சாக்லெட் கப் கேக்

தேதி: February 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (7 votes)

 

மைதா - 75 கிராம்
சீனி - 160 கிராம்
பட்டர் - 125 கிராம்
டார்க் சாக்லெட் - 100 கிராம்
வென்னிலா சுகர் - ஒரு பாக்கெட்
முட்டை - 3


 

தேவையானவற்றை தயாராக வைக்கவும்.
கப் கேக் செய்ய இதேபோல் மோல்டும், பேப்பர் அச்சையும் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான கோப்பையில் சாக்லெட்டை உடைத்து போட்டு இரண்டு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவில் 2 நிமிடம் வைக்கவும்.
சாக்லெட் உருகியதும் அதில் பட்டரை போட்டு மீண்டும் ஒரு நிமிடம் வைக்கவும். மைக்ரோவேவ் இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதை அடுப்பில் வைத்து அதன் மேல் சாக்லெட் கோப்பையை வைத்து உருக்கவும். பட்டரையும் அதேபோல் உருக்கவும்.
பட்டரும், சாக்லெட்டும் உருகியதும் அதை கலக்கிவிட்டு, சீனியை போட்டு கலக்கவும்.
பின் ஒன்றன்பின் ஒன்றாக முட்டையை ஊற்றி கலக்கவும். அதனுடன் மைதா மற்றும் வென்னிலா சுகரையும் போட்டு கலக்கவும்.
மோல்டில் பேப்பர் அச்சை வைத்து அதில் முக்கால் பாகம் சாக்லெட் கலவையை ஊற்றவும். பேப்பர் அச்சு இல்லையென்றால் மோல்டுகளில் நேரடியாக ஊற்றி வைக்கலாம்.
இதை 180° முற்சூடு செய்த அவனில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
கேக் வெந்துவிட்டதா என்று ஒரு டூத் பிக் கொண்டு பார்த்து எடுக்கவும்.
சுவையான சாக்லெட் கப் கேக் தயார். இதனுடன் நட்ஸ்களும் சேர்த்துச் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை பார்ட்டிகளுக்கும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அழகா இருக்கு கேக் எல்லாம் முட்டை முட்டையா... :) யம்மி கேக்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரசியா அக்கா சாக்லெட் கப் கேக் டேஸ்டி அண்ட் சூப்பர் டிஷ் கடைசி படம் பார்க்கும் போதே சாப்டனும் நு தோனுது.

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சாக்லெட் கேக் பேக்கரியில் விற்பது போல் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்

முதல் ஆளா வந்து பதிவிட்டதற்கு நன்றி வனிதா.
சாப்பிட தானே செஞ்சேன் எடுத்துகுங்க கனிமொழி.
நன்றி வினோஜா.ஈஸியான குறிப்புதான்,பொருள்களும் வீட்டில் இருப்பவைதான்,செய்து பாருங்க.

Eat healthy

ரசியா ரொம்ப அருமையா இருக்குங்க கேக் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கேக் அருமை.. வாழ்த்துக்கள் ரசியா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஸ்வர்னா & அருட்செல்வி மேடம்ஸ் இருவருக்கும் நன்றி

Eat healthy

nice cake ... you made it very well ..all the best

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

thank you so much.

Eat healthy

ரசியா,
கப் கேக் அழகாவும் ஈசியாவும் இருக்கு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

வாழ்த்துக்கு நன்றி

Eat healthy