கோல்ட் காபி

தேதி: May 12, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (11 votes)

 

பால் - 1/2 லிட்டர்
சீனி - தேவைக்கு
காபி பொடி - 3 மேசைக்கரண்டி(நெஸ்காபி அல்லது வேற எந்த வகையானாலும்)
சீனி - 1 மேசைக்கரண்டி


 

முதலில் பாலை காய்ச்சவும்.

ஒரு பவுலில் காபி பொடி,சீனியை போட்டு ப்ளெண்டரால் நுரை வரும் வரை அடித்துக்கொள்ளவும்.

பின் காய்ச்சிய பாலில் ஊற்றவும். 3 நிமிடம் கழித்து பால் பொங்கும் சமயம் இறக்கவும்.

நீளமான கண்ணாடி க்ளாஸில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்.

பரிமாறும் சமயம் மேலே சிறிது சீனியை தூவவும்.


எப்பொழுதும் ஹாட் காபி குடித்து விட்டு இந்த கோல்ட் காபி குடிச்சால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

ப்ளெண்டரில் அடிக்கும் போது நல்ல நுரை பொங்க அடிக்கனும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு!