தேதி: September 5, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா மாவு - அரை கப் (60 கிராம்)
கண்டன்ஸ்டு மில்க் - அரை டின் (200 கிராம்)
Unsalted பட்டர் - 25 கிராம் + ஒரு மேசைக்கரண்டி (பாத்திரத்தில் தேய்க்க)
முட்டை - 1 அல்லது 2
வெனிலா எசன்ஸ் - சிறிது
பேக்கிங் பவுடர் - கால் மேசைக்கரண்டி
முந்திரி / நட்ஸ் வகைகள் - சிறிது
அவனை 180 Cல் முற்சூடு செய்யவும். பேக் செய்ய பயன்படுத்த போகும் பாத்திரத்தை வெண்ணெய் தேய்த்து தயாராக வைக்கவும். முட்டையை தனியாக உடைத்து ஊற்றி முதலில் கலந்து கொள்ளவும்.

முட்டையுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதில் ரூம் டெம்பரேச்சரில் உள்ள வெண்ணெய் சேர்க்கவும். [கண்டன்ஸ்டு மில்க் இனிப்பு போதாது என்றால் இந்த நிலையில் சிறிது சர்க்கரை சேர்க்கவும்]

மைதாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து அதில் முட்டை கலவையை சேர்க்கவும்.

கடைசியாக வெனிலா எசன்ஸ் மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகள் கலந்து பேக் செய்ய போகும் பாத்திரத்தில் ஊற்றி 20 - 30 நிமிடம் பேக் செய்யவும்.

ஒரு டூத் பிக் / கத்தியை விட்டு அது சுத்தமாக வெளியே வந்தால் எடுத்து விடவும். (மேலே நல்ல ப்ரவுன் கலர் வரும். நான் அதை நீக்கி இருக்கிறேன்.) இந்த போகிபா செய்வது சுலபம், சுவை அருமையாக இருக்கும். ரொம்ப ரொம்ப சாஃப்ட்டாகவும் இருக்கும்.

