தேதி: June 25, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா</b> அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார்.
உருளைகிழங்கு - 450 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 3
பூண்டு - 4 பல்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
தேவையான பொருட்கள் அனைத்தையும் மேலே குறிப்பிட்டுள்ள அளவில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்குடன் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு அவித்தெடுத்து பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைக்கவும். பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை உருவி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பூண்டு மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் அதில் கடுகு, பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு வதக்கவும்.

வெந்தயம் நிறம் மாறியதும் அதனுடன் கறித்தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.

புளியுடன் 1 1/2 டம்ளர் சூடான தண்ணீரை ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். அதை வதக்கியவற்றுடன் ஊற்றி மீதம் இருக்கும் உப்பை போட்டு கிளறி விடவும்.

அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டுப் பிரட்டி விட்டு வேக விடவும்.

உருளைக்கிழங்குடன் சேர்ந்த மசாலா கலவை சுண்டி வற்றியதும் கரம் மசாலா தூள் போட்டு பிரட்டி கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு பிரட்டல் கறி தயார். இதனை சாதம், புட்டு, இடியாப்பம், பூரி, ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Comments
ஆதிரா உருளை
வாவ் அதிரா சூப்பர் உங்களுகெல்லாம் எப்படிப்பா கலரா போட்டோ எடுக்க முடியுது எனக்கு சுத்தம் அழக கலரா இருந்தாலும் போட்டோவில் அப்படி தெரிவது இல்லை..உங்க குறிப்பை இதுவர பண்ணியதே இல்லை..இதை ஒருநாள் பண்ணிடறென்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
செய்து பாருங்க மர்ழியா,
செய்து பாருங்க மர்ழியா,
இது சாப்பிடுபவர்கள் நல்லதென்றுதான் சொல்லியுள்ளார்கள். கிழங்கை பெரிதாக வெட்டவேண்டும் அப்போதான் கறி அழகாக இருக்கும்.
உங்கள் கமெராவை மாற்றுங்கள். சில நேரம் அதிலும் பிழை இருக்கலாம்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அருமையான டிஷ்
வாவ்
அருமையான டிஷ்
சூப்பர் அதிரா கலக்கிட்டே இருக்கீங்க
இறட்டையர் நலமா? உங்கள் தொண்டை எப்படி இருக்கு.
ஊர் போய் வருகிறேன், என்னை மறந்து விட்டாதீர்கள்.
ஜலீலா
Jaleelakamal
அதிரா
கேமரா காஸ்லியானது சோனி கம்பெனிதான் நாந்தான் போதிய வெளிச்சமில்லாமல்,ஏடா கூடமா எடுக்குறேன்னு நினைக்குறேன்..இவரிடம் வேற கேம்ரா வாங்கனும்னு சொன்னா அவ்லோதான் இபதான் மாற்ரினேன் 3,4 மாசம் முன்...
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
அதிரா
கேமரா காஸ்லியானது அதோட சோனி கம்பெனிதான் நாந்தான் போதிய வெளிச்சமில்லாமல்,ஏடா கூடமா எடுக்குறேன்னு நினைக்குறேன்..இவரிடம் வேற கேம்ரா வாங்கனும்னு சொன்னா அவ்லோதான் இபதான் மாற்ரினேன் 3,4 மாசம் முன்...
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஜலீலாக்கா, மர்ழியா
ஜலீலாக்கா, மர்ழியா
ஜலீலாக்கா எப்ப போறீங்க என்று சொல்றீங்களே இல்லை. சொல்லிடுங்க...... ஆமா சொல்லிப்புட்டேன்....
மர்ழியா, சொனி என்றால் நிட்சயம் கமெறாவில் தப்பில்லை தப்பு உங்களில்தான், சார்ஜ் பண்ணி பாவிக்கும் பற்றறி என்றால் ஓகே, மாற்றும் பற்றறி என்றால் கொஞ்சம் சார்ஜ் இறங்கினாலே இருட்டாகிவிடும்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா
அக்கா நாளைகழித்து கிளம்புறாங்கப்பா..நாங்க நேரில் மீட் பண்ண போறோம் சந்தோசமா இருக்கு..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஜலீலா
நாங்களும் சென்னையில்தான் இருக்கிறோம். மர்ழியா வீட்டிலே இருந்து கூப்பிடு தூரத்தில் தான் என் ஆபீஸ். ஞாபகம் வெச்சுக்கங்க.
அதிரா, பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு உங்க டிஷ். நானும் 'யாரும் சமைக்கலாம்'க்கு அனுப்பணும்ன்னு பார்க்கிறேன். நேரமே இல்லையேப்பா.
அன்புடன்
ஜெயந்தி மாமி
அதிரா கலக்குறீங்க
ஹாய் அதிரா எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலமா. உங்கள் உடம்பு இப்ப எப்படி இருக்கு வலி எல்லாம் குறைந்து இருக்கா. இந்த ரெசிபி நான் தேடிட்டு இருந்தேன் அதிரா ஒரு வருஷம் முன்னாடி இங்க ஒரு சிலோன் ப்ரெண்ட் வீட்டில் சாப்பிட போய் இருந்தப்ப இது செய்து இருந்தாங்க நல்ல ருசியாக இருந்தது. என் ஹஸ்ஸுகும் பிடித்து இருந்தது அப்ப இருந்தே நான் அவங்க இப்படி தான் செய்து இருப்பாங்கன்னு செய்தேன் ஆனால் அதே டேஸ்ட் கிடைக்கலை. இதை செய்து பார்த்து சொல்கிறேன். தேங்க்ஸ் அதிரா சூப்பர் குறிப்பு படதோட தந்ததுக்கு.
அன்புடன் கதீஜா.
ஹாய் ஜலீலா அக்கா
ஊருக்கு போற சந்தோஷத்துல நீங்க தான் எங்களைலாம் மறக்காமல் இருக்கனும். கோவம் வேண்டாம் சும்மாதான் சொன்னேன். உங்களுக்கு யாகூல மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்க.
ஹாய் மர்ழி நீங்க மீட் பண்ண போறீங்கள என்னை விட்டுட்டு சரி என்ஜாய். நீ மெசேஜ் அனுப்பி இருக்கும் போது இங்க உள்ள டைம் இரவு 2.30 நான் தூங்கிட்டு இருந்தேன் கலைல தான் பார்த்தேன்.
அன்புடன் கதீஜா.
மர்ழியா, ஜலிலாக்கா, ஜெயந்திமாமி, கதீஜா
மர்ழியா, ஜலிலாக்கா, ஜெயந்திமாமி, கதீஜா
அனைவரும் நலமா?
மர்ழியா, ஜலீலாக்கா வைச் சந்திக்கப்போறீங்களா? எனக்கும்தான் ஒரே பொறாண்மையாக இருக்கு... பறவாயில்லை, ஜெயந்திமாமியும் பக்கத்திலயா? கேட்கவே சந்தோஷமாக இருக்கு. ஜெயந்திமாமி... வேலைக்கும்போய் வீட்டையும் பார்த்து குறிப்புகளும் அனுப்புவதென்றால் சிரமம்தான்... லீவு கிடைக்கிறபோது முயற்சி பண்ணுங்க... பாபு அண்ணன் சொன்னதுபோல் அதிகமாக எல்லோரும் யாரும் சமைக்கலாம் குறிப்பைத்தான் பார்க்கிறார்கள். கூட்டாஞ்சோறு பார்ப்பது குறைவுதான்... கூட்டாஞ்சோறில் எவ்வளவு திறமான /அருமையான குறிப்புகள் இருந்தாலும் கண்ணுக்குத் தெரிவது குறைவு. நான்கூட யாரும் எதைப்பற்றியாவது கதைத்தால்தான் திறந்து பார்ப்பேன்.
கதீஜா? ஜப்பான் போய்விட்டீங்களென அறிந்து சந்தோஷப்பட்டேன், நீண்ட நாட்களின் பின் போனது எல்லாமே புதிதாகத் தெரியுமே.. மகன் நேசறிக்கு சேர்த்தாச்சா? அங்கு எப்போ பாடசாலை லீவு அன்ட் ஆரம்பம்? ஆமாம் இக் கறி இலங்கையில் அம்மா அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் செய்வா. செய்து பாருங்கள்.
அனைவருக்கும் நன்றி.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
ஜே மாமி,அதிரா,கதீஜா
அதிரா ஆமாம் கேம்ரா மேட்டரில் என் மேல்தான் மிஸ்டேக்..
ஹா ஹா மாமி 2,3 மாசத்துக்கு முன் எடுத்த சில குறிப்பு இருக்கு அதையே இன்னும் அனுப்பல பாருங்க என் சுறு சுறுப்பை..அதெப்படி நா கூப்பிடும் தூரத்தில் நீங்க இருக்கீங்கன்னு துபாய் அக்காட்ட சொல்லுறீங்க இங்கு இருக்கும் என்னை எட்டி பார்க தோனல இல்லை உங்களோட டூ
கதீ ஆமாப்பா துஆ செய்.நான் அப்ப்டிதான் யாருக்கு எப்ப எந்த டைம் என்றுலாம் பார்க மாட்டேன்..எனக்கு எப்ப டைம் கிடைக்குதோ அப்ப மெச்சேஜ் கொடுத்துடுவேன்..நீ எப்ப பிரீயோ அப்ப ரிப்லே தா நோ பராப்லம்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்ழியா
வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கற கோவிலுக்கு, பார்க், எதுக்கும் போக மாட்டோம். ஆனா தூர இருக்கற இடத்துக்கு போவோம். அது மாதிரிதான் இதுவும்.
அது சரி நம்ப அட்மின் கிட்ட சொல்லி சென்னையிலே ஒரு கெட் டு கெதர் வைக்கச் சொல்லலாமா. நம்ப எல்லாரும் சந்திச்சுக்க.
எங்க சந்திக்கறது மர்ழி, 3 வாரமா ஞாயிற்றுக் கிழமை கூட வீட்டில் இல்லை. போன ஞாயிறு மாமனார் திதி, முதல் நாளே மைத்துனர் வீட்டுக்குப்போயாச்சு, அதற்கு முந்தின ஞாயிறு எக்ஸாம் ட்யூட்டி. காலை 6 மணிக்குப்போய் இரவு 7 மணிக்கு வந்தேன். அதுக்கு முன் ஞாயிறு காலையில் ஒரு கிரகப்பிரவேசம். அங்கிருந்தே மாலையில் ஒரு நிச்சயதார்த்தம். இப்படி போகுது கதை. ஜலீலா சாக்கில் உங்களையும் சந்திக்கலாம்ன்னுதான் நினைச்சேன். பார்ப்போம். முடிந்தால் நீங்களே ஆர்கனைஸ் பண்ணுங்களேன். ப்ளீஸ்.
அன்புடன்
ஜெயந்தி மாமி
அதிரா
ஆமாம் அதிரா இப்பதான் கதீஜாக்கு பதிவு போட்டு இருக்கேன் பாருங்கள்..தள்காட்ட உங்க ஐடி இருக்கா?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
எம் பி திரி பிலேயர் ஜெ மாமி
என் கணவர் இதை வாங்கி தந்துட்டு போயிட்டார் வெளியே!செம கியூட்டா இருக்கு,தியேட்டர் எபெக்ட் எப்படி யூஸ் பண்ணன்னு அவ்வளவா தெரியல எல்லாமே குட்டி,குட்டியா இருக்கு சோ போட்டு அமுக்கி பார்த்துட்டு இருக்கேன் அப்பதானே அறிவாளியாக முடியும் அதான் ஹா ஹா நசமாகமல் இருந்தால் சரிதான்,அப்படி ஏதாச்சும் ஆனா கமுக்கமா மேசை மேல் வைத்துட வேண்டியதுதான்..ஜெ மாமி பாவம் ரொம்ப அலைச்சலா உடம்பை பார்த்துகங்க அக்கா இனி லைனில் வர மாட்டாங்க சோ இங்கு வந்ததும் போன் பேசுவாங்க அப்ப கேட்டு சொல்லுறேன்..ஆமா எப்படி உடனே சொல்ல அருசுவை இல் லைனில் அடிக்கடி இருப்பீங்கதானே!இல்லை வெளியே போஇடுவீங்களா?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
அதிரா அக்கா,
Athira akka, how is your health now? I hope you are perfectly alright.Take care.Nice recipe and i would like to try this soon.could you plz give the measuremnet of garlic and tamarind in grams.Thanks in advance.
one doubt
i have joined this site recently.i would like to know how long will it take to get a recipe posted? i have posted 2 recipes but not yet received any mail for tat. kindly help.
thanks
lavanya
ஹாய் Clement & லாவண்யா
clement,
பூண்டு - 30 கிராம், புளி - 60 கிராம் வரை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அரைத்துப்போடும் பூண்டுக்குத்தான் சரியான அளவு தேவை, நான் தட்டிப்போட்டுப் போடுவதால் கூடினாலும் பறவாயில்லை. சுவையாகத்தான் இருக்கும், உடலுக்கும் நல்லது.
லாவண்யா,
நீங்கள் முதலில் குறிப்பு எழுதி அறுசுவை அட்.... என்ற ஈ.மெயிலுக்கு அல்லது பாபு அட்... என்றதற்கு மெயில் பண்ணுங்கள். அப்போ அவர் அதைப் பார்த்துவிட்டு, உங்களை கூட்டாஞ்சோறில் இணைப்பார், இணைத்ததும் உங்கள் பகுதியில் "குறிப்பு சேர்க்க" என்று ஒரு புதுத் தலைப்பு வரும், அதில் நீங்கள் நேரடியாக எழுதினால் சப்மிற் பண்ணிய அடுத்த நிமிடமே வந்துவிடும். நீங்கள் எதைப்பற்றிக் கேட்ட்கிறீங்கள் எனத் தெரியவில்லை. படங்களுடன் அனுப்பினால், ஒழுங்கு முறைப்படி மாற்றும்போது உங்கள் குறிப்பும் இங்கே வரும். ஆனால் எதற்கும் ஒரு மெயில் அறுசுவைக்கு அல்லது பாபு அட் ..... என்ற மெயிலுக்கு மெயில் பண்ணுங்கள். சிலவேளை அவர் பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கிறபோது நிட்சயம் பதில் கிடைக்கும். நீங்கள் மெயில் பண்ணுங்கள்.
நான் இன்றுதான் இதைப் பார்த்தேன், அதனால்தான் பதில் தரப் பிந்திவிட்டது. மன்னிக்கவும்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
மிக்க நன்றி
ஹாய் அதிரா,
மிக்க நன்றி. நான் அறுசுவை அட்.... என்ற ஈ மைல் ஐடி க்கு அனுப்பினேன். ஆனால் இது வரை பதில் இல்லை. இன்னொரு ஈ மைல் ஐடி என்னது? மிக்க நன்றி.
lavanya.
லாவண்யா பொறுக்கவும்!
ஹாய் லாவண்யா நம்ம அட்மின் இப்ப ரொம்ப பிஸியா இருக்கார் கொஞ்சம் பொறுங்க பதில் வரும்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
அதிரா அக்கா,
Athira akka,
How are you?Your kids are looking so cute.I tried your urulaikilangu pirattal yesterday.It came out very tasty.I made as side dish for sambar.Thanks for your recipe.Please continue posting recipes.Once again thank you.
Clement!!
மிக்க நன்றி. கிழங்கு பிரட்டல் நன்றாக இருந்ததைக் கேட்க சந்தோசமாக இருக்கிறது. எனது தாமதமான பதிலுக்கு.... மன்னிக்கவும்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
ஹாய் அதிரா
ஹாய் அதிரா உங்களுடய உருன்ளகிழங்கு பிரட்டல் பார்தேன் கறிதூள் என்றால் என்ன?பதில் தர முடியுமா?
ஹாய் Ravoofa!!
ஹாய் உங்கள் பெயரைத் தமிழில் எழுத முடியவில்லை. கறித்தூள் என்றால்... மிளகாய், மல்லி, சீரகம்,மஞ்சள் அதனுடன் வாசனைப் பொருட்களும் கலந்து வறுத்தெடுத்த தூளைத்தான் கறித்தூள் என்போம். கடைகளில் றெடிமேற்றாகக் கிடைக்கிறது. இங்கே இலங்கைக் குறிப்பில் பாருங்கள் நர்மதா அந்தக் குறிப்பினை எழுதியுள்ளார்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
ஹாய் அதிரா
viji praveen
நான் இன்னிக்கு லஞ்ச்சுக்கு உங்க டிஷ் டிரை பன்னினேன். உருளைக்கிழங்கு கூட கத்திரிக்காயும் சேர்த்து மிக்சட் கறி பன்னினேன். ரொம்ப சூப்பரா வந்தது. டேஸ்டும் சூப்பர். குறிப்புக்கு நன்றி.
viji praveen
ஹாய் விஜி பிரவீன்.......
அப்படியா கறி நன்றாக வந்ததா... சந்தோஷம்... இங்கே கத்தரிக்காய் பொரிக்கறி என்றும் ஒரு குறிப்புக் கொடுத்திருக்கிறேன்... பாருங்கள் விரும்பினால் செய்யுங்கள்... அதுவும் நல்ல சுவையாக இருக்கும்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
super taste
Hi Adhira,
I tried this receipe. i never had this type of taste before. its nice.
Leela Nandakumar
Leela Nandakumar
லீலா!!!
லீலா!!!
மிக்க நன்றி, செய்துபார்த்ததோடு மட்டுமில்லாமல், அதை எனக்கு தெரியப்படுத்தியமைக்கும்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா
ஹாய் அதிரா.உங்க குறிப்பில் இருந்து இந்த உருளைக்கிழங்கு பிரட்டல் செய்துபார்த்தேன். ரெம்ப நன்றாக வந்திருந்தது.சுவையும் வித்தியாசமாக இருந்தது.நான்செய்யும் விதம் வேறு என்பதால் இது நன்றாக இருந்தது. படமும் எடுத்து அனுப்பிவிட்டேன். மிக்க நன்றி. அன்புடன் அம்முலு.
உருளைக்கிழங்கு பிரட்டல்
அதிரா உருளைக்கிழங்கு பிரட்டல் ரொம்ப சூப்பர் ஆக இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்
உருளைக்கிழங்கு பிரட்டல்
இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அம்முலு அவர்கள் தயாரித்த உருளைக்கிழங்கு பிரட்டலின் படம்
<img src="files/pictures/aa315.jpg" alt="picture" />
அதிரா,
அதிரா, உருளை பிரட்டல் மிகவும் நன்றாக இருந்தது. புளி சேர்ப்பது இன்னும் நன்றாக இருக்கு. நன்றி உங்களுக்கு.
மிக்க மிக்க நன்றிகள்....
அம்முலு செய்தமைக்கும் படமெடுத்துப் போட்டமைக்கும் மிக்க நன்றி. படம் நல்ல அழக்காக இருக்கு. நன்றாகச் செய்திருக்கிறீங்கள்.
அநாமிகா மிக்க நன்றி.
வின்னி மிக்க நன்றி.
எல்லோரும் செய்து பின்னூட்டமும் தருவது மிகவும் சந்தோஷமாக இருக்கு. அதிலும் எங்கள் "அட்மின்" ஆபீஷின் உடனடி படமிணைப்பை பார்க்க என் கண்களையே நம்பமுடியவில்லை. ரொம்ப ஸ்பீட். மிக்க மிக்க நன்றி.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா
அதிரா சாதத்துக்கு தொட்டுகொள்ள செய்தேன்,நன்றாக இருந்தது அடுத்த முறை சப்பாத்திக்கு செய்ய வேண்டும்,மிக்க நன்றி அதிரா
அன்புடன்
ரேணுகா
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
அதிரா & ப்ரியா
ஹாய் அதிரா,
சிறப்பு சமையில் பின்னூட்டம் கொடுக்காமல் விட்டிருந்த உங்கள் குறிப்புகளில் இறுதியானது இது. :)
மிக நன்றாக இருந்தது. சுவை பிடித்திருந்தது.
எனக்கு அறுசுவை பயங்கர 'ஸ்ட்ரைக்' கன பேருக்குப் பதில் போட வேணும். அதிராவுக்கு 'சுருக்க விடை தருக,' மாதிரிப் பதில் போட்டால் பிடிக்காதே என்று யோசிக்கிறேன். :)
படம் நன்றாக இருக்கிறது ப்ரியா.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
ரேணுகா, இமா...
ரேணுகா கறி நன்றாகவந்ததெனக் கேட்டு சந்தோஷம் ... மிக்க நன்றி.
இமா... பார்த்தீங்களே ஒருவரிப்பதில் போடாமல், உங்களைத்திருத்திவிட்டேன்:).. இன்னும் சிலபேரைத் திருத்த இருக்கு:)... நல்ல மாட்டுக்கு ஒரு சூடெல்லோ....
மிக்க நன்றி இமா.. சமைத்து பின்னூட்டமும் நிறைய வரிப்பதிலாகத் தந்தமைக்கு.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்