கப்சா (அரேபிய உணவு)

தேதி: January 3, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

 

புழுங்கல் அரிசி - அரை படி
சிக்கன் - அரை கிலோ
சிக்கன் க்யூப் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று
பட்டை, ஏலக்காய் - தலா ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தக்காளி விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சிக்கன் பொரிக்க தேவையான மசாலா:
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தந்தூரி மசாலா - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
சாஸ் செய்ய:
வெங்காயம் - பாதி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பூண்டு - ஒரு பல்
மல்லி கீரை - சிறிது
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிது


 

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கேரட், சீரகம், சிக்கன் க்யூப் சேர்க்கவும். (அரை படி அரிசிக்கு ஒரு படி தண்ணீர்).
அவற்றோடு சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
அரை வேக்காடு வெந்ததும் அதிலிருந்து சிக்கனை தனியாக எடுத்து விடவும். அந்த நீரில் அரிசியை களைந்து போட்டு மூடி வேக விடவும்.
சிக்கனை பொரிக்க தேவையான மசாலாக்களை சேர்த்து சிக்கனை பொரித்தெடுக்கவும்.
சாஸுக்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் 1 - 2 சுற்றுகள் அரைத்து கொள்ளவும்.
அரைத்த சாஸ் இதேபோல் ஒன்றிரண்டாக இருக்க வேண்டும். இதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சாஸ் தயார்.
சூடான கப்சா சிக்கன் ஃப்ரை மற்றும் காரசாரமான சாஸுடன் பரிமாற அருமையாக இருக்கும். இது கிட்டத்தட்ட நமது ஊர் பிரியாணி போல தான். ஆனால், குறைவான எண்ணெயில் மற்றும் மசாலாவே இல்லாத ஒரு பிரியாணி. கப்சாவில் காரம் குறைவாக இருக்கும். அதனை ஈடு செய்வதற்கு தான் இந்த சாஸ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ரசியா...நலமா?
ரொம்ப நாள் கழித்து உங்க குறிப்பு...
கப்சாவும்,படங்களும் கொள்ளை அழகு.....வாழ்த்துக்கள்....

ரசியா அக்கா அழகான படங்கலுடன் அசத்தலான குரிப்பு அருமை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அஸ்ஸலாமு அலைக்கும் ரசியா.எப்படி இருக்கிக?விட்டில் எல்லொரும் நலமா?உங்க கப்சா சூப்பர்

அருமையான, வித்யசமான ரெசிபி. வாழ்துக்கள்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

ரசியா கப்சா சோறு ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அஸ்ஸலாமு அலைக்கும் ரசியா,கப்ஸா நல்ல கலரா அருமையாக செய்து இருக்கீங்க,சூப்பர்.நான் சற்று வித்தியாசமாக செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்.கப்சா சோறு தொட்டுக்க எல்லாத்தையும் செய்து காட்டி அசத்திட்டீங்க...நானும் இதே முறையில் தான் செய்வேன்...ஆனால் கேரட் மட்டும் சேர்க்க மாட்டேன்...வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

ரசியா,
கப்சா புதுமையா இருக்கு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாங்க வாங்க... ரொம்ப நாள் கழிச்சு உங்க குறிப்பு :) சூப்பர் வாசமான கப்சா. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வலைகும்சலாம்,வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

Eat healthy

ரசியா,

நேற்றிரவு ஒரு விருந்துக்கு ஏதாவது புதுசா செய்யலாம்னு இந்த சாதம், வருவல், சாஸ் எல்லாம் செய்தேன்...சிக்கன் சாப்பிடாத என் கெஸ்ட் ஒருத்தர் இந்த சாதத்த வெறும் சாஸுடன் சாப்பிட்டு விட்டு மிகவும் அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார்..அவரின் 1 வயது குழந்தை முதல் முறையாக பொரிச்ச சிக்கன் விரும்பி சாப்பிட்டது...என் கணவர் இதன் பெயரை கேட்டதும் சும்மா கிண்டலடிக்கிரென் என்று நினைத்து பெயரை சொல்லு என்று மறுபடியும் கேட்டார்...குறிப்பை காட்டிய பின்புதான் நம்பினார்...

சுவையான குறிப்பை கொடுத்த உங்களுக்கு நன்றி...பாராட்டுக்கள்....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

உங்க பதிலை பார்த்து மிக்க சந்தோஷம் ராஜி.நன்றி

Eat healthy