மிளகாய் தூள்

இந்தியால மிளகாய் தூள் னு எதை சொல்றாக?ஜிலேபி பவுடர்னா என்ன?

மிளகாய்த் தூள் என்றால் சாதாரணமாக எங்கும் அது காய்ந்த சிகப்பு மிளகாயை அரைத்து எடுக்கப்படும் தூள் தான்...
ஆனால் எங்கள் வீட்டில் மிளகாய்த்தூள் என்று சொல்வது மல்லி+மஞ்சள்+ஜீரகம்+குருமிளகு+மிளகாய்... இவை எல்லாம் ஒரு விகிதத்தில் அரைத்து எடுப்பார்கள்... எல்லா குழம்புகளுக்கும் அதை உபயோகிப்பார்கள். ஆனால் சில குழம்புகளுக்கு மஞ்சள் கூடுதல் சேர்ப்பார்கள்... சில குழம்புகளுக்கு மிளகுத் தூள் அதிகம் சேர்ப்பார்கள்...அதெல்லாம் அந்தந்த குடும்பத்தில் பெரியவர்கள் சின்னவர்களுக்கு கற்றுத் தருவது...அந்த விகிதம் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபடும்... அதனால் குழம்பு சுவையும் வீட்டுக்கு வீடு மாறு படும் தானே..
ஜிலேபி பவுடர் என்பது கலர் தருவதற்காக உள்ள கலர் பவுடர் அவ்வளவு தான். அது சுவையோ மணமோ தராது. வெறும் கலர் தான்.. அது பச்சை, அரஞ்சு, சிவப்பு, ரோஸ் என்று பல கலர்களில் கிடைக்கும்.. ஜிலேபிக்கு உள்ள ஆரஞ்சு நிறம் இந்த கலர் பவுடரினால் தான் கிட்டுகிறது...

நீக சொல்றது போல எல்லாம் சேர்த்து தான் நாங்க மிளகாய் தூள்னு சொல்ற.தனியாக மிளகாய் மற்றும் அரைக்கிறத தனித்தூள்னு சொல்ற.இந்தியன் ரிசிபி ல மிளகாய் தூள்னு வாரது எதுனு தான் சந்தேகமா இருந்திச்.

தமிழகத்தில் காய்ந்த மிளகாய் தூள் அல்லது வத்தல் தூள் (ஆங்கிலத்தில் ரெட் சில்லி) தனியா, மிளகு, சீரகம் சேர்த்து அரைத்த தூள் மசாலா தூள் அல்லது குழம்பு தூள் என்று சொல்வார்கள்.

உங்கள் பதிலுக்கு நன்றி southarashmi .

மேலும் சில பதிவுகள்