மட்டன் பிரியாணி

தேதி: January 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

அரிசி - ஒரு கிலோ
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - பெரியது 4
தக்காளி - பெரியது 3
பச்சைமிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுதூள் - 1 1/2 தேக்கரண்டி
சீரகதூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புதூள் - ஒரு தேக்கரண்டி
பிரியாணிமசாலா - 2 தேக்கரண்டி
தக்காளிசாஸ் - ஒரு தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 6
ஏலக்காய் - 4
புதினா - 5 கொத்து
மல்லிகீரை - 5 கொத்து
எண்ணெய் - 100 மில்லி
தயிர் - அரை கப்
பன்னீர், ரோஸ்வாட்டர் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை - ஒன்று
வினிகர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி குக்கரில் போட்டு அதில் வினிகர், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும்.
அரிசியை கழுவி விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி தண்ணீரை வடித்து விட்டு அரிசியை அதில் போட்டு லேசாக வறுத்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
மிளகாய் தூள், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் தூள் வகைகள், தயிர், தக்காளி சாஸ், உப்பு, பன்னீர், எலுமிச்சைச் சாறு, மட்டன் வேக வைத்த தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
அதனுடன் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை மூடி வைக்கவும்.
எண்ணெய் பிரிய தொடங்கியதும் அதில் ஒன்றிற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அதில் வறுத்து வைத்திருக்கும் அரிசியை போட்டு ஒரு கொதி வந்ததும். மூடி போட்டு, மேலே கனமான பொருளை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் தம்மில் வைக்கவும். மல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சுலபமான வாசமான பிரியாணி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai biriyani super, yethuku rice sa varukkanum akka.

ஹலீலா எனக்கு பிடிச்ச மட்டன் பிரியாணி சூப்பரா செய்துருக்கீங்க அப்படியே எனக்கு அனுப்பிடுங்க :) வாழ்த்துக்கள்.:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹலிலா அக்கா மட்டன் பிரியானி கலக்க்கலான ரெசிபி அக்கா கடசீ ப்லேட் சூப்பர்ரொ சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பிரியாணி தூக்கலா இருக்கு ஹலி:) ம்ம்ம் இப்பவே சாப்பிடனும் போல இருக்கே! ஹலி தக்காளி சாஸ் அண்ட் வினிகர்க்கு பதிலா என்ன யூஸ் பண்ணலாம்னு சொல்லுங்க ஹலி:) வாழ்த்துக்கள் ஹலிலா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அஸ்ஸலாமு அழைக்கும்,ஹலிலா பிரியாணி செய்திருப்பது நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனிதா பதிவிற்கு மிக்க நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஷபானா,உறுப்பினரா சேர்ந்த அன்னைக்கே எனக்கு பதிவு போட்டதுக்கு மிக்க நன்றிமா. அரிசியை வறுத்து செய்வதால் சாதம் உடையாமல் உதிரியாக இருக்கும் சாப்பிடவும் நல்லா இருக்கும்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சுவர்ணா வாழ்த்திற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றிமா. சுவர்ணா எங்க வீட்டுக்கு நேரில் வாங்க,சுடச் சுட நானே செய்து தரேன்....சீக்கிரம் வாங்க...

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி பதிவிற்கு மிக்க நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அருட்செல்வி வாழ்த்திற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நித்யா வாழ்த்திற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றிமா. சாஸ், வினிகர் இல்லாமல் செய்யலாம் அதர்க்கு பதிலா எலுமிச்சை ஒன்றும், தக்காளி ஒன்றும் சேர்த்து செஞ்சி பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா பதிவிற்கு மிக்க நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா பிரியானி இங்கவருது வாசம் சூப்பர்மா வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அழைக்கும்,ஹலிலா உங்க பிரியானி சூப்பர்

ஹளிலா,
சூப்பர் பிரியாணி..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அஸ்ஸலாமு அழைக்கும் ஹலீலா...
ஆஹா!மட்டன் பிரியாணி சூப்பர்...வாழ்த்துக்கள் ஹலீ...:)

SSaifudeen:)

பார்க்கவே சாப்பிட தோனுது.சூப்பர்.

வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா லாத்தா எப்பிடி இருக்கீங்க? உங்கள் வாழ்த்திற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ரினோஸ் உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவிதா உங்கள் வாழ்த்திற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா எப்படி இருக்கீங்க? உங்கள் வாழ்த்திற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பிரியா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)