கேரட் பொரியல் (குழந்தைகளுக்கு)

தேதி: September 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

கேரட் - 3
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - சிறிது
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி


 

கேரட்டை துருவி வைக்கவும்,வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சைமிளகாய் கீறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் பின் கருவேபில்லை,பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் துருவிய கேரட்டை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.
கேரட் வேக தேவையான உப்பு,தண்ணீர் தெளித்து மூடி வேகவிடவும்.
கேரட் வெந்ததும் தேங்காய் பூவை சேர்த்து கிளறி அடுப்பி நிறுத்தவும்.
சூடான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் பொரியல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

Elimayana kurippu vaalththukkal

நன்றி தேவி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எனக்கும் என்னவர்க்கும் பிடிச்சது நானும் இப்டி தா செய்வேன் பருப்பும் சேர்ப்பேன் அதனால சூப்பராவே இருக்கும் என் அக்கா குட்டீஸ்ட செஞ்சி சாதத்துல கலந்து வெச்ச மொத்தம் காலியிடாகிடும் குட்டீஸ் சாப்பிட நல்ல குறிப்பு வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அப்படியா ரேணு என் பசங்களும் இப்படி செய்து கொடுத்தால் நூடுல்ஸ் போல் வரும்ல ரொம்ப பிடிக்கும்.நன்றி பா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி, இன்று இந்த பொரியல் செய்தேன். எளிமையான முறையில் சுவையாக இருந்தது. குட்டீசுக்கு பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி கல்பனா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