22-ம் வாரத்தில் கால் வீக்கம்...

அன்பு தோழிகளே...

அனைவரும் நலமா?... தொடர்ந்து பதிவிட முடியாவிட்டாலும், அவ்வப்போது அறுசுவையை எட்டிப்பார்த்து விடுவேன்.
இப்போது எனக்கு 22 வாரங்கள்.. இரண்டு நாளாக கால் வீக்கமாக இருக்கிறது... போன வாரம் டாக்டரிடம் ரெகுலர் செக்-அப்கு போன போது நார்மலை விட அதிகமாக (ஒரு மாதத்தில் 3.5கிலோ ஏறி இருக்கேன்) வெயிட் போடிருப்பதாக சொல்லி, வாக்கிங் போக சொன்னார். இந்த கால் வீக்கம் எதனால்? இது குறைய என்ன செய்வது... வழி சொல்லுங்களேன்...

கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் என்பது அநேகருக்கு பொதுவானது,பயப் பட வேண்டாம்.

அதிக நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்க்கவும்,இடையில் எழும்பி நடக்கவும்.

தொடர்ந்து அதிக நேரம் நின்று கொண்டு மற்றும் நடக்க வேண்டியிருந்தால் இடை இடையே 5 நிமிடம் உட்கார்ந்து விட்டு நடங்கள்

நாற்காலியில் சாய்ந்து உட்காரும் போது கால்களை வேறு ஒரு நாற்காலியிலோ ,சிறிய மேஜையிலோ நீட்டி வைத்து அமரவும்.

தண்ணீர் நிறைய குடியுங்கள்,உடலில் உள்ள அதிகப் படியான உப்பை வெளியேற்றும்.

கால் வீக்கத்திற்க்கு வாக்கிங் தான் சிறந்தது.வெள்ளை பூசனி, சுரக்காய் மிகவும் நல்லது.நீர் சத்து மிக்க காய்கள், பழங்கள் நல்லது. உப்பை குறைத்து கொள்ளுங்கள். எண்னெயில் பொரித்து, ஊறுகாய், அப்பளம் தவிர்க்கவும்.

வனி சொன்ன மாதிரி, அதிக நேரம் உட்கார்திருந்தாலோ, நின்றிருந்தாலோ கால் வீங்கும்.அவ்வப்போது நடக்கவும். காலை தொங்கப் போடாமல் இன்னொரு நாற்காலி மீது வைத்து உட்காரவும்.
நிறைய தண்ணி குடிக்கவும்.பயப்பட வேண்டாம். கர்ப்ப காலத்தில் இது சாதரணமானதுதான்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்