தேதி: January 11, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வேகவைத்து மசித்த உருளை - ஒரு கப்
கடலை மாவு - ஒரு கப்
உப்பு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உருளையை வேக வைத்து தோலுரித்து வைக்கவும்.

ஆறியதும் ஒரு கப்பின் அடிப்பக்கத்தைக் கொண்டு நன்றாக மசித்து விடவும். ஒரு கப் மசித்த கிழங்கிற்கு அதே ஒரு கப் கடலை மாவு தேவைப்படும்.

இதில் உப்பு, எலுமிச்சை, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின் கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து நீர் விடாமல் பிசையவும்.

கடலை மாவு முழுவதும் சேர்த்து முடித்தால் கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்த மாவு பதமாக வரும். முறுக்கு பிழியும் அச்சில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவை சிறிது உள்ளே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை பிழிந்து விடவும். சிறிது நேரம் விட்டு திருப்பி விட்டு சிவக்க எடுக்கவும். இதே கலவையை பயன்படுத்தி ஓமப்பொடி, ஆலூ புஜியா, முறுக்கு, ரிப்பன் பக்கோடா என விருப்பம் போல் செய்யலாம்.

சுவையான க்ரிஸ்பி ஆலூ ஸ்நாக்ஸ் தயார்.

காரம் உங்கள் சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். இதில் விரும்பினால் முறுக்காக செய்ய சீரகம் / ஓமம் கூட சேர்க்கலாம். அரிசி மாவு தேவை இல்லை. அப்படியே இவை மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும். கடைகளில் வாங்கும் ஆலூ புஜியா எனக்கு மிகவும் விருப்பமானது. ஆனால், அது ஆரோக்கியமில்லை என்பதால் வீட்டில் முயற்சி செய்த முறை இது. என்னிடம் புஜியாக்கு பிழிய தட்டு இல்லாததால் இப்படி எதாவது செய்வது வழக்கம்.
Comments
வனி
வித்தியாசமான குறிப்பு,பாராட்டுக்கள் வனி;செய்து பார்த்து பின்னூட்டம் போடுகிறேன்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வனி
வனி ஈசியான டேஸ்ட்டியான முறுக்கு சூப்பர் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வனி
வனி, ஆலுன்னாலே ஒரு இது தான். அதில் முறுக்கு, ஓமப்பொடின்னு கலக்கிட்டீங்க. முறுக்கு நல்ல பொன்னிறமா பார்க்கவே சூப்பரா இருக்கு வனி. ஆலு ஓம பொடி ஹல்திராம்ஸ் வாங்கி சாப்டிருக்கேன். இனி உங்களோட குறிப்பின்படி வீட்லயே செய்துடலாம். மாலை நேர சுவையான, சத்தான கரகர மொறு மொறு குறிப்பு. வாழ்த்துக்கள் வனி :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
vani akka
கலக்குரேங்க வனி அக்கா .தினமும் உங்கள் குறிப்பு தான் என் வீட்டில்.இதயும் செஞ்சு பாதுட்டு சொல்ரேன்.
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani
superb vani, asathitinga.....aluvila nalla variety yana snacks.. muruku parkave supera iruku, kandipa seithutu solren... vazlathukkal...
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனிதா!
சூப்பரான குறிப்பு தந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஹலீமா
வனி
ஆலுல அசத்தலான ஐட்டம் கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் வனி ;)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வனிதா அக்கா
ஆஹா அருமையா செய்து இருக்கீங்க, வாழ்த்துகள். எனக்கும் ஒரு ப்ளேட் கொடுங்கக்கா>
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
வனிதா அக்கா ஆலு ஸ்நாக்ஸ்
வனிதா அக்கா ஆலு ஸ்நாக்ஸ் அருமை.நான் இதுவரை அரிசிமாவு,உருளை சேர்த்துதான் செய்துருக்கேன்.மொரு மொறுன்னு இருக்கும்.இப்படியும் அடுத்த முறை செய்து பார்கறேன்.வாழ்த்துக்கள்:)
Kalai
மொறு மொறு
வனி அக்கா,
உங்கள் குறிப்புகள் எல்லாமே அசத்தல் தான். இந்த ஸ்நாக்ஸ் என் குட்டிப்பொண்ணு 21 மாதம் தான் ஆகிறது . ஆனால் ரொம்ப பிடிக்கும் விரும்பிச்சாப்பிடுவாங்க, இப்போ வீட்டிலேயே ஆரோக்கியமா, சுத்தமா செய்யற முறை சொல்லி இருக்கீங்க. இனி வீட்டிலேயயே பிழிய வேண்டியதுதான். ரொம்ப நன்றிக்கா.
Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
முசி... மிக்க நன்றி. :)
சுவா... மிக்க நன்றி :)
கல்பு... மிக்க நன்றி :)
பிரியா... மிக்க நன்றி :)
சுமி... மிக்க நன்றி :)
ஹலீமா... மிக்க நன்றி :)
அருள்... மிக்க நன்றி :)
ஷமீனா... மிக்க நன்றி :)
கலா... மிக்க நன்றி :)
விஜி... மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
ஆலு ஸ்நாக்ஸ் ஆல அள்ளுதே ஹ்ம்ம் சூப்பர் டிஷ் வனி அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
வனிதா.
வனிதா ஆலு ஸ்நாக்ஸ் வித்தியாசமா இருக்கு இப்போதான் கேள்விப்படுறேன் வாழ்த்துக்கள்
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
நன்றி
கனி, ஹலிலா... மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
எனக்கு முருக்கு சுடதெரியாது என்னிடம் உரலும் இல்ல இந்த மாவை ஸ்னாக்ஸ் போல் பொரித்து சாப்பிடலாமா உருலைக்கிழங்குல இப்படி அருமையா முருக்கு நான் கேள்விப்பட்டதேயில்லை வாழ்த்துக்கள்
நிசா
இதுக்கு உரலும் வேண்டாம் ஆட்டவும் வேண்டாம். மாவை தட்டை போலவோ, சீடை போலவோ கூட செய்யலாம். மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
உடனே பதில் போட்டதில் சந்தோஷம் நான் சீடை போல் செய்துப்பார்க்கிறேன்.பொங்கல் சாமிக்கு படைக்கனும்ங்கரதுனால் முன்னோர்கள்.செய்தமாதிரி பாரம்பர்யமா செய்யனுமில்ல. சாரி நான் அத யோசிக்காமல் கேட்டுட்டேன், தப்பா நினைக்காதிங்கப்பா
வனி
இந்த ஐடியா(த்ரீ இன் ஒன்) ரொம்ப பிடிச்சிருக்கு...
ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
வாழ்த்துக்கள்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இளா
மிக்க நன்றி :) ட்ரை பண்னிபாருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
உங்கள் முறுக்கு செய்து
உங்கள் முறுக்கு செய்து பார்த்தேன் . ரொம்ப நன்றாக வந்தது.
உன்னை போல் பிறரை நேசி.
நான் முதல் முறையாக முறுக்கு
நான் முதல் முறையாக முறுக்கு சுட்டேன். மிகவும் நன்றாக வந்தது. நான் பல தரம் உங்கள் குறிப்புகளை செய்து பார்த்து உள்ளேன். அனைத்திலும் எனக்கு வெற்றியே. உங்களுக்கு என் நன்றிகளை மனதார உரைக்க விரும்புகிறேன்.... மிக்க நன்றி வனிதா அக்கா. அப்படி கூப்பிடலாம் தானே?
உன் வாழ்க்கை உன் கையில்....
chrishmas
செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :) தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். இன்று தான் பார்க்கிறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
kalainan
செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :) பதிவை படிக்கவே மிகுந்த மகிழ்ச்சியா இருக்குங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா