காலிஃப்ளவர் லாலிபாப்

தேதி: February 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

1. காலிஃப்ளவர் - பெரிய பூ 1
2. கார்ன் மாவு - 1/2 கப்
3. மைதா - 1/2 கப்
4. அரிசி மாவு - 2 - 4 மேஜைக்கரண்டி [விருப்பத்துக்கு]
5. உப்பு
6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
7. சின்ன எலுமிச்சை - 1/2
8. மிளகாய் / சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி [ காரத்துக்கு]
9. எண்ணெய் - தேவைக்கு
10. மஞ்சள் தூள் - சிறிது
11. சோடா மாவு - சிறிது


 

காலிஃப்ளவரை நீண்ட காம்புகள் உள்ளவையாக பார்த்து எடுத்து நறுக்கி வைக்கவும்.
அவற்றை நீரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து பாதி பதம் வேக வைத்து எடுக்கவும்.
நீரில்லாமல் வடித்து வைக்கவும்.
மாவு வகைகள், தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு எல்லாம் ஒன்றாக சிறிது நீர் விட்டு பஜ்ஜி மாவு பத்தத்தில் கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காலிஃப்ளவரை மாவில் முக்கி எடுத்து பொரித்து எடுக்கவும்.
காம்பு பகுதியில் அலுமினியம் ஃபாயில் சுற்றி வைக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் லாலிபாப் தயார்.


எலுமிச்சை சாறு மாவில் கலந்தாலும் சரி, பின் பரிமாறும் போது வைத்தாலும் சரி. காலிஃப்ளவர் முழுவதும் வேகாமல் பார்த்து எடுக்கவும். இல்லை எனில் பொரிக்கும் போது எண்ணெய் குடிக்கும். விரும்பினால் கரம் மசாலா சிறிது சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனி அக்கா அட சிக்கன் தான் சில்வர் ட்ரெஸ் போட்டு பார்தேனு நின்னசா இங்க காலிஃப்ளவர் கூட சேம் ட்ட்ரெஸ் போட்டு மின்னுதே காலிஃப்ளவர் லாலிபாப்சூப்பர் ரெசிப்பி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஆமாம்... இம்முறை கோழி சிக்கல, அதான் சிக்கினவங்களை வெச்சு அலங்காரம் பண்ணிட்டேன். :) நன்றி கனி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலிஃபிளவர் சில்லி யூனிஃபார்ம் போட்டு ரொம்ப சூப்பரா இருக்குங்க :-)

நட்புடன்
குணா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலிஃப்ளவர் லாலிபாப் சூப்பர்

வனி, காலிப்ளவர் லாலிபாப் குணா சொன்ன மாதிரி ஒரே நீட்டா யூனிபார்ம் போட்ட ஸ்கூல் பசங்க மாதிரி அழகா இருக்கு வனி..குட் வொர்க் :) பார்ட்டிக்கேத்த ரெசிப்பி. குட்டீசுக்கு ஒரு நாள் செய்து தந்துடுவேன்.. அழகு குறிப்புக்கு தேங்க்ஸ் வனி.. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுதா, கல்பனா... மிக்க நன்றி. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Madam, Parkave nalla irruku testum nalla irrukum super.

sundaramurthy

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா