ரவா கேசரி (மைக்ரோவேவ் முறை)

தேதி: December 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

1. வறுத்த ரவை - 1/2 கப்
2. சர்க்கரை - 1/2 கப்
3. முந்திரி, திராட்சை - கொஞ்சம்
4. நெய் - 2 மேஜைக்கரண்டி
5. தண்ணீர் - 2 1/4 கப்
6. ஏலக்காய் - 2


 

ரவை, சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
தண்ணீரை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
முந்திரி திராட்சை'யை 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு வறுக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் பொடித்த ரவை, சர்க்கரை, ஏலக்காய், வறுத்த முந்திரி திராட்சை அனைத்தையும் அதில் சேர்த்து நன்றாக கலந்து மைக்ரோவேவ் 'HI'ல் 4 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கலந்து மீண்டும் 3 நிமிடம் வைக்கவும். கடைசியாக 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு கலந்து மீண்டும் 3 நிமிடம் வைத்து எடுக்கவும்.


விரும்பினால் கேசரி கலர் கலந்து ரவை சேர்க்கும் போது சேர்க்கலாம். பொதுவாக மைக்ரோவேவில் வைக்கும் போது கொதிக்காத நீர் கலந்து வைப்பது உண்டு, அப்படி செய்தால் கேசரி பசை போல் வரும், கொதிக்க வைத்து பின் கலந்து வைத்தால் அடுப்பில் செய்வது போல் நன்றாக வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi vanitha mam,
I have LG microwave oven, in that High temperature option is not there, in what temperature should i cook instead of high?

Hi vanitha mam,
I have LG microwave oven, in that High temperature option is not there, in what temperature should i cook instead of high?

வனி,

நேற்று ஈவினிங் உங்க‌ மெத்த‌ட்ல‌ மைக்ரோவேவில் ர‌வா கேச‌ரி செய்தேன். சூப்பரா வந்தது வனி! எங்கவீட்டில எல்லாருமே கேசரி பிரியர்கள். ;) ரொம்ப பிடித்து சாப்பிட்டோம்.

மைக்ரோவேவ் கேசரிக்கு, ர‌வையை அப்ப‌டியே வ‌றுத்துப்போட்டுதான் இதுவ‌ரை ப‌ண்ணியிருக்கேன். இப்ப‌ ர‌வை, ச‌ர்க்கரை, ஏலக்காய் எல்லாம் மிக்ஸியில் அரைத்து சேர்த்த‌து ந‌ல்லா இருந்தது. உங்க கூடுதல் டிப், தண்ணீரை கொதிக்கவிட்டு ரவை சேர்ப்பதும் அருமை. ந‌ன்றி வ‌னி.

அன்புடன்
சுஸ்ரீ

வனி, வெல்கம் பேக்:) மீண்டும் குறிப்புகள் குடுக்க ஆரம்பித்து விட்டீர்களா. அப்படியே மன்றத்திலும் பழையபடி வந்து கலக்குங்க. குட்டீஸ் இருவரும் நலமா?

மைக்ரோவேவில் இதுவரை செய்ததில்லை. என்றாவது செய்து விட்டு சொல்கிறேன்.

வின்னி... நலமா? நாங்கள் நலம். எங்கே பழையபடி வர முடிகிறது.... :(( வீட்டில் வேலை செய்ய விடுவதில்லை.... அதனால் கிடைக்கும் சிறிது நேரமும் இங்கு சுற்றி கொண்டு இருக்கிறேன். பொழுது போக வேண்டுமே. ;) விரைவில் வருகிறேன் மன்றத்துக்குள். உங்க பதிவை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.... :) மிக்க நன்றி வின்னி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா நலமாக இருக்கீங்களா.உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள். உங்க மை.வே. கேசரி செய்துபார்த்துவிட்டேன்.நன்றாகவந்துவிட்டது. இந்தமுறையை தந்ததற்கு நன்றி.
இங்கு கேசரி பிரியர்கள் நிறைய இருக்கிறார்கள்.
உங்க மகன் எப்படி இருக்கிறார்.யாழினி எப்படி இருக்கிறா.மகனுக்கு என்ன பெயர் வைத்தீர்கள். நலமே இருக்க பிரார்த்திக்கிறேன்.(உங்க கத்தரிக்காய் காரக்குழம்பு எங்க பேவரிட்.) நன்றி.

அன்புள்ள அம்முலு... செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. :) பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். குழந்தைகள் நலம். மகனுக்கு இன்னும் பெயர் முடிவு செய்யவில்லை :(. பெயர் முடிவு செய்ததும் நிச்சயம் சொல்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் நலமாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

கத்திரிக்காய் குழம்பு பிடிச்சிருக்குன்னு கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.... ;) மிக்க நன்றி அம்முலு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா
நாங்க இப்ப தான் மைக்ரோ ஓவன் வாங்கினோம் . உங்க ரவா கேசரி தான் நாங்க முதல் முதல்லா செஞ்சது. ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு . நன்றி வனிதா ...

ரம்யா ஸ்ரீனி... ரொம்ப ரொம்ப ரொம்ப குஷியா இருக்கு. புது மைக்ரோவேவில் முதலில் என் குறிப்பு. அது எனக்கு கிடைச்ச பெரிய பரிசு. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா