பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

//பெரும்பாலான பெண்கள் கணவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்ன்னு சொல்லும் எதிரணியே விட்டுக்கொடுத்ததையும் சொல்லிட்டாங்க நடுவரே//அவியளே சூனியம் வெச்சுக்கிட்டாங்களா..சரியா போச்சு.
// அதுவும் எங்கன்னு கேளுங்க பத்துபேருக்கு மத்தியில கூட இல்ல பல பேர் பல நாட்டில் பார்க்கும் மீடியாவுல சொல்லியிருக்காங்க ஆனா பொண்ணுங்க விட்டுகொடுக்க மாட்டாங்கன்னு பூசி மொழுகிட்டு இருக்காங்க//இதுக்கு தான் மொழுக தெரிஞ்சா மொழுகோனும், இல்லனா இப்பிடி தான்,
//பொண்ணுகு பிடிக்காத புடவையை மாப்பூ எடுத்து கொடுத்தா அந்த பொண்ணு ஏத்துக்குவாளா இல்லை பரவால்லைன்னு சும்மாதான் இருந்துடுவாளா ஏண்டா புடவை வாங்கிட்டு வந்தோம்னு மாப்பூ தலையில அடிச்சிக்கிற அளவுக்கு உண்டாக்கிடுவாங்க பெண்கள்//துணிக்கடய கண்டாவெ ஏதோ பேய பாத்தாப்பிடி ஓடுவாரு நம்ப மாப்பிள்ளைனு சொல்லுது நம்ப அம்மிணி( உன்ற மாமன் உனக்கு சீலயே வாங்கிட்டு வர மாட்டாருன்னு சொல்லு)
//சரி பொண்ணை குடுத்துட்டாங்க மாப்பிள்ளையும் மாமனார் மாமியாரை அம்மா அப்பாவா நினைக்கனும்னு சொல்றாங்க அப்படி இருக்கப்ப அந்த மாப்பிள்ளைக்கு பிடிச்ச சட்டையத்தான் வாங்கி குடுக்கறது அவர் போடாதா அவருக்கு பிடிக்காத பிராண்டையே எப்பவும் வாங்கி குடுத்தா என்ன அர்த்தம்ங்க அப்ப மாப்பிள்ளைக்கு பிடிக்காதத செய்றதயே வழக்கமா வச்சிருக்காங்கன்னுதான சொல்லனும்//அது தானே கேட்கராங்கல்லோ பதில சொல்லுங்கப்பா சொர்ணாக்காவுக்கு..
//எதை வாங்கி குடுத்தாலும் போட்டுக்குவான் அப்படீன்னு ஒரு நினைப்பு ஒரு அலட்சியம் //அவிய பெத்த பொண்ணயே கட்டிட்டானாமா, 6 மாசத்துல கிழியர சட்டைக்கு என்னனு ஒரு அலச்சியம் கண்ணு வேரென்னோ...:)
// இதே அந்த பொண்ணு அவ அப்பாவுக்கோ இல்ல அண்ணன் தம்பிக்கோ மாப்பு காசுல சட்டை வாங்கி குடுத்தான்னு வைங்க எது இருப்பதிலயே நல்ல பிராண்டோ அதத்தான் வாங்குவா அப்ப பிராண்ட் இல்லாத சட்டைலாம் கண்ணுக்கே தெரியாதுங்க பொண்ணுங்களுக்கு// 1000க்கு கம்மியா(ஒரு சட்டை) எடுக்கவே மாட்டாங்கப்பா இந்த புள்ளைக..
//இப்படி எல்லா விததில்லும் கஸ்ட்டம் மாப்பிள்ளைகளுக்குத்தான் நடக்குதுங்க நடுவரே.//இதுக்கு என்ன விளக்கமப்பா வெச்சு இருக்கீங்கோ, சுருக்கா வந்து சொல்லிட்டு போங்கோ..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//அன்பு நடுவரே இந்த மருமகளுங்களால பசங்க லீவுக்கு கூட அம்மாவீட்டுக்கு போக முடியலியாம். நாத்தனார் வராங்கன்னு 144 தடையுத்தரவு போடறாங்களாம். எனக்கு ஒரு சந்தேகம்//உனக்கும் சந்தேகமா, கேளு தாயி.. கேளு..
. இவங்க நாத்தனார் இன்னொரு வீட்டு மருமகள்தானே. அது எப்படி அவங்களுக்கு மட்டும் லீவுக்கு அம்மா வீட்டுக்கு வர முடியுது? லாஜிக் இடிக்குதே...//அந்த புள்ளைக்கு மாமியா இல்லயா இருக்கும் அம்மிணி...;)
//இன்னொரு விஷயம் நடுவரே! மகன் மாமனார் வீட்டுக்கு போனால் அப்பா அம்மா போக விடாமல் தடுப்பாங்களாம். மீறிப் போனால் பிரச்ச்னையாம். நாங்க சொல்லலீங்க எதிரணியினர்தான் சொல்றாங்க. இப்படி கிளம்பும் போதே மனநிம்மதி இல்லாமல் போகும் போது மாமனார் வீடு இனிக்கவா செய்யும். ரொம்ப கஷ்டம் நடுவரே. மருமகளுக்கு மாமியார் பக்கம் மட்டும் இடின்னா மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா பக்கமும் இடி. மாமனார் வீட்டுக்கு போகலைன்னா மனைவிகிட்டயும் இடி. பாவம் மாப்பிள்ளைகள் நிலை// நாலாப் பக்கமும் இடிச்சா ஒருத்தன் எப்புடி தாங்குவான்? மத்தாளம் வாங்குர அடிய விட மாப்பிள வாங்குர இடி சாஸ்தி தான் போல..
//அப்புறம் ஏதோ மாமனார் வீட்டுல எடுத்து கொடுத்த சட்டை பிடிக்கலைன்னு அந்த மாப்பிள்ளை போடாமலே வச்சிருக்காராம். அடக்கடவுளே மாமனார் வீட்டில் மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிப்பாங்கன்னு சொன்னாங்களே எதிரணியினர். மாப்பிள்ளைக்கு என்ன மாதிரி சட்டை பிடிக்கும்னு கூடவா இத்தனை வருஷத்தில் அந்த மாமனார் வீட்டினர் தெரிஞ்சு வச்சுக்கலை.// !// பொண்ணயும் குடுத்து புடிச்ச சட்ட்யும் குடுக்கோனும்னு நீ சொல்ரே, பொண்ணு வூட்டுல கிழிஞ்ச துணியவே குடுத்தாலும் தெச்சு போட்டுட்டு வரோம்னு அவிய சொல்ராங்கோ, ஆக மொத்ததுல என்னய துணிய கிழிக்க வெச்சுடுவீங்கோ..
//அப்போ கவனிகறாங்க மரியாதையா நடத்துறாங்க அப்படீன்னு சொல்றது எல்லாம் டுபாக்கூர்தானா நடுவரே//அப்பிடி தான் போல..
//நடுவரே இந்த மனசு இருக்க வேண்டியது மாப்பிள்ளைக்கு மட்டும்தானுங்களா? ஏன் மருமகள்களும் மாமனார் மாமியாரை அனுசரித்து போகலாமே//கவியின் கேள்விக்கு என்ன பதில் மருமஅளுகளா?
//. ஏன் மாமியார்னு சொன்ன உடனேயே வில்லியாவே பார்க்கணும். அப்புறம் கஷ்டம் குஷ்டம்னு புலம்பணும் :)//பின்ன அந்த அம்மா மட்டும் பய்யன பிரிச்சுட்டு போக வந்த ராட்சசி ரேஞ்சுக்கு பார்த்தா வில்லியா மட்டுமா பார்க்க தோனும்?அம்மிணி உனக்கு ஒரு பழ்மொழி தெரியுமா? சொல்ரேன் கேட்டுக்க...மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.// அப்புறம் எங்க போயி அனுசரிக்கரது,.
//நடுவரே அப்பப்போ போய் வரும் மாப்பிள்ளகளுக்கே இம்பூட்டு கஷ்டம்னா வீட்டோட இருக்கும் மாப்பிள்ளைகள் நிலைமை என்னவா இருக்கும்னு யோசிச்சீங்களா?.//நானு ரோசிச்சு என்னாகுது அம்மிணி, நீங்களே ரோசன பண்ணிஒ ரு முடிவுக்கு வாங்கோ..
// எப்பவோ போற மாப்பிள்ளையை ஓவர் மரியாதை கொடுத்து கொல்லுவாங்கன்னா வீட்டோட மாப்பிள்ளையை கால்தூசுக்கு கூட மதிக்காமல் கொல்லுவாங்க. சுத்தமா மரியாதை இருக்காது. சிம்பிளா சொல்லணும்னா சொல்ல மறந்த கதை சேரன், ஜில்லுன்னு ஒரு காதல் வடிவேலு மாதிரி நிலைமைதான் அவங்களுக்கு. வீட்டுலதான் மரியாதை இல்லைன்னா வீட்டோட மாப்பிள்ளைகளுக்கு வெளியிலும் மதிப்பு மரியாதை கிடையாதுங்க. இப்ப சொல்லுங்க யார் பாடு திண்டாட்டம்னு.// என்னம்மா மருமகளுகளா, கவிக் கண்ணு சொல்ரது எல்லாம் உண்மையா? இல்ல அம்மினி நீங்க ஆரும் பக்கதுல இல்லனு எம்படகிட்ட சரடுவிடுதா? வாங்கோ, வந்து உண்மய புட்டு புட்டு வைங்கோ.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வணக்கம், வந்தனம், நமோஷ்கார் நடுவர் அவர்களே...

ரம்யா சீரியஸ் (காமிடி) தலைப்பு தந்ததற்க்கு நன்றிகள்.

நடுவரே, நீங்க தலைப்பை தெளிவா விளக்கிட்டதால எனக்கு குழப்பமே இல்லை... நிச்சயம் ஒரு வீட்டுக்கு மருமகளா போறது தானுங்க நெம்ப நெம்ப கஸ்டம்...

நேரமின்மையால் இதுவரை நடந்திருக்கும் வாதங்களை படிக்க முடியவில்லை... எதுவும் ரிப்பிடேஷன் இருந்தால் தயவு செய்து மன்னிச்சிடுங்க...

யுவர் ஆனர், நீங்கலே சொல்லுங்க இதுவரை எந்த வீட்டிலாவது அல்லது பேப்பரிலாவது மருமகனை கொடுமை செய்த செய்தி படிச்சிருக்கீங்கலா... ஆனா இந்த மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமைன்னு எப்புட்டு செய்திகள் வருது... இந்த மருமகளா போவுர பொண்ணுங்க இருகாங்களே ரொம்பவே பாவப்பட்டவங்க நடுவரே...

இந்த மாமியார் மருமகள் சண்டையில்லாத வீடுகள்னு பாத்தோம்னால் நாம விரல விட்டு என்னிடலாம்... ஏன்னால் வீட்டுக்கு வரும் மருமகளை மருமகளா தான் பார்க்கிறாங்கலே தவிர மகளா பார்க்கிறதில்லை இந்த மாமியாருங்க... அங்க தான் மாமியார் மருமகள் சண்டையே ஆரம்பமாகுது. ஆனா எல்லா வீட்லையும் மருமகனை மருமகனா மட்டும் பார்க்காமல் எல்லா மாமியாரும் தன்னோட சொந்த மகனா தான் பார்க்கிறாங்க... அதனால தான் இங்க மாமியார் மருமகன் சண்டை வரது இல்லை.

மருமகள் புகுந்த வீட்டுக்கு போனால் மாங்கு மாங்குனு வேலை செய்தாகனும்... ஆனா மருமகன் மாமியார் வீட்டுக்கு போனால் ராஜ உபச்சாரம் தான், கடா வெட்டி கறி விருந்து போடுரதும், மீனு, முட்டை தினிக்கறதும்னு ஒரு ஜமாய் தான் போங்க... முக்கிய காரணம் மருமகன் சந்தோஷமா இருந்தால் தன் பொண்ணையும் சந்தோஷமா வச்சிப்பாருங்கர நம்பிக்கை, ஆனால் இந்த மாமியாருங்க மருமகளை பத்தி மட்டும் ஏன் இந்த மாதிரி நல்லதா யோசிக்காமல் தன் மகனை பிரிச்சிட்டு பொய்டுவான்னு தப்பு தப்பா யோசிச்சு யோசிச்சே ப்ரச்சினைகளை உண்டு பன்னிடறாங்க...

இதுல யாருக்கு கஷ்டம் நு கஷ்டபடாமல் நீங்கலே யோசிச்சுட்டிருங்க... பசி வயிற்றை கிள்ளுது, நான் போய் ஒரு நாலு ப்ரெட் துண்டு சாபிட்டு அப்பறமா வரேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நடுவர் அவர்களே! நம் நாட்டின் பராம்பரியம் என்ன பெண்களுக்கு இரண்டு வீடு ஒன்று பிறந்த வீடு இன்னொன்று புகுந்த வீடு.. அப்படிப்படிட்ட புகுந்த வீட்டிற்கு செல்வது பெண்களுக்கு ஒன்றும் புதியது கிடையாது.. அதில் என்ன கஷ்டங்கள் இருக்க போகிறது.. பெண்களுக்கு பொறுமை தியாகம் பொதுநலம் இப்படின்னு பல்வேறு குணங்கள் இருக்கு அதனால் அவர்கள் எதற்கும் தயாராக செல்வார்கள்.. இப்பொழுதுள்ள பெண்களை பற்றி தான் தெரியுமே.. புகுந்த வீட்டிற்கு போனவுடன் இவர்கள் ராஜ்ஜியம் தான் அங்கு நடக்கும்.. அப்படியும் சரிபட்ட வரவில்லையென்றால் தனி குடித்தம் தான்.. இதில் பெண்கள் கஷ்டமாக கருதுவதில் என்ன இருக்கின்றது.. அதுவே ஒரு ஆண் அதாவது வீட்டோட மாப்பிள்ளையாக சென்றால் அந்த வீட்டில் கொஞ்ச நாள் மாப்பிள்ளையை கவனி கவனின்னு கவனிப்பாங்க பிறகு பாவம் அந்த மாப்பிள்ளையின் பாடு என்ன? எந்த வேலையானாலும் அவர்தான் இழுத்து போட்டு செய்ய வேண்டும்.. அப்படி செய்யவில்லையென்றால் சரியான தண்ட சோறு வீட்டோட மாப்பிள்ளையா இருந்துக்கிட்டு எந்த வேலையும் செய்றது கிடையாது.. அப்படி இப்படின்னு திட்டிவாங்கிகட்டிப்பார்.. அதாவது ஆண்பிள்ளைகளுக்கு (மாப்பிள்ளைகள்) அழகு குடும்ப தலைவன் என்ற ஒரு பொறுப்பு.. ஒன்று தனிக்குடித்தமாக இருக்க வேண்டும் இல்லை அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.. அதை விட்டுட்டு வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் உற்றார் உறவினர் சமூகம் எல்லோரும் அவரை ஒரு கேலியாக பார்ப்பார்கள்.. எங்கு சென்றாலும் அறிமுகம் செய்தாலும் வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லி கஷ்டப்படுத்துவாங்க.. சோ இது அவருக்கு எவ்வளவு பெரிய கஷ்டம்.. ஒரு நாள் இரண்டு நாள் மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு வந்து செல்வது என்பது பெரிதாக தெரியாது.. அந்த நேரத்திலும் அந்த மாப்பிள்ளைக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கு.. எப்போ நம் வீட்டிற்கு போவோம்ன்னு நினைச்சிக்கிட்டு இருப்பார்.. அவர்களால் வேறொரு வீட்டில் இருந்துக் கொண்டு சுதந்திரமாக இருக்க முடியாது.. இந்த வர்க்கத்திலும் சில பேர் வீட்டோட மாப்பிள்ளையாக போய் சந்தோஷமா எது சொன்னாலும் செய்துக்கிட்டு அப்படிபட்டவர்கள் 1 சதவீதம் பேர் தான் இருப்பாங்க.. மற்ற 99 சதவீதம் பேர் கஷ்டப்படுவர்கள் தான்.. நம் எதிரணி தோழிகளை பார்த்து ஒன்று கேட்கிறேன்.. உங்களில் எத்தனை பேருடைய கணவர் வீட்டோட மாப்பிள்ளையா இருக்காங்க.. அப்படி இருந்தால் அவரிடம் போய் கேளுங்க.. நீங்க ரொம்ப சந்தோஷமா தான் இருக்கீங்களான்னு. நிச்சயம் யாரும் அப்படி இருக்க மாட்டாங்கன்னு நான் அடிச்சி சொல்றேன்..
பெண்கள் தைரியமாக இது பிடிக்கவில்லை.. இதை நான் சாப்பிட மாட்டேன்ன்னு சொல்வாங்க.. ஆனால் இந்த வீட்டோட மாப்பிள்ளைகள் பாடுதான் திண்டாட்டம் பாவம் எந்த குறையிருந்தாலும் சொல்ல மாட்டாங்க நிறை இருந்தாலும் சொல்ல மாட்டாங்க..
//நாங்க மட்டும் கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போனா அங்கே மறுமகளா நடந்துக்கனும் ஆனா இவங்க நடக்க மாட்டாங்களாம்//
நடுவர் அவர்களே என்ன கேள்வி இது.. பெண்களாகிய நாம் பருவம் அடைந்து கல்யாணம் என்ற ஒரு புது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றோம்.. அவர்களுக்கு பொறந்த வீட்டிற்கு அடுத்தப்படி புகுந்த வீடு தான்.. அதனால் அதற்கேற்ற மாதிரி அந்த பெண் தன்னை தயார்படுத்துக் கொள்வாள்.. ஆனால் ஆண்கள் எப்படி அப்படி மாற முடியும்.. ஆண்களால் சீக்கிரம் மாற முடியாது.. அவர்கள் சுதந்திரம் பறி போனது போல் நினைப்பார்கள்.. மறுமகள் செய்வது போல் மாப்பிள்ளையும் புகுந்த வீட்டிற்கு சமையல் செய்வது துணி துவைப்பது பாத்திரம் துவைப்பதுன்னு செய்ய சொல்றாங்களா.. அது அது அந்த அந்த இடத்தில் இருந்தால் தான் அழகு..
//பழக்கமில்லாத ஒன்னை செய்யும் போது பின்னே .........எஞ்சாய் பண்ண வேண்டியது தானே//
பழக்கமில்லாத்து பிடிக்காத்துன்னு தெரிஞ்ச பிறகும் எப்படிங்க எஞ்சாய் பண்ணுவாங்க.. நீங்க அப்படி செய்வீங்களா சொல்லுங்க.
மணம் இருந்தால் மார்க்கமுண்டு... உண்மையான வார்த்தை.. மாப்பிள்ளை ஒரு நாள் இரண்டு நாள் மாமியார் வீட்டில் இருந்தால் அது அவருக்கும் மரியாதை கூட இருக்கும் பெண்ணிற்கும் மரியாதை அதுவே வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் ஒரு மாதம் மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிப்பாங்க.. முதலில் வாழையிலையில் சோறு போடுவாங்க.. அடுத்து தட்டில் போடுவாங்க அடுத்து கையில போடுவாங்க கடைசியில் தரையில் தான் அவங்களுக்கு சோறு.. இப்படி விருந்தும் மருந்தும் குறிப்பிட்ட நாட்கள் இருந்தால் தான் நல்லது..
மருமகளுக்கும் மாமியார் வீட்டில் கஷ்டம் இருக்கின்றது நான் இல்லையென்று சொல்லவில்லை.. மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகளைவிட மாமனார் வீட்டிற்கு சொல்லும் மருமகனுக்கு நான் அதிக படியாக கஷ்டம் கஷ்டம் கஷடம்..
நடுவர் அவர்களே எதிரணியினர் உங்களை நன்கு குழப்பி விடுறாங்க.. (எங்க அளவிற்கு இல்லைன்னு நினைக்கிறேன்) பார்த்து தீர்ப்பு வழங்குங்க.. என்று கூறு விடை பெறுகிறேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மருமகன்களுக்கே கஷ்டம்...
என்ன நடுவரே இன்னுமா வரலை....?நம்ம எதிரணி தோழிகள் சொல்ராங்களே மாமிகள் மருமகள்களை மகளா பார்பதில்லைன்னு......"நம்ம மருமகள்கள் மட்டும் என்னவாம் மாமிய தன் அம்மாவா நினைக்கிறாங்களா?"அம்மா திட்டினா கேட்டுட்டு ஏன் அடிச்சா அப்பாட்ட சொல்லிட்டு சும்மாதானே இருக்காங்க, மாமி திட்டினா மட்டும் மானம்போனமதிரி நம்ம மாப்பிள்ளைகிட்ட கம்ப்லெயிட் கொண்டுவந்தா என்ன அர்த்தம்? நம்ம அம்மா வயசு அதே நிலையில் இவங்க திட்டிருப்பாங்கண்னு கொஞ்சம் அனுசரிக்கிறது...!
நடுவரேஇவங்க என்னவேணா சொல்லட்டும் மாமியின் ஒரே பயம் திருமணம் முடிந்து மகன் மனைவி பேச்சில் மயங்கிடுவானோ நம்மை மறந்திடுவானோன்னு,மருமகள்கள் இதை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காங்களே,மகன் காட்டவேண்டிய அன்பை இவங்க இருமடங்கு காட்டட்டும் அங்க ஏன் பிரச்சனை வருது?மாமியும்,மனைவியும் சந்தோஷமா இருந்தா நம்ம மாப்பிளைய கைலபிடிக்க முடியாதாக்கும் அம்புட்டு சந்தோஷமாகிடுவாக தெரியும்ல...... எங்கவீட்ல இப்படிதாம்பா....
"சேரனின் சொல்ல மறந்தகதை படம் பார்க்கலையா நாட்டாம?"மாப்பிள்ளைபாடு எம்புட்டு திண்டாட்டமா போச்சுது,அந்தாகால படத்தில் பட்டுமாமி மாமாவ படுத்தாத பாடா?உதாரணம் சொல்லனும்னா நாங்களும் சொல்லுவோம்ல......
நம்ம பொம்மனாட்டிக வாயில பேசியும்,கோவப்பட்டும்,புலம்பியும் தன் கஷ்டங்களை வெளிப்படுத்துகின்றனர்.ஆனால் அவர்களைவிட கஷ்டங்களை அனுபவித்தும் ,மனதில் போட்டு புலுங்கியும் கொண்டிருப்பவர் நம்ம மாப்பிள்ளைகளே........அதனால்தான் எக்காளத்திலும் மருமகனாக இருக்கும் ஆண்களுக்கு மனச்சுமை தாங்காமல் இதய நோய்கள் தாக்குகின்றன நாட்டாமை அவர்களே........
மீண்டும் வருவோம்ல......

அன்பார்ந்த நடுவருக்கு எனது காலை வணக்கம்.எதிரணியினர் சுத்தி முத்தி சொல்ல வருவது பெண்ணுக்கு பொறுமை அதிகம்,சமூகத்தில் பெண்ணே புகுந்த வீட்டுக்கு போக வேண்டியது என்ற நிலை உள்ளது,அதையும் மீறி போனால் சமூகம் மேலும் தன் வீட்டில் உள்ளவர்கள் தன்னை அவமானப்படுத்துவார்கள் என்றெல்லாம் சொல்லி மாப்பூ க்கு விருப்பமிருந்தாலும் தடுக்கிறார்கள்.ஏன் நடுவரே மாப்பூ க்கு வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் மரியாதை இல்லை என்று ஒரிரு படத்தை உதாரணம் காட்டினால் நாங்கள் முக்கால்வாசி படங்கள் மற்றும் அன்றாட செய்திகளை சொல்ல வேண்டும்.
ஆண்,பெண் என்று பிரித்து பார்த்து அதில் பெண்ணே பொறுமைக்கு உரியவள்,அனுசரித்து போக வேண்டியவள் என்றால் எப்படி நடுவரே.அவளும் மனுஷி தான்.மாமியார் வீட்டில் எங்கு சுற்றினாலும் பிரச்சனை என்றால் என்ன செய்வாள்.//அவரு டிவி பார்க்கறாரா பக்கத்துல போய் கூட உட்கார மாட்டாங்க நிறைய மாப்பிள்ளை.ஏன் மாப்பிள்ளைக்கு ஏதும் வியாதியா இருக்கும்னு ஒதுக்கி வைக்கறாங்களோ//அப்பிடி இல்லை நடுவரே ஒரு மரியாதை தான்.ஆனால் மருமகளுக்கோ அப்பிடி உட்கார்ந்தால் உங்க அம்மா வளர்த்த லட்சணம் இது தானா.போய் வேலை பாரு என்பார்கள்.
//இந்த காலகட்டத்தில் திருமணம் முடியும் முன்பே மொபைல் மூலம் வருங்கால கணவர் , மாமனார், மாமியார், கணவரின் அக்கா தங்கை கூட பேசி பழகிக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது. மருமகன் அவ்வாறு பேசி பழக்கப்படுத்திக்கொள்வது கடினம்,//யாரு அப்பிடி நடுவரே....கல்யாணத்திற்கு முன்பு எத்தனை பசங்கள் தன் வருங்கால மாமனார் வீட்டில் விருந்து சாப்பிட்டு எப்பிடி ஒன்றி போகிறார்கள் தெரியுமா.அவர்களின் அந்த நெருக்கத்தை தடுத்து நிறுத்துவது மாப்பூ வின் அம்மா,அப்பா தான்.
நடுவரே எதிரணியில் சொல்லுறாங்க மாப்பிள்ளைக்கு தன் மனைவி வீட்டுக்கு ஏதாவது செய்தால் அம்மா சண்டை,செய்யவில்லை என்றால் மன்னைவி சண்டை என்று.இதிலிருந்து தெரிகிறது மாப்பூ வுகே அவர் வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பெண்ணுக்கு எப்படி இருக்கும்.நீங்கள் சற்று யோசிக்க வேண்டும் நடுவரே.//அப்புறம் ஏதோ மாமனார் வீட்டுல எடுத்து கொடுத்த சட்டை பிடிக்கலைன்னு அந்த மாப்பிள்ளை போடாமலே வச்சிருக்காராம். அடக்கடவுளே மாமனார் வீட்டில் மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிப்பாங்கன்னு சொன்னாங்களே எதிரணியினர். மாப்பிள்ளைக்கு என்ன மாதிரி சட்டை பிடிக்கும்னு கூடவா இத்தனை வருஷத்தில் அந்த மாமனார் வீட்டினர் தெரிஞ்சு வச்சுக்கலை. அப்போ கவனிகறாங்க மரியாதையா நடத்துறாங்க அப்படீன்னு சொல்றது எல்லாம் டுபாக்கூர்தானா//நடுவரே அவர்களுக்கு தெரிந்ததை எடுத்து தருகிறார்கள்,பிடிக்கவில்லை என்றால் அவர்களிடமோ அல்லது மனைவியிடமோ சொல்லி தனக்கு பிடித்ததை மாற்றி வாங்கலாமே..அதற்காக அவர்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால் எப்படி நடுவரே...
////ஏங்க, உங்க அம்மா – அப்பா எதாவது சொல்லிட்டு போறாங்க.. நீங்க யோசிக்கலாம்ல.. மாமனார், மாமியார்க்கு உடம்பு சரியில்லாதப்பவோ, அவங்க கஷ்டப்படும்போதோ அன்பா, அனுசரனையா ரெண்டே ரெண்டு வார்த்தை பேசுங்களேன். எல்லாத்துக்கும் மனசு தான் காரணமுங்க//
நடுவரே இந்த மனசு இருக்க வேண்டியது மாப்பிள்ளைக்கு மட்டும்தானுங்களா? ஏன் மருமகள்களும் மாமனார் மாமியாரை அனுசரித்து போகலாமே. ஏன் மாமியார்னு சொன்ன உடனேயே வில்லியாவே பார்க்கணும். அப்புறம் கஷ்டம் குஷ்டம்னு புலம்பணும் :)//நடவரே திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை பெண்ணுக்கிட்டே கேட்பது இந்த அனுசரனை தான்...மருமகள் அவளால் ஆனவரை அனுசரித்து போவாள்.முடியாத பட்சத்தில் துள்ளி எழுந்துவிடுவாள் தன் உரிமையை காப்பாற்றி கொள்ள.
அவசர வேலை என்னை அழைப்பதால் விரைவில் சூடான விவாததோடு வருகிறேன் நடுவரே.

Expectation lead to Disappointment

நடுவரே....

ஒரு வீட்டுக்கு முதல் மருமகனா போயிட்டா அவ்வளவுதான்...அவங்க மரியாதை குடுக்கறேன்னு குடுக்கறதும் போதும்..கறக்கறதும் போதும்...எல்லாவற்றிற்கும் அவரை எதிர்பார்ப்பர்..அவரால் முடிகிறதோ இல்லையோ அவர் வரவேண்டும்..செலவு செய்ய வேண்டும்...இல்லையேல் பாவம்..பழிக்கு ஆளாவார்..யாரோ ஒரு தோழி சொன்னார்...பலரும் மருமகளை கேள்வி கேட்பார்கள் என்று..எங்காவது ஒரு விஷேசத்துக்கு செல்லும்போது புது மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் பெண்களின் உறவினர்கள் பல கேள்விகளை கேட்பர். சில தேவையில்லாத அறிவுரைகளையும் சொல்வார்கள்....வெளிநாடு செல்லும் அளவுக்கு படித்தவர் என்றால் அவரை வெளியில் போக சொல்லி கட்டாயபடுத்துவர்...மகள் மூலம்...அதிலும் ஒரு வீட்டில் மாப்பிளை வெளினாட்டில் வேலை பார்ப்பவராக இருந்து இன்னொரு மாப்பிள்ளை உள்ளூராக இருந்துவிட்டால் அதையும் கம்பேர் செய்து கிண்டலடிப்பவர்களும் உண்டு...வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் அம்மா வீட்டிற்கு செல்லும் போதும் பெட்டி நிறைய கொண்டு சென்றால் தான் மாப்பிள்ளைக்கு மதிப்பு..இல்லையேல் அந்த பெண்ணையும் சேர்த்து கிண்டலடிப்பார்கள்..வெளிநாட்டில் இருக்கும்போது ஒரு குழந்தை பிறக்கும் போது அதை முதலில் பார்க்க முடியாத நிலைதான் பெரும்பாலான ஆண்களை பெற்றவர்களுக்கு...தங்களின் வாரிசை தன் பெற்றோர் பார்க்கவில்லை என்பது ஒரு மருமகனுக்கு கஷ்டம்தானெ?

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

நடுவர் அவர்களே,

//அது எப்படி அவங்களுக்கு மட்டும் லீவுக்கு அம்மா வீட்டுக்கு வர முடியுது? லாஜிக் இடிக்குதே...
//

பம்பின் கால் பம்பறியும்.. வீட்டுக்கு வரும் மருமகளை எந்த பாடுபடுத்துவோம்.. அதே மாதிரி தான் நம்ம சம்மந்தியும் பொண்ணை படுத்துவான்னு தெரிஞ்சு தான் தான் அந்த மாமியார் அதுக்கு தகுந்த இடமா பார்த்து பொண்ணை தருவாங்க. ஒண்ணு மாமியார் இல்லாத இடமா இருக்கும். இல்லைனா பிறப்பிலேயே வாயில்லா பூச்சியா இருக்க மாதிரி மாப்பிள்ளைய பார்ப்பாங்க. அப்படியும் இல்லைனா தன் வீட்டு பக்கமாவே பொண்ணுக்கு வீட்டை பார்த்து வச்சுடுவாங்க.. தன் பொண்ணு சேப்ஃடியா இருக்காங்கற தைரியத்துல தான் வீட்டுக்கு வந்த பொண்ணை இத்தன பாடு படுத்துறது. புரியுதுங்களா நடுவரே லாஜிக்கு..

//மகன் மாமனார் வீட்டுக்கு போனால் அப்பா அம்மா போக விடாமல் தடுப்பாங்களாம். மீறிப் போனால் பிரச்ச்னையாம். நாங்க சொல்லலீங்க எதிரணியினர்தான் சொல்றாங்க// நாங்க தாங்க சொன்னோம்.. எப்பவுமே பையனை பெத்தவங்களுக்கு தலைக்கு மேலே ஒரு கொம்பு வளர்ந்த பீலிங் இருக்கத்தான் செய்யுது(அந்த பீலிங் இல்லாதவங்களை நான் இங்கே சொல்லல) ஒண்ணு பையன் வீடு வசதியா இருந்து பொண்ணு வீட்டு வசதி குறைச்சலா இருந்தாலும் கெளரவம் பார்ப்பாங்க. அப்படி இல்லாம, பொண்ணு வீடு வசதியா இருந்து பையன் வீட்டு வசதி குறைவா இருந்தா அப்பவும் கெளரவம் பார்ப்பாங்க.

//மாப்பிள்ளைக்கு என்ன மாதிரி சட்டை பிடிக்கும்னு கூடவா இத்தனை வருஷத்தில் அந்த மாமனார் வீட்டினர் தெரிஞ்சு வச்சுக்கலை. அப்போ கவனிகறாங்க மரியாதையா நடத்துறாங்க அப்படீன்னு சொல்றது எல்லாம் டுபாக்கூர்தானா நடுவரே!//

மாப்பூக்கும் மனசுக்கு அடியில் தான், தன் பெற்றோர் தான் உயர்வு. அவங்க வாங்கி தந்த பொருள் தான் மதிப்பு வாய்ந்ததுங்கற ஒரு மனோ பிராந்தி, பீரெல்லாம் நிரம்பி வழியவே செய்யும். அந்த நினைப்போட மாமனார் எந்த பொருள் வாங்கினாலும், அது நன்றாகவே இருந்தாலும் அணிய தோணாது.

இங்கே அவரோட அம்மாவுக்கு எதை கேட்டாலும் சமைக்க தெரியாது.. சமைக்க தெரியாதுன்னு சொல்லியே அந்த புள்ளைக்கு உப்பு உரைப்பில்லாத ஏதோ சமையலை செய்து கொட்டுவாங்க. ஆனா, மாமியார் வீட்ல வக்கணையா செய்தாலும் பெரிய இதுவாட்டம் அதையெல்லாம் தொட மாட்டார். தொட அவர் கெளரவமும், அம்மா கெளரவமும் என்னாகும். காணாததை கண்ட மாதிரி சாப்புடுறான் பாருன்னு மாமனார் வீட்ல சொல்லிடுவாங்களோன்னு வீண் நெனப்புலயே திமிரா நடக்குற மாதிரி கற்பனை பண்ணிட்டு அதையெல்லாம் தொட கூடமாட்டார். அங்கே அம்மா வீட்டுக்கு போய் ரசம் சோறும், ஊறுகாயும் வச்சுட்டு சாப்புடுவார்.. பரவாயில்ல இந்த மாப்பூங்க மண்ணு ஒட்டாம இருக்க எப்பவும் கவரோட தான் அலையறாங்க ;)

//நடுவரே இந்த மனசு இருக்க வேண்டியது மாப்பிள்ளைக்கு மட்டும்தானுங்களா? ஏன் மருமகள்களும் மாமனார் மாமியாரை அனுசரித்து போகலாமே. ஏன் மாமியார்னு சொன்ன உடனேயே வில்லியாவே பார்க்கணும். அப்புறம் கஷ்டம் குஷ்டம்னு புலம்பணும் :)//

நடுவர் அவர்களே, மாமியார் துடைப்பத்துல அடிச்சாலும் சரி, முறத்துல அடிச்சாலும் சரி நாங்க பக்கத்தில இருந்து தான் பார்த்துட்டு இருக்கோம்..அவங்க எப்படி இருக்காங்களோ அப்படி தானேங்க பார்க்க முடியும். ஆப்பிள் ஆப்பிளா தானே கண்ணுக்கு தெரியும்.

// வீட்டோட மாப்பிள்ளையை கால்தூசுக்கு கூட மதிக்காமல் கொல்லுவாங்க.// நடுவர் அவர்களே, ரிடையர் ஆகி வீட்டுல இருக்க ஆண்களை பார்த்திருப்பீங்க தானே. அப்ப அவங்களை சாதாரணமா எதாச்சும் சொன்னாலும் அவங்க இப்ப வேலைக்கு போகாம, சம்பளம் வாங்காம வீட்ல இருக்கறதால தான் மதிக்காம சொல்றதா கற்பனை பண்ணிட்டு அடுத்தவங்களையும் உருட்டி எடுத்துடுவாங்க.. அதே நிலை தான் வீட்டோட மாப்பிள்ளையும் இருப்பார். வீட்டோட மாப்பிள்லைன்னா வேலைக்கு போக வேணாம், தன்மானத்தோட இருக்க வேணாம்னா சொல்றாங்க. வேலைக்கு போங்க.. நீங்க நீங்களா இருங்க.. அப்புறம் நடுவர் அவர்களே. எதிரணியை படம் மாத்தி சொல்ல சொல்லுங்க.. பாவம் சேரன் என்ன முழி முழிக்கறார் பாருங்க.. எதிரணில மாட்டிட்டு..;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//வணக்கம், வந்தனம், நமோஷ்கார் நடுவர் அவர்களே...//பட்டில வாதடா சொன்னாக்கா நீயுசா படிக்கிர நீயுசு...:)நமஸ்தே அம்மிணி..(...க்கும்,எங்களுக்கும் தெரியுமாக்கும்.)
//நடுவரே, நீங்க தலைப்பை தெளிவா விளக்கிட்டதால எனக்கு குழப்பமே இல்லை... நிச்சயம் ஒரு வீட்டுக்கு மருமகளா போறது தானுங்க நெம்ப நெம்ப கஸ்டம்...// மருமக அணியா, சூப்பரு பிரேம்ஜி...ஆனா ஒன்னு நீ தெளிவா புரிஞ்சுட்டு என்னய குழப்பியுடாம இருந்தா சேரி..
//நேரமின்மையால் இதுவரை நடந்திருக்கும் வாதங்களை படிக்க முடியவில்லை... எதுவும் ரிப்பிடேஷன் இருந்தால் தயவு செய்து மன்னிச்சிடுங்க...//முன்சாமீனு கேட்கற.இந்தா வெச்சுக்கோ..
//யுவர் ஆனர், நீங்கலே சொல்லுங்க இதுவரை எந்த வீட்டிலாவது அல்லது பேப்பரிலாவது மருமகனை கொடுமை செய்த செய்தி படிச்சிருக்கீங்கலா... ஆனா இந்த மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமைன்னு எப்புட்டு செய்திகள் வருது..// அதுவும் இந்த பட்டிய தொடங்கினதுக்கு அப்புரமா, பேப்பருகாரன் சொல்லி வெச்சாப்பிடி இதே செய்திய தான் போடரான்....:)
//இந்த மருமகளா போவுர பொண்ணுங்க இருகாங்களே ரொம்பவே பாவப்பட்டவங்க நடுவரே...//அக்காங்கண்ணு, நெம்ப தான் பாவம்....;)
//இந்த மாமியார் மருமகள் சண்டையில்லாத வீடுகள்னு பாத்தோம்னால் நாம விரல விட்டு என்னிடலாம்... ஏன்னால் வீட்டுக்கு வரும் மருமகளை மருமகளா தான் பார்க்கிறாங்கலே தவிர மகளா பார்க்கிறதில்லை இந்த மாமியாருங்க... அங்க தான் மாமியார் மருமகள் சண்டையே ஆரம்பமாகுது.// மாமியாளும் ஒரு காலத்துல மருமக தான்னு நினச்சாவே சண்ட வராது ராசாத்தி. ஆனா அப்பிடி நினைக்கிரதுக்கு நோ சான்சு கண்ணு....
//ஆனா எல்லா வீட்லையும் மருமகனை மருமகனா மட்டும் பார்க்காமல் எல்லா மாமியாரும் தன்னோட சொந்த மகனா தான் பார்க்கிறாங்க... அதனால தான் இங்க மாமியார் மருமகன் சண்டை வரது இல்லை.//இப்பிடி பார்த்துக்கரது தான் மாப்பிக்கு தொந்தரவா இருக்குதுன்னு நான் சொல்லல, நம்ம எதி அணி அக்காமாரு சொல்ராங்கோ...
//மருமகள் புகுந்த வீட்டுக்கு போனால் மாங்கு மாங்குனு வேலை செய்தாகனும்...//இல்லயினா மங்கு மங்குன்னுல உளுகும்.. என்னானு கேளு சில வூட்டுல அடி, பல வூட்டுல திட்டு...:)
//ஆனா மருமகன் மாமியார் வீட்டுக்கு போனால் ராஜ உபச்சாரம் தான், கடா வெட்டி கறி விருந்து போடுரதும், மீனு, முட்டை தினிக்கறதும்னு ஒரு ஜமாய் தான் போங்க... முக்கிய காரணம் மருமகன் சந்தோஷமா இருந்தால் தன் பொண்ணையும் சந்தோஷமா வச்சிப்பாருங்கர நம்பிக்கை, //சின்ன மீனப் போட்டு பெரிய மீனப் புடிக்கறாப்பிடி...
// ஆனால் இந்த மாமியாருங்க மருமகளை பத்தி மட்டும் ஏன் இந்த மாதிரி நல்லதா யோசிக்காமல் தன் மகனை பிரிச்சிட்டு பொய்டுவான்னு தப்பு தப்பா யோசிச்சு யோசிச்சே ப்ரச்சினைகளை உண்டு பன்னிடறாங்க...// அப்போ மாமி தான் பிரச்சனைக்கு மூல காரணமான ஆசாமின்னு சொல்லுது இந்த அக்கா...
//இதுல யாருக்கு கஷ்டம் நு கஷ்டபடாமல் நீங்கலே யோசிச்சுட்டிருங்க...//நீயும் சொல்லிடியா?...
// பசி வயிற்றை கிள்ளுது, நான் போய் ஒரு நாலு ப்ரெட் துண்டு சாபிட்டு அப்பறமா வரேன்...//அதோட ஒரு கிளாசு காபிய்யும் குடிச்சுபோட்டு நாலு எட்டுல சுருக்கா வா அம்மிணி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நம் நாட்டின் பராம்பரியம் என்ன பெண்களுக்கு இரண்டு வீடு ஒன்று பிறந்த வீடு இன்னொன்று புகுந்த வீடு.. அப்படிப்படிட்ட புகுந்த வீட்டிற்கு செல்வது பெண்களுக்கு ஒன்றும் புதியது கிடையாது.. அதில் என்ன கஷ்டங்கள் இருக்க போகிறது..//கஷ்டம் இருந்தா மட்டும் புகுந்த வீடே வேன்டாம்னு சொல்லிர தான் முடியுமா?
// பெண்களுக்கு பொறுமை தியாகம் பொதுநலம் இப்படின்னு பல்வேறு குணங்கள் இருக்கு//நல்லவ நல்லவன்னு சொல்லியே பொம்பளைகள கட்டி போடராங்கய்யா..
//.இப்பொழுதுள்ள பெண்களை பற்றி தான் தெரியுமே.. // உனக்கு அய்யோ மன்னிச்சுபோடுங்க அம்மாச்சி.(எப்போமே நானு பெரியவியள வாங்க, போங்கன்னு தான் சொல்றது ..;)
//புகுந்த வீட்டிற்கு போனவுடன் இவர்கள் ராஜ்ஜியம் தான் அங்கு நடக்கும்.. அப்படியும் சரிபட்ட வரவில்லையென்றால் தனி குடித்தம் தான்.. இதில் பெண்கள் கஷ்டமாக கருதுவதில் என்ன இருக்கின்றது..//தனியா போனாலும் போனப் போட்டு கஷ்டத்த அனுப்பரீங்கன்னு தான் நம்ப மீனாப் புள்ள சொல்லுச்சு.
//அதுவே ஒரு ஆண் அதாவது வீட்டோட மாப்பிள்ளையாக சென்றால் அந்த வீட்டில் கொஞ்ச நாள் மாப்பிள்ளையை கவனி கவனின்னு கவனிப்பாங்க பிறகு பாவம் அந்த மாப்பிள்ளையின் பாடு என்ன? எந்த வேலையானாலும் அவர்தான் இழுத்து போட்டு செய்ய வேண்டும்.. அப்படி செய்யவில்லையென்றால் சரியான தண்ட சோறு வீட்டோட மாப்பிள்ளையா இருந்துக்கிட்டு எந்த வேலையும் செய்றது கிடையாது.. அப்படி இப்படின்னு திட்டிவாங்கிகட்டிப்பார்.. //கண்ணு இந்த ஆம்பிளைகளுக்கு நிரய சாய்சு இருக்குது அப்பன் ஆத்தாகூட இருந்துகலாம், தனியாவும் போலாம், அப்புறம் நீ சொல்ராப்பிடி வூட்டோட மாப்பி யாவும் போலாம், வூட்டோட மாப்பியா போனா பிரச்சன வரும்னு தெரியாம இருகரதுக்கு, வாய்க்குள்ளார விரல வுட்டா கடிக்க தெரியாத பாப்பாவா அம்மிணி,சொகுசா இருக்கோனும்னா, சில பல சஙகடத்த கண்டுக்காம போயடோனும், என்ன நான் சொல்ரது...
// அதாவது ஆண்பிள்ளைகளுக்கு (மாப்பிள்ளைகள்) அழகு குடும்ப தலைவன் என்ற ஒரு பொறுப்பு.. ஒன்று தனிக்குடித்தமாக இருக்க வேண்டும் இல்லை அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்..//பாரு எதிர் அணிக்கு நீயே கோலப் போட்டு குடுக்கற. நான் என்ன சொல்ரது.
// அதை விட்டுட்டு வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் உற்றார் உறவினர் சமூகம் எல்லோரும் அவரை ஒரு கேலியாக பார்ப்பார்கள்.. எங்கு சென்றாலும் அறிமுகம் செய்தாலும் வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லி கஷ்டப்படுத்துவாங்க.. சோ இது அவருக்கு எவ்வளவு பெரிய கஷ்டம்// நீ சொல்ரது ஒன்னு ரெண்டு மாப்பிசுகளுக்கு வேனா பொருந்தும் அம்மிணி,ஏன்னா அல்லாரும் வீட்டோட மாப்பூசா போரது இல்லயெ..
//ஒரு நாள் இரண்டு நாள் மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு வந்து செல்வது என்பது பெரிதாக தெரியாது.. அந்த நேரத்திலும் அந்த மாப்பிள்ளைக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கு.. எப்போ நம் வீட்டிற்கு போவோம்ன்னு நினைச்சிக்கிட்டு இருப்பார்.. அவர்களால் வேறொரு வீட்டில் இருந்துக் கொண்டு சுதந்திரமாக இருக்க முடியாது..// ஏன் கண்ணு வேரொரு வூடுன்னு நினைக்கோனும். என்ற வூட்டுகாரி வூடுன்னு நினைக்க வேன்டீதுதானோ...
// இந்த வர்க்கத்திலும் சில பேர் வீட்டோட மாப்பிள்ளையாக போய் சந்தோஷமா எது சொன்னாலும் செய்துக்கிட்டு அப்படிபட்டவர்கள் 1 சதவீதம் பேர் தான் இருப்பாங்க.. மற்ற 99 சதவீதம் பேர் கஷ்டப்படுவர்கள் தான்..// நாங்க 100 சதவீதம் கஷ்டப்படரம்னு எதிர் அணி சொல்லுதே.
//நம் எதிரணி தோழிகளை பார்த்து ஒன்று கேட்கிறேன்.. உங்களில் எத்தனை பேருடைய கணவர் வீட்டோட மாப்பிள்ளையா இருக்காங்க.. அப்படி இருந்தால் அவரிடம் போய் கேளுங்க.. நீங்க ரொம்ப சந்தோஷமா தான் இருக்கீங்களான்னு. நிச்சயம் யாரும் அப்படி இருக்க மாட்டாங்கன்னு நான் அடிச்சி சொல்றேன்..// யாரா அம்மிணி அடிச்சு சொல்ரே, என்னயவா, வேண்டாம்டா சாமி, பச்சப்புள்ளய அடிக்ககூடாது. நெம்ப தப்பு...
//பெண்கள் தைரியமாக இது பிடிக்கவில்லை.. இதை நான் சாப்பிட மாட்டேன்ன்னு சொல்வாங்க.. ஆனால் இந்த வீட்டோட மாப்பிள்ளைகள் பாடுதான் திண்டாட்டம் பாவம் எந்த குறையிருந்தாலும் சொல்ல மாட்டாங்க நிறை இருந்தாலும் சொல்ல மாட்டாங்க..//வாய திறந்தா தான் வெட்டிச்சோறுக்கு பிரியாணிசோறு கேக்குதான்னு வச உழுகும்ல....:)
////நாங்க மட்டும் கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போனா அங்கே மறுமகளா நடந்துக்கனும் ஆனா இவங்க நடக்க மாட்டாங்களாம்//
நடுவர் அவர்களே என்ன கேள்வி இது.. பெண்களாகிய நாம் பருவம் அடைந்து கல்யாணம் என்ற ஒரு புது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றோம்.. அவர்களுக்கு பொறந்த வீட்டிற்கு அடுத்தப்படி புகுந்த வீடு தான்.. அதனால் அதற்கேற்ற மாதிரி அந்த பெண் தன்னை தயார்படுத்துக் கொள்வாள்.. // ஃபெசல் டூசனுக்கு போயி ரெடி ஆயிருப்பாங்கன்னு சொல்லு...
//ஆனால் ஆண்கள் எப்படி அப்படி மாற முடியும்.. ஆண்களால் சீக்கிரம் மாற முடியாது.. அவர்கள் சுதந்திரம் பறி போனது போல் நினைப்பார்கள்.. மறுமகள் செய்வது போல் மாப்பிள்ளையும் புகுந்த வீட்டிற்கு சமையல் செய்வது துணி துவைப்பது பாத்திரம் துவைப்பதுன்னு செய்ய சொல்றாங்களா.. அது அது அந்த அந்த இடத்தில் இருந்தால் தான் அழகு..// ஆஹா, இது ஒன்னு தான் அவியள செய்ய சொல்லாம இருந்தீங்கோ, இனி இதுவுமா?பாவம் அம்மிணி..
//பழக்கமில்லாத்து பிடிக்காத்துன்னு தெரிஞ்ச பிறகும் எப்படிங்க எஞ்சாய் பண்ணுவாங்க.. நீங்க அப்படி செய்வீங்களா சொல்லுங்க.//நானு செய்யரனோ இல்லயோ எதிர் அணி உன்னய கண்டிஷன ஏதோனு செய்வாக..
//மணம் இருந்தால் மார்க்கமுண்டு... உண்மையான வார்த்தை.. மாப்பிள்ளை ஒரு நாள் இரண்டு நாள் மாமியார் வீட்டில் இருந்தால் அது அவருக்கும் மரியாதை கூட இருக்கும் பெண்ணிற்கும் மரியாதை அதுவே வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் ஒரு மாதம் மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிப்பாங்க.. முதலில் வாழையிலையில் சோறு போடுவாங்க.. அடுத்து தட்டில் போடுவாங்க அடுத்து கையில போடுவாங்க கடைசியில் தரையில் தான் அவங்களுக்கு சோறு.. இப்படி விருந்தும் மருந்தும் குறிப்பிட்ட நாட்கள் இருந்தால் தான் நல்லது..//விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்ரெ, ஆனா உங்க மாப்பிளைக, அதுக்கு போயி இருக்கரதுக்கே கஷ்டம்னு சொல்ராங்கன்னு தான் எதிர் அணி சொல்ராங்க.
//மருமகளுக்கும் மாமியார் வீட்டில் கஷ்டம் இருக்கின்றது நான் இல்லையென்று சொல்லவில்லை.. //நெம்ப நல்ல புள்ள சாமி நீயு, இப்பிடி தான் படார்னு உண்மய ஒத்துக்கோனும்.குட், குட்..
//நடுவர் அவர்களே எதிரணியினர் உங்களை நன்கு குழப்பி விடுறாங்க.. (எங்க அளவிற்கு இல்லைன்னு நினைக்கிறேன்) பார்த்து தீர்ப்பு வழங்குங்க.. என்று கூறு விடை பெறுகிறேன்..// எப்பிடியோ குழப்பரேன்னு ஒத்துக்கிடியே, அந்த மட்டும் சந்தோசம் அம்மிணி.....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்