தேதி: August 6, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் வற்றல் - 4
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
தயிர் - கால் கப்
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
சோள மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - முக்கால் கப்
உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

மைதா மாவு மற்றும் சோள மாவு இரண்டையும் தனித்தனியாக சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பொரிப்பதற்கு எண்ணெய் மற்றும் கெட்டியான தயிரை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகாய் வற்றல், நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கின உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்து எடுத்த உருளைகிழங்கை ஒரு தட்டில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது போட்டு உருளைக்கிழங்குடன் விழுது ஒன்றாக சேரும் படி நன்கு பிரட்டி விடவும்.

பிரட்டிய பிறகு அதில் தயிர், சோள மாவு, மைதா மாவு போட்டு நன்றாக பிரட்டி வைத்து, அதை அரைமணி நேரம் ஊற விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து எண்ணெயில் போடவும்.

ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் அடுப்பில் வைத்து பொரிக்கவும். நன்கு சிவந்து பொன்னிறம் ஆனதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.

அதன் பிறகு மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.

தாளித்த பிறகு பொரித்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை அதில் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி இறக்கி வைக்கவும்.

சூடான ஆலு 65 தயார். விரும்பினால் மேலே கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். இது ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதே போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிக சீக்கிரத்தில் தயார் செய்து விடலாம்.

இந்த ஆலு 65 குறிப்பை நமக்காக செய்து காட்டியவர், <b> திருமதி. பானுமதி குமரப்பன் </b> அவர்கள். பழமையும், புதுமையும் கலந்த புதுவகை சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். கணவர் மருத்துவர் என்பதால், இவரது தயாரிப்புகளில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.

Comments
Hai aunty, nan ithumaathiri
Hai aunty,
nan ithumaathiri cauliflower manjuriyen seithen. anna maida mavu sertha pan la ootikittu varamatenkuthu. yenna panrathu athuku. nan intha site ku puthusu. itha parthu than cauliflower manjuriyen seithen pls reply panuga