மாங்காய் தொக்கு ஊறுகாய்

தேதி: October 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

மாங்காய் துருவல் - 2 கப்
மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
உப்பு
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயம் - சிறிது


 

மாங்காயை துருவி தயாராக வைக்கவும்.
கால் தேக்கரண்டி கடுகு, வெந்தயம் இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதம் உள்ள கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இதில் துருவிய மாங்காய் சேர்த்து சிறுந்தீயில் வதக்கவும்.
மாங்காய் லேசாக வதங்கியதும் தூள் வகை எல்லாம் சேர்த்து வதக்கவும். சிறுந்தீயிலேயே தொடர்ந்து வதக்க வேண்டும்.
எண்ணெய் பிரியும் போது கடுகு, வெந்தயப் பொடி சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
சுவையான மாங்காய் தொக்கு ஊறுகாய் தயார்.

கடுகு, வெந்தயம் இரண்டும் வறுப்படாமல் இருந்தாலும் சரி, அதிகமாக வறுப்பட்டு விட்டாலும் சரி கசந்து போகும். பதமாக வறுத்து எடுத்து பொடிக்க வேண்டும். மாங்காயின் புளிப்புக்கு ஏற்றபடி உப்பும், காரமும் அளவு மாறுபடும். பார்த்து சேர்க்கவும். ஊறுகாயில் எப்போதும் ஈரம் இல்லாத கரண்டியே பயன்படுத்த வேண்டும். சூடான எண்ணெயை மேலே விட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். நான் கொஞ்சமாக செய்து உடனே செலவு செய்ய செய்ததால் எண்ணெய் அதிகம் விடவில்லை. விரும்பினால் காற்று புகாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முகப்பிலே தெரியும் இது நம்ம வனிதா அக்கா குறிப்புன்னு :)
எப்பவும் போல கலக்கல்...
சூப்பரா இருக்கு அக்கா..விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன்
செஞ்சு பார்த்து சொல்றேன்..

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

முதல் பதிவிட்ட ஷமீலாக்கு ஸ்பெஷல் நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க. வெயிட்டிங் நான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு அருமையாக இருக்கு,படங்கள் ரொம்ப சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு நல்லா இருக்கு வனிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாவ் எனக்கு பிடிச்ச மாங்காய். பார்க்கும் போதே சாபிடனும் போல இருக்கு ஸிஸ். பட் இப்போ இங்க மாங்காய் கிடைகல. கன்டிப்பா மாங்காய் சீசன்ல ட்ரை பண்ணி பார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள்...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரொம்ப நாளா இந்த குறிப்பதான் தேடிட்டிருந்தேன். நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் வனீ(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி,

எங்க வீட்டு விசேஷம் எல்லாவற்றிலும் இடம் பெறும் டிஷ்.
கிடைத்தால் அவசியம் செய்யுறேன்..5 ஸ்டார்ஸ்!!

என்றும் அன்புடன்,
கவிதா

Hai vanitha!how r u?nice maangai thokku recipy.unga recipy presentation ellamae nanraha irkum.next time try panitu epdi irundudhundu solraen.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :) கிடைக்கும் போது அவசியம் செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. 5 ஸ்டாருக்கும் சேர்த்து :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாங்க நலம். மிக்க நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க? அடிக்கடி வந்து காணாம போயிடுறீங்க :) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சுலபமாதான் இருக்கு. ஊறுகாய் மட்டும் செய்துட்டு கூடவே தயிர் அல்லது பருப்பு சாம்பார் கொடுங்க தொட்டு சாப்பிட்டால் அதன் சுவையே அலாதி.. சூப்பரோ சூப்பர் வாழ்த்துகள் வனி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மிக்க நன்றி. எனக்கு சாம்பார் கூட வேண்டாம்... பருப்பு அல்லது தயிரே போதும் ;) உண்மை ரேவதி. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Naanga nalla irukom..laptop fault ayita kaanama poidraen.ipa mobile la tan use panraen...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஓ... சரிங்க :) எப்படியும் அடிக்கடி வாங்க... அதுவே மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kandippa varen..unga recipies ku inimae marakkama pinnoottam kuduppadharku vanduraen adikadi ok ya?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

அருமையான குறிப்பு வனிதா, கண்டிப்பா எனக்கு usefulla
இருக்கும்

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Supera iruku.rompa nalarku.na try pani pathuten.thank u vanitha.

Kalam pon ponrathu