பூண்டு மிளகு கோழி வறுவல்

தேதி: January 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

கோழி - அரை கிலோ
பூண்டு - 15 பல்
மிளகு - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மிளகை பொடி செய்து கொள்ளவும்.
கோழியை நன்றாக உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாதி மிளகு தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கோழியை வேக வைக்கவும். (நீர் தேவைப்படாது). வேகாமல் இருந்தால், கால் டம்ளர் நீர் உற்றி வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மீதமுள்ள மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை வெந்து கொண்டிருக்கும் கோழியுடன் சேர்த்து, சிறுதீயில் வைத்து நன்கு தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைக்கவும்.
சூடான பூண்டு மிளகு கோழி வறுவல் தயார்.

காரம் அதிகம் விரும்புபவர்கள் வறமிளகாயை விதை நீக்கி சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... சிம்பிளா மிக குறைந்த பொருட்களோட சுவையான சிக்கன் :) சூப்பர். படங்கள் பளிச் பளிச்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருட்செல்வி அக்கா மிளகு கோழி வறுவல் அட்டகாசமா இருக்கு அக்கா நல்ல குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருட்செல்வி பூண்டு மிளகு கோழி வறுவல் அருமையாக இருக்கு.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பூண்டு மிளகு கோழி வறுவல் சூப்பர்.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

சூப்பரா இருக்கு. அருமையான ரெசிபி வாழ்த்துக்கள்

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

அருள்

சூப்பர் .. சிம்பிள் பட் டெலிஷியஸ் குறிப்பு..
பார்க்கவ்ய்ம் ஹெல்தியா இருக்கு அருள்.. அவசியம் செய்து பார்க்கிறேன்.. ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

2 murai pathivu aayttu :(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருள், பூண்டு மிளகு கோழி எளிய பொருட்களின் கூட்டணியில் அபார சுவை கொண்ட குறிப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த முறை கோழி வாங்கினா இப்படி செய்துட்டு சொல்றேன் பா. படங்கள் க்றிட்டல் க்ளியர். வாழ்த்துக்கள் அருள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்லா இருக்கே! இவ்வளவு சிம்பிளா கோழி வருவலா? அசத்தல். படங்களிலும் நல்ல முன்னேற்றம். :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அருள் இன்னிக்கு பூண்டு மிளகு கோழி வறுவல் செய்தேன். ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. மசாலா சேர்க்காத ரெசிப்பின்னா ரொம்ப பிடிக்கும். பூண்டை மட்டும் வெட்டாமல் நசுக்கி சேர்த்தேன். சுவை அபாரம். நன்றி அருள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல குறிப்பு.கட்டாயம் சுவையா இருக்கும்.செய்து பார்த்து சொல்றேன் அருள்.வாழ்த்துக்கள் :)

Kalai

அருள்,

பூண்டு மிளகு கோழி வறுவல் சிம்பிள் & சூப்பர்!! படங்கள் எல்லாம் அருமையா, தெளிவா இருக்கு. கட்டாயம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

பார்க்கவே சுப்பரா இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்றேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருள் பூண்டு மிளகு கோழி வறுவல் ரொம்ப அருமையா இருக்குப்பா பார்க்கவே சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள். கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி முதல்ல ஓடிவந்து பாராட்டி உற்சாகபடுதிடுறீங்க, மிக்க மகிழ்ழ்ச்சிப்பா:))
கடைசிபடம்தான் சொதப்பிட்டேன்,:( இன்னும் கொஞ்சம் நல்லா வறுத்து முடித்து போட்டொ எடுத்திருக்கணும், வழக்கம் போல அவசரம்தான், போட்டொ இழை ஆரம்பிச்சு எல்லாரையும் கைதேர்ந்த புகைப்பட கலைஞர் ஆக்கிட்டு இருக்கீங்களே வனி, அப்ப போட்டோ பளிச்னு வராம என்ன:) மிக்க நன்றிவனி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கனி உன்னோட குறிப்பைவிடவாப்பா?? இப்பலாம் அசத்தலான குறிப்பில கனியையும் பார்க்கிறோம் :) பாராட்டிற்கும், பதிவிற்கும் மிக்க நன்றிப்பா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ஹலிலா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி:) பதிவும் பாராட்டும் மகிழ்ச்சியளிக்குது கார்த்திகா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரம்மூ தேங்க்ஸ்பா :) கண்டிப்பா செய்துபாருங்க, ருசியும், மணமும் நல்லா இருக்கும்:) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கல்பூ:)) கண்டிப்பா செய்துபாருங்க கல்பூ, மிக எளிதான, ருசியான சிக்கன் ஐட்டம் இது, சாப்பிட்டு சொல்லுங்க எப்படினு:)) மிக்க மகிழ்ழ்ச்சி கல்பூ:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செயந்தி, மிக எளிதான கோழி வறுவல்தான் இது :)) கண்டிப்பா முயற்சி பண்னிபாருங்க முடிஞ்சா:) நன்றிப்பா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி:)) நல்லா இருந்துச்சா:) மிக்க மகிழ்ழ்ச்சியா இருக்கு, சமைச்சு பார்த்து பதிவிட்டு பாராட்டியது:) பூண்டி தட்டி போட்டீங்களா?? ஹோட்டல்ல கொடுக்கிறப்பா, கட்பண்ணிதான் போடிருந்தாங்க, காரத்துக்கு,ப.மிளகாயும் சேர்த்திருந்தாங்க, அடுத்த முறை நானும் தட்டி போட்டு செய்துபார்க்கிரேன் கவி:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக மிக நன்றி:)) கட்டாயம் செய்துபாருங்க நல்லா இருக்கும்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுஸ்ரீ, பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி :)) கண்டிப்பா முயற்சி பண்ணி பாருங்க:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி மிக்க நன்றி:) நிச்சயமா டிரை பண்ணுங்க:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுவா, மனம் நிறைஞ்ச பாராட்டுக்கு மிக்க மகிழ்ழ்சிப்பா:) கண்டிப்பா செய்துபாருங்க, உங்க கைல சமைச்சா இன்னும் அழகா வரும்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பினை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

puli milakai cheivathu yeppadi

உங்களின் இந்த ரெசிப்பி இரண்டு முறை செய்து விட்டேன்,ரொம்ப சுவையாக இருந்தது.நானும் மசாலா சேர்க்காமல் ஒரு சிக்கன் செய்வேன் அதைப் போலவே இருந்ததாக என் கணவர் பாராட்டினார்