கவிதை தொகுப்பு - 13

உளியின் ஓசை!

வலி தாங்கிய
கற்களெல்லாம்
சிலையாவதில்லை!
சிலையான
தெய்வங்களெல்லாம்
போற்றப்படுவதுமில்லை!
தத்துவம் பேசுது உளி!

- ஜெயந்தி

சுமை

பீலிச் சுமையெனினும்
மிகையென்றால்
முறியுமாமே அச்சு!
காக்கப்படாத
சத்தியங்களைச் சுமந்து
இன்று காற்றுக்கும்
மூச்சிறைப்பு!

- ஜெயந்தி

ஞானி

இறந்த காலமும்
எதிர்காலம் ஆனது..
நாளைக்கு போய்ட்டு வந்தேன்
எனும் உன்
மழலை மொழியில்...

- ரேவதி

ஒரு கர்ப்பிணியின் கவிதை

உன்னை
கருவறையில் சுமந்து
கவிதை எழுதுகையில்...
உன் முதல் கவிதையை
நீயும் கொடுக்கிறாய்...
சின்னதாய் உதைத்து..

- சங்கீதா செந்தில்

முதுமை

சாதமும், சாம்பாரும்
சாப்பிட்ட நாவிற்கு
சர்க்கரை வந்த பின்,
சப்பாத்திக்கு இணங்க மறுக்கிறது...

கோயில் சென்ற
என் கால்கள்,
இன்று கோலூன்றி
நடக்கவே திண்டாடுகின்றன...

கரும்பைக் கடித்த பற்கள்
காணாமல் போய்விட்டன...

பெற்ற பிள்ளையோ
பத்து, ஆனால் அவர்கள்
கண்ணுக்கு தெரிவதோ
என் சொத்து...

அதிகாரமாய் தெரிந்த
என் கோபம் இன்று
அவர்களுக்கு
அதிகபிரசிங்கி ஆனது...

அத்தனை துக்கத்திலும்
நடுங்காத என் நெஞ்சம்,
இன்று தூக்கத்திலும்
நடுக்கம் கண்டுவிட்டது...

அறுபது பேருக்கு அன்னமிட்ட
என் கைகள் அடுத்த வேளை
சாப்பாட்டுக்கு
திண்டாடித்திரிகிறது ...

கை கால் வலிக்குள்
கட்டுண்டு, காலனைத் தேடி
அலைகிறது...
தனிமை இன்னும் வலிக்குது...
முதுமை பாடாய் படுத்துது...

- சங்கீதா செந்தில்

என்னாலும் முடியும்...

சில சமயம்
நினைப்பதுண்டு...
பிறந்தது ஏன் என்று?
வாழ்வது வீண் என்று...

சில சமயம்
நினைப்பதுண்டு...
இதை முடித்தது
நானா என்று...

சில சமயம்
நினைப்பதுண்டு...
இருப்பது எதற்காக என்று?
துடிப்பது எதனால் என்று...

சில சமயம்
நினைப்பதுண்டு...
உன்னால் முடியுமென்று...
உண்மையில், நான்
அறிவுபெட்டகமுமில்லை...
அழுகிய முட்டையுமில்லை...

அறிவைத் தேடிய
என் பயணத்தில்
அனுபவமே படிக்கட்டுகள்....

வாழ்க்கைப் பாதையே
என் வழித்தடங்கள் ....

- சங்கீதா செந்தில்

Comments

ஞானி கவிதை மிகவும் அருமை. என் பையனும் இப்படித்தான் சொல்லுவான். மழலை மொழி மிகவும் அருமை தான்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

உளியின் ஓசை கவிதை மிகவும் அருமை.
உளியின் வலியைத் தாங்கும் கல் மட்டுமே சிலையாகும் என்பார். ஆனால்
உளிக்கு மட்டுமே தெரியும் எல்லா கல்லும் சிலையாவதல்ல என்று.
உங்கள் கவிதை மிகவும் அருமை.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மழலை மொழியின் இனிமையை சிறப்பை சிறு கவிதைக்குள் அடக்கி விட்டீர்கள். அருமை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உளியின் தத்துவம் வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்கிறது.

//காக்கப்படாத
சத்தியங்களைச் சுமந்து
இன்று காற்றுக்கும்
மூச்சிறைப்பு!//

சூப்பர் ஜெயந்தி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சங்கீதா முதுமையில் தனிமையின் கொடுமையையும் இயலாமைகளையும் எண்ணங்களையும் அழகாக சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயந்தி, ரேவ்ஸ்.... புதுசா அறுசுவை கவிதை பகுதிக்குள் நுழைந்திருக்கீங்க... மனம் மகிழ்ச்சியில் ஆடுதுடோய் ;) மிக்க மகிழ்ச்சி. தொடருங்க. வாழ்த்துக்கள் பல.

சங்கீதா... வழக்கம் போல வரிகள் அழகு. :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

'ஞானி' கவிதை ரொம்ப அருமைங்க அக்காங், நிறைய எழுதிட வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

ஜெயந்தி மேடம், உங்கள் கவிதைகள் அருமைங்க, முதல் முயற்சிக்கும் பல கவிதைகள் படைத்திட வாழ்த்துக்கள்ங்க,

சங்கீதா மேடம்,
உங்கள் கவிதைகள் அனைத்தும் ரொம்ப ரொம்ப அருமைங்க, வாழ்த்துக்கள்ங்க..

நட்புடன்
குணா

ஜெயந்தி, ரேவ்,சங்கீதா.. உங்கள் கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.. முயற்சிகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

எனது எழுத்தையும் கவிதையாய் ஏற்று வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும் மற்றும் அறுசுவை குழுவினர்க்கும் நன்றி..

Be simple be sample

அட இந்த தலைப்பே வச்சாச்சா.அருமையான வரிகள்பா..

சங்கிதா ஆழ்ந்த வரிகள் பா..அருமை

தாமரை செல்வி முதல் வாழ்த்துக்கு மிக மிக நன்றிப்பா..

தம்பிங் எங்கும் வந்து பதிவிட்டு உற்சாக படுத்தும் தம்பிங் க்கு நன்றிகள் பல..

வனி உற்சாகம்னா அது வனிதான்.அதை எல்லோருக்கும் அள்ளி அள்ளி கொடுக்கிற தோழி வனிக்கு ஸ்பெஷ்ல் தான்க்ஸ்..

தான்க்ஸ் கவி.என் குட்டி பையன் பேசும் போது தோனினதுபா.. ரொம்ப தான்க்ஸ்பா

மை டியர் சுமி ரொம்ப ரொம்ப தான்க்ஸ்டா...

Be simple be sample

எனது கவிதையை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி ..
கவிதை அனைத்தும் அருமை ...
கவிதையை பாராட்டி கருத்துக்களை போகிஒர்ந்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

அறுசுவை அட்மின் அண்ணே நீங்க ரொம்ப நல்லவிங்க.

கூகிளில் சர்ச் பண்ணிட்டு அப்புறமா போடுவாங்கன்னு வனி சொன்னாங்க. கொஞ்சம் லேட் ஆனதும் , நம்ம நிலைமை தருமி கணக்கா "இது என் கவிதைதான் என் கவிதையேதான்னு" கூவும்படி ஆயிட்டுதேன்னு மனசுலே புலம்பினேன். இப்போதான் வெட்கம் வெட்கமா வருது. முதல் படைப்பு வந்தது பார்த்து . ரொம்ப நன்றிங்க.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அருசுவையில் கவிதை அனுப்புறது எப்படி?

nanum oralavuku kavithai eluthuven epadi veli iduvathu please yaravathu sollunka pa

உங்கள் கவிதையை arusuvai admin @ gmail. com (இமெயில் ஐடியில் நான் விட்டிருக்கும் ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியாக டைப் செய்யவும்) என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஊக்கப்படுத்திய தோழிகள் தாமரை, கவி, வனி, சுமி மற்றும் குணா தம்பி அனைவருக்கும் என் மனமகிழ்ந்த நன்றி ! வீட்டில் அனைவருக்கும் உடல் நல்க்குறைவு. தாமதமான நன்றியும் சுவைக்காது. மன்னிக்கவும்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஜெயந்தி உளியின் ஓசை அருமை :)
மயிலிறகை அழகா சொல்லி கலக்கிட்டீங்க :)
முதல் கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

ரேவ் குழந்தையோட மழலை மொழிய அழகான கவிதையா வெளிப்படுத்திட்டீங்க
வாழ்த்துக்கள் :) மேன்மேலும் கவிதை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ரேவ் :)

சங்கீதா முதுமை கவிதை ஆழமா பதிஞ்சிருச்சு :)
உங்களின் அனைத்து கவிதையும் அருமை :)

மேன்மேலும் கவிதை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Sangeetha senthil ennalum mudiyum kavithai super

nice