இதுவும் மாலத்தீவு பிரபலம் தான். இதை Gerikiru boakiba / Kiru boakiba என்பார்கள். Boakiba என்றால் கேக், Geri kiru / Kiru என்றால் பசும்பால் / பால் என்று அர்த்தம்.
Comments
Vanitha akka...
Hey nan thaan first... Vani akka... Superb ah iruku... oru plate inga anupunga. enkitta oven illa. adhaan.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
Vanitha akka...
வனி அக்கா கிரு போகிபா சூப்பர் கடைசி ப்ளேட் நல்லா டாலடிகுது ஹ்ம்ம் ஈசி அண்ட் டாஸ்ட்டி டிஷ் அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
வனிதா
யம்மி யம்மி கிரு போகிபா எனக்கு தான்... சூப்பரா இருக்கு பாக்கவே வாழ்த்துக்கள்....
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நித்யா
மிக்க நன்றி :) நான் தான் லாஸ்டு ;) கேக் அனுப்பிடுறேன்...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கனி
மிக்க நன்றி. செய்து பாருங்க கனி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இந்திரா
மிக்க நன்றி :) செய்து பார்த்து சொல்லுங்க இந்திரா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிரு போகிபா
வனிதா உங்கள் கிரு போகிபா அருமை செய்துபார்த்து விட்டு சொல்கிறேன். இன்னும் அருமையான குறிப்புகள் வர வாழ்த்துக்கள்.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வனி
வனி
அருமையான சுலபமான குறிப்பு :) படங்கள் வழக்கம் போல நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
hai
கிரு போகிபா அருமை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வனி அக்கா
வனி அக்கா....கிரு போகிபா அருமையாக உள்ளது. செய்து பார்க்க ஆசை தான் but அவன் இல்லையே ...../
ஃபர்வீன்
மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா
மிக்க நன்றி. நேரம் கிடைச்சா செய்து பாருங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
musi
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Vibgy
மிக்க நன்றி :) அவன் இல்லையா... விடுங்க, நான் செய்து அனுப்பிடுறேன் ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிரு போகிபா
வனிதா மேடம், இன்று கிரு போகிபா செய்தேன்... செம யம்மி... செய்வதும் ரொம்ப சுலபமாக இருந்தது...
என்னுடைய அவனில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் எடுத்தது ;-) டேஸ்ட் சூப்பரா இருந்தது... :)
ஆனால் ஒரே ஒரு கேள்வி அது என்ன கிரி அலுவாக்கு மட்டும் இவர்ன்னு மரியாதை கொடுத்துட்டு நம்ம கிரு போகிபாவை மட்டும் இது அப்படின்னு சொல்லிட்டீங்க???? :D
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து அக்கா
அட... இதெல்லாம் கூட செய்தீங்களா?? ரொம்ப நன்றிங்க :) நீங்க நம்ம ஊர் சமையல் தான் அதிகம் செய்வீங்கன்னு நினைச்சேன். மாலக்காறங்க ரொம்ப சோம்பேரி ;) எல்லாமே சுலபமான சமையலா தான் இருக்கும்.
மறியாதை கொடுத்ததுக்கு கேள்வி கேட்டீங்கன்னு மாத்தினா, இதுக்கும் ஒரு கேள்வியா??? ;) நடத்துங்க நடத்துங்க.
பாப்பாக்கு பிடிச்சுதா கேக்?? சாப்பிட்டாங்களா? 45 நிமிஷமா??!! அப்போ கெட்டியா இருந்ததா?? ஒரு வேளை சூடு பத்தலயோன்னு தெரிஞ்சுக்க தான் கேக்கறேன்... சாஃப்ட்டா வந்திருந்தா கரக்ட் தான். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா.....
வனிதா,
:) நான் அவன் பயன்படுத்துவது ரொம்ப ரேர் தான்... இது என்னவோ செய்யனும்னு தோணிச்சு... :)
என் மகளுக்கும் பிடித்தது... பிரவுன் கலரை காட்டி அது தான் சாக்லெட் என்று ஏமாற்றி சாப்பிட வைத்தேன் ;-) எங்களுக்கும் ரொம்ப பிடித்திருந்தது :)
நல்லா சாப்ட்டா தான் இருந்தது.. நான் அவனை 350 Fல் வைத்து செய்தேன்... :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து அக்கா
அப்போ டெம்பரேச்சரும் சரி தான்... :) சாஃப்ட்டா வந்திருந்தா சரியா தான் பண்ணிருக்கீங்க. சில அவன் இப்படி தான் நேரம் மாறுபடும். எனக்கு இங்க ஓனர் அவன் கொடுத்துட்டார், என் அவன் உள்ள தூங்குது... இது எனக்கு அவ்வளவா பிடிக்குறதே இல்லை. அதனாலயே அதிகம் பயன்படுத்துறதில்லை. மகள் சாப்பிட்டது தான் அதிக மகிழ்ச்சி எனக்கு :) அவளுக்காகவே சாக்லேட் ரெசிபி கொடுக்கணும் போலிருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி சுவையான சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வனி
வனி,
கிரு போகிபா... அட சூப்பர்பா-னு சொல்லவைக்குது! :)
செய்யறதுக்கு தேவையான பொருட்களும் சரி, செய்முறையும் சரி, வீட்டில ஈசியா இருக்கிறதா, சுலபமானதா இருக்கு. என்ட் ரிசல்ட்டும் அருமை, உடனே செய்துபார்க்க சொல்லுது! வாழ்த்துக்கள் வனி!
அன்புடன்
சுஸ்ரீ
சுவர்ணா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஸ்ரீ
மிக்க நன்றி :) செய்து பார்க்க சொல்லுச்சுல்ல... செய்து பார்த்துட்டு சொல்லுங்க ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா