கத்தரிக்காய் புளிக்கறி

தேதி: January 10, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கத்தரிக்காய் - 750 கிராம்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
புளி - நெல்லிக்காயளவு (சிறிது நீர் விட்டு கரைத்து வடிக்கவும்)
காய்ந்த மிளகாய் - 5
மிளகாய் பொடி - 1 1/2 தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)
கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் அல்லது பசுப்பால் (விரும்பினால் மட்டும் சேர்க்கவும்)
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை
எண்ணெய்


 

கத்தரிக்காயை நீளமாக நறுக்கி கழுவி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வெங்காயம், பூண்டை நீளமாக அரிந்து வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
பொரித்த கத்தரிக்காய்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்பு மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சேர்க்கவும்.
அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கிளறி சுருள விட்டு இறக்கவும். (விரும்பினால் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடலாம்).
சுவையான கத்தரிக்காய் புளிக்கறி ரெடி. இதை ரொட்டி, சப்பாத்தி மற்றும் பரேட்டாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா கத்திரிகாய் வதக்கல் சுபெரா இருக்கு நான் செய்துட்டு சொல்லுரென் அக்கா

ரொம்ப நல்லா இருக்கு :) நல்லா தெளிவான படங்களும் கூட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லலிதா அக்கா யம்மி கத்தரிக்காய் புளிக்கரி சூப்பர் குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல குறிப்பு,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

லலிதா புளிக்கறி நல்லாருக்குங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

thanks to all...god bless everyone