பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

இந்த பட்டிமன்றம் மூலம் நாம் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு செய்வோமா என்று தெரியாது. ஆனால் இதில் உலா வந்து கொண்டிருக்கும் இளம் பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை கண்டிப்பாக ஏற்ப்படுத்த வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். அதனால் தோழிகள் இதனால் ஏற்ப்படும் நன்மைகள் தீமைகளை பல கோணங்களில் ஆராய்ந்து வாதங்களை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அதை சொல்லுங்க........தமிழ் படம் இல்லைங்க, நாடகம் என் விளம்பரம் என்று எதையுமே பிள்ளைங்களுக்கு காட்டவே முடியலைங்க.

என் குழந்தைகளுக்கு அதிகம் படம் காட்டுவதே இல்லை. சமீபத்தில் பார்த்த இரண்டு படங்களில் இருந்து என் குழந்தை கற்றுக் கொண்டது, ஒரு ஆணும் பெண்ணும் முதலில் காதலிப்பார்கள் , பிறகு கல்யாணம் பிறகு குழந்தை. என்னத்த சொல்ல......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பிரவுசிங் சென்டர்ல ஒரு சின்ன டப்பாவுக்குள்ளே உட்காருவதற்கு பதில் கையிலே ஒரு சிறிய டப்பாவில் எல்லாமே!

அட தொலைகாட்சியில் இவங்க பார்க்குற நிகழ்ச்சியை பக்கத்தில் இருந்து பார்த்து பிள்ளைங்க கேட்டு போறாங்கன்னு சொல்றாங்க......இப்போவும் இவங்க பிள்ளைங்க கண்காணிசிட்டே தானே இருக்காங்க......

அப்படி மெசேஜ் வந்தவுடன் புடுங்கி செக் பண்ணா அப்புறம் அதுங்க நம்மளை புடுங்கிடுங்க. சரி தானே அம்மாஸ் அப்பாஸ்.....

நான் உங்க கிட்டேயிருந்து இன்னமும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்புலதான் இருக்குதே ஒழிய கைபேசினால இல்லை.// இதற்க்கு கண்டிப்பாக மறுப்பே கிடையாது.

நல்ல நகைச்சுவையான வாதம், இருந்தும் ரொம்பவே சிந்திக்க வைத்தன. நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கைதொழில் ஒன்றை கற்றுக்கொள்..கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள்.......ஒப்புக்கொள்கிறேன். பதிவுக்கு நன்றி. மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தன்னையே அழிக்கிற செல்போன்........எங்கையோ உதைக்கிதே? என்ன எதிரணியினரே சரிதானே?

இந்த வயசில் வேண்டாம் ....அது தான் சரி. ஆனாலும் இதற்க்கு எந்த வயது சரியானது என்று தான் குழப்பமோ? பாருங்க குழந்தையை சரியாக கவனிக்காத தாய்......அப்போ பிரச்சனை தொழில்நுட்பம் இல்லை......அதை உபயோகிப்பவர்கள் தானே?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆணித்தரமா கருத்த எடுத்துச்சொல்லைல ஆணிய தெரியாம
ரெண்டு தடவ அடிச்சுட்டேன்.
அதான் மாத்திட்டேன். பெரிய மனசு பண்ணி இந்த அப்பாவி பொண்ண மன்னிச்சுடுங்க தலெ.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரே! எதித்தாப்ல ஒருத்தங்கோ சொல்லிருக்காங்கோ வழக்கு எண் படத்துல செல்போன வெச்சு போட்டாபுடிச்சு அப்பால சேக்காளிங்களுக்கு காட்டறாங்கோனு!

அந்த பொண்ணோட அம்மா வேலக்கி போறவங்கோ! அந்தப் பொண்ணான்ட ஒரு செல்போன் குடுத்து எதுனா பிரச்சனைனா என்னான்ட சொல்லுடா தங்கம்நு சொல்லியிருந்தா இந்த பிரச்னை வந்திருக்குமா?

யாரவது வந்து செல்போன், கார், பைக்னு பந்தா உட்டாங்கன அவங்க பின்னாடியே ஈனு இளிச்சுனு போகப்படாதுனு ,கடல் தண்ணில வெள்ளாடி
துணி நனஞ்சு போச்சாம் உடனே லஜ்ஜையே இல்லாம துணிமாத்துவாங்களாம்,
தொரை போட்டாப் புடிப்பாராம். அந்தப் பொண்ணோட அம்மா ஏன் ஒருமாதிரியா இருக்கெனு கேட்டா நானா சொல்றவரைக்கும் ஒண்ணுமே கேக்காதேனு

சொல்லுமா இவிங்களும் கேக்கவே மாட்டங்களாம்,இதெல்லாம் எந்தூரு ஞாயம்நு தெரியில?
அவங்க ஒரு கைபேசி வாங்கிக்கொடுத்து கண்ணா நானும் வேலமுடிஞ்சு சீக்கிரமா வந்துருவேன் நீ ஸ்கூல் கிட்ட நில்லு ரெண்டு பேரும் போயி ஐஸ்கிரீம் சாப்புட்டு காய்கறி வாங்கிட்டு வீட்டுக்குப்போலாம், இரவுக்கு என்ன சமைக்கலாம்,

நீ அறுசுவைல பார்த்து வை நா வந்து சமைச்சு தர்றேன்! இப்படியெல்லாம் சொல்லாம்.
ரோட்ல போறப்ப அப்படி எவனாவது தப்பா நடந்துக்கப் பார்த்தா உடனே கைபேசி எடுத்து காவல் நிலையத்துக்கு போனப்போடனும்னு சொல்லித்தரணும்.

நாமதான் கராத்தே, குங்பூ கிளாஸ்கு அனுப்புறமே! பீச்சாங்கைய எடுத்து மூஞ்சில ஒரு போடு போடுனு சொல்லித்தரணும்.
தினமும் பள்ளில நடந்த விஷயங்கள பகிர்ந்துக்கச் செய்யணும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//என் பக்கத்தில் ஒரு பொண்ணு இருந்தால் அவள் பார்க்க 12வது காலேஜ் படிப்பது போல் இருந்தால்.

அவளுக்கு ஒரு ஃபோன் வந்தது உடனே கன்டக்டர் கன்டக்டர் என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.என்னவென்று பார்த்தாள் அவள் அம்மா பஸ்ஸில் ஏற வில்லையாம் பஸ் அந்த ஸ்டாப்பை விட்டு கொஞ்சம் தூரம் நகர்ந்து விட்டது

நல்ல வேலையாக அந்த மாணவியிடம் கைப்பேசி இருக்கபோய் அவள் அம்மா அழைத்தால் இல்லை என்றால் என்ன ஆயிருக்கும் அவள் அம்மாவிடமோ அவளிடமோ கையில் பணம் இல்லை என்றால்.....///

நடுவர் அவர்களே இதுல ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கனும்... அந்த பொண்ணு கை ல செல் இருந்ததால தான் இத்தனை குழப்பம்... அது அவங்க அம்மாவை கூட கவனிக்காம (மெசேஜ் பண்ணிருக்கும்) பஸ் ல ஏறி இருக்கும்.... இதே அவங்க அம்மாவை கவனிச்சுருந்தா கால் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை... செங்கலுக்கும்(மொபைல்) வேலை இல்லை

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

//அந்த பொண்ணோட அம்மா வேலக்கி போறவங்கோ! அந்தப் பொண்ணான்ட ஒரு செல்போன் குடுத்து எதுனா பிரச்சனைனா என்னான்ட சொல்லுடா தங்கம்நு சொல்லியிருந்தா இந்த பிரச்னை வந்திருக்குமா?///

காமெடி யா இருக்கு நடுவரே எதிர் அணி பேசுறது... செல் போன் ல தான் அந்த பொண்ணும் அம்மாவும் பேசிக்கணும் னு இல்லை.... ஏன் வீட்டுல இருக்கும் போதே அந்த பொண்ணு நினைச்சா சொல்லியிருக்கலாம்.... இங்க பிரச்சனையே அந்த செல் போன் ல எடுக்குற வீடியோ தான்.... நாய்(மொபைல்) வாங்கி நடு வீட்டுல விட்டா ஒரு நாள் இல்லை ஒரு நாள் கடிக்க(தொந்தரவு தான்) தான் செய்யும்

// நீ ஸ்கூல் கிட்ட நில்லு ரெண்டு பேரும் போயி ஐஸ்கிரீம் சாப்புட்டு காய்கறி வாங்கிட்டு வீட்டுக்குப்போலாம்,//

எதிர் அணியினர் தான் 4 பேஜ் கு கிண்டலுக்கு சொன்னாங்க "முன்னாடி ஸ்கூல் கே போயி ஊட்டி விடுங்க... கை கடிச்சுவாங்க... டெய்லி ஸ்கூல் கொண்டு போயி விடுங்க . வண்டியில அடி பட்டுருவாங்கன்னு"" இப்போ அவங்களை மாத்தி மாத்தி பேசுறாங்க... ஒரு நிலையாய் இருங்கய்யா....

எதிர் அணி சொல்வது போல செல் போன் இல்லைனா பிள்ளைங்க வாழ்க்கை சம்பித்து விடும் னு ஏதும் இல்லை... இதுக்கு முன்னாடியும் நாம எல்லாம் ஸ்கூல் போக தான் செய்தோம்... படிக்க தான் செய்தோம்.... நம்ம கை ல செல் போன் இருந்ததா என்ன??? நாம எல்லாம் நல்லபடியா போயி வரலையா?? இந்த செல் போன் யூஸ் பண்றதுல ஒருத்தங்களுக்கு மட்டும் நல்ல உபயோகம்... அது யாரு னு கேக்குறீங்களா??? செல்போன் நெட்வொர்க் கம்பெனி கு மட்டும் தான் நல்லது..............

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்