நெல்லிக்காய் ஊறுகாய்

தேதி: March 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

நெல்லிக்காய் - 15
மிளகாய் வற்றல் - 10 - 12 (காரத்திற்கேற்ப)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 8 - 10 பல்
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவையான அளவு

மிளகாய் வற்றலை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்து பொடிக்கவும். (வாணலியில் வறுக்காமல் மிளகாய் வற்றலை வெயிலில் காயவைத்தும் பொடிக்கலாம்).
நெல்லிக்காயை 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
வேக வைத்த நெல்லிக்காயில் விதையை நீக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டை நசுக்கி சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.
பின் நெல்லிக்காய், மிளகாய் பொடி, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்றாக வதங்கி பச்சை வாசனை போனதும் இறக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ்... சூப்பர் :) ஸ்ஸ்ஸ்ஸ்..... யம் யம்... எனக்கு பார்சல் ப்ளீஸ் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி அக்கா ஊறுகாய் பார்க்கு போதே சோ குட் மவுத் வாடரிங் ஆ இருக்கு அக்கா சூப்பர் :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நெல்லிக்காய் ஊறுகாய் பார்க்கும் போதே எச்சில் ஊறுது,சூப்பரு கவி... நான் ஊர வெச்சு செய்வேன்.. உங்களுது இன்னும் ஈசியா இருக்கு கவி. அடுத்த முறை இப்படி ட்ரை பண்ரேன். வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

புகைப்படங்களை அழகாக தொகுத்து வெளியிட்ட டீமுக்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

super urugai. sema tips. akka nan mango urugai seiyum pothu inji athigamaga serthu viten. enna seivathu? enaku help pannunga friends

நன்றி வனி! பார்சல் வந்துட்டே இருக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி! சீக்கிரமா செய்து சாப்பிடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

super urugai. sema tips. akka nan mango urugai seiyum pothu inji athigamaga serthu viten. enna seivathu? enaku help pannunga friends

நன்றி சுமி! அம்மா ஊற வச்சு செய்வாங்க. ஆனால் ஊறும் வரை காத்திருக்கணுமே :). உடனே வேணும்னு செய்யும் போது அம்மா இப்படி செய்வாங்க. ஊறவச்சுன்னு சொன்னதும் நெல்லிக்காய் உப்பிலிட்டது ஞாபகம் வந்திடுச்சு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சோனியா! நான் இஞ்சி சேர்த்து மாங்காய் ஊறுகாய் செய்தது இல்லியே! தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க. வெய்ட் பண்ணுங்க பா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தட் ..தட் ..தட் ..வேற எதும் இல்ல. கண்ணு பார்த்ததும் நாக்கு தானா சத்தம் போடுது. யம்மி..யம்மி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

கவி..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...படம் அருமை..
நெல்லி காய் குண்டு குண்டா அழகா இருக்கு கவி ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவி நா ஊறுது போங்க :) சூப்பர் ஆசையை கிளப்பிட்டீங்க அடுத்த வாரம் செய்துடவேண்டியதுதான் :) வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஊறுகாய் ஸ்ஸ்ஸ் சூப்பர்..இப்பவே செய்ய போறேன்.நான் தண்ணீர்ல வேகவச்சு செய்வேன்..இந்த முறை இது மாதிரி செய்றேன்.ஆசைய கிளப்பினதுக்கு வாழ்த்துக்கள் :)

Kalai

நன்றி ஜெயந்தி! ஊறுகாயை நினைச்சாலே நாவில் எச்சில் ஊறும் மக்களாச்சே நாம எல்லாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரம்ஸ்! எல்லாருக்கும் ஊறுகாயை பார்த்ததும் எல்லாருக்கும் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுவா! சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கலா! நீங்களும் இது போல செய்வீங்களா. தண்ணீரில் வேக வைக்கும் போது சத்துக்கள் வீணாகிடுமே. அதான் ஆவியில் வேக வைக்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செய்தாச்சு கவி..டேஸ்ட் இன்னும் நிறைய சாப்பிட சொல்லுது.வேக வைச்ச தண்ணில ரசம் வெச்சிடுவேன்.இதுவும் அறுசுவைல உள்ளதுதான்.

Kalai

கவி நெல்லிக்காய் ஊறுகாய் அருமை :)
நெல்லிக்காய் இருக்கு முயற்சிக்கிறேன்:)
வாழ்த்துக்கள் கவி :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி,
சுவையான ஊறுகாய்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

செய்தாச்சா கலா! சந்தோஷம் பா. நிறைய சாப்பிடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கண்டிப்பா செய்து பாருங்க அருள். நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

hi kavi Akka urukai super ha iruthathu today seithen.romba romba thank you akka