவை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும் வீட்டில்
சோ கண்டிப்பா ட்ரை பண்ணுவேன்..விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

குமாரி... மிக்க நன்றி. முடியும்போது கண்டிப்பா செய்து பாருங்க :)

இளவரசி... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து குட்டீஸ்கு பிடிச்சுதான்னும் சொல்லுங்க. எங்க இருக்கீங்க இப்போ?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

parkavey romba azhaga irrukku. ennoda oven ku vela kuduthutinga. naan dhan oven use panna lazyness ah irukkum. superbbbbbbbb ah panni irukkinga. vazhthukkal! keep going:-)

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மிக்க நன்றி. அவசியம் அவனை பயன்படுத்திடுங்க ;) எப்படி வந்ததுன்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லைன்னு கேக் ரெசிப்பீஸ்ல பின்னி பெடல் எடுக்கறீங்க ஒவ்வொருத்தரும். இமாம்மாவும் கோதாவில் இறங்கிட்டாங்க. பார்க்கிற என்னை மாதிரி ஆளுங்களுக்கு தான் மிரட்சியா இருக்கு. உங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் நடுவே வீடு எதாச்சும் காலி இருந்தா கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. யாரும் அங்கே குடியேறுறதுக்கு முன்னாடி நான் வந்துடறேன் ;) பிரசண்டேஷன் மிகவும் அருமை. இந்த அழகான மஃபின்ஸை கடிக்கவும் மனசு வருமா என்ன? பார்த்துட்டே இருக்கலாம் போங்க.. இன்னும் புகழ தான் நினைக்கிறேன். வார்த்தைகள் கிடைக்கல வனி. சூப்பர் !! சூப்பர் !! சூப்பர் !!! வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அட ஆமா இல்ல .இங்கு எனக்கு மட்டும் தான் தேங்காய் பிடிக்கும்.தேங்கா ஸ்மெல் வந்தா என்னை தவிர யாரும் சாபிடமாட்டங்க அதான் கேட்டேன்.உடன் பதிலுக்கு நன்றி வனிதா

கல்பனா... மிக்க நன்றி. இமாகிட்டலாம் நான் நிக்கவே முடியாதுங்க. அவங்க அனுபவம் எங்க, நான் எங்க??? :) நான் போட்டோ எடுக்கும் முன்பே மஃபின்ஸ் காணாம போச்சு... அத்தனை டேஸ்டியா இருந்தது... அவசியம் ட்ரை பண்ணி பாருங்க. மிக்க நன்றி.

பர்வீன்... ஆமாம் தேங்காய் மனமும், சுவையும் அதிகமா தான் இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மஃபின்ஸை பார்த்துட்டே இருக்க தோனுது சாப்பிடவே மனசு வராது போல அவ்வளவு அழகு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வர வர படங்கள் ரொம்ப கிரியேடிவ் இருக்கு வனி. டெகரேசன் ரொம்ப சூப்பர். கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. அழகா இருக்கு :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மிக்க நன்றி. குட்டிக்கு ரொம்ப பிடிச்சுது... சுகிக்கும் பிடிக்கும், டைம் கிடைச்சா செய்து பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா