முள்ளங்கி கீரை துவையல்

தேதி: January 12, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

முள்ளங்கி கீரை - ஒரு கைப்பிடி
உளுந்து - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5
தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப)
சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உளுந்து, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, கீரை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தேங்காய் சேர்த்து ஆற விடவும்.
ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
சுவையான முள்ளங்கி கீரை துவையல் தயார்.

வாய்ப்புண், வயிற்று வலி, சிறுநீரக நோய்களுக்கு முள்ளங்கி கீரை சிறந்தது. பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய கீரை இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி முள்ளங்கி கீரையில துவையல் இப்பதான் கேள்வி படறேன் இனிமே செய்துடுவோம் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவிதா,துவையல் வித்யாசமான குறிப்பு,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவிதா அக்கா துவையல் ஈஸியான டேஸ்டியான குறிப்பு அக்கா குயிக் செய்முறை முள்ளங்கி கீரை கிடச்சா கட்டாயமா சென்சுடுவேன் அக்கா நல்ல குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கட்டாயம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டியா ஆரோக்கிய குறிப்பு கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் கவி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஒரு முள்ளங்கி கீரையோடு ரெண்டுநாளா இருக்கு..கூட்டா?பொரியலான்னு யோசிச்சேன்..இது பார்த்தவுடன் ட்ரை பண்ணலாமின்னு நினைக்கிறேன்.
எனக்கு தோட்டத்தில் இந்த கீரைதான் நிறைய இருக்கு...இனிமே உங்க துவையல் அடிக்கடி என் கிச்சனில் இருக்கும் :)

நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா