மாங்காய் பச்சடி

தேதி: May 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

 

மாங்காய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 4
வெல்லம் - ஒரு பெரிய கட்டி
வெங்காயம் - ஒன்று (சிறியதாக)
மஞ்சள் தூள்
உப்பு
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க


 

தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
காய்ந்த மிளகாய் சிவந்ததும் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தோல் நீக்கி பெரியதாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
பின் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
தண்ணீர் வற்றி மாங்காய் வெந்து, நன்கு குழைந்து வரும் போது, வெல்லத்தை பொடித்துச் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்து, சேர்ந்தாற்போல் வரும் போது இறக்கவும்.
இனிப்பு, புளிப்பு, காரச் சுவையுடன் நாவில் நீர் ஊற வைக்கும் மாங்காய் பச்சடி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... :) செய்துருவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிம்பிள் அண்ட் டேஸ்டி ரெசிபி.. சூப்பர்

"எல்லாம் நன்மைக்கே"

அடடா பார்க்கவே சாப்பிடணும் போல உள்ளது .

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும்&அறுசுவை குழுவினர்க்கும் நன்றி..

Be simple be sample

முதல் வாழ்த்த்க்கு தான்க்ஸ் வனி

Be simple be sample

ஆமா பாக்யா.தான்க்யு செல்லம்

Be simple be sample

சீக்கிரம் எடுத்துக்கோங்க வனி தான்க்ஸ்பா

Be simple be sample

மாங்காய் பச்சடி சூப்பர் ரேவதி!!!எங்க செட்டிநாட்டு பக்கம் இந்த பச்சடி ரொம்ப பேமஸ் ..எங்க வீட்டுல அடிக்கடி செய்வேன் ரேவதி..இன்னும் நிறைய குறிப்புகள் போட்டு அசத்து...ஆல் தி பெஸ்ட் ரேவதி

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மாங்காய் பச்சடி பார்க்கவே நாவூறுது, நிறைய குறிப்புகள் கொடுங்க வாழ்த்துக்கள்

நீங்களும் இப்படித்தான் செய்விங்களா கவி..அப் ப சீக்கிரம் செய்ங்க..தான்க்ஸ் கவி

Devi நல்லாருக்காபா..தான்க்ஸ்ப்பா உங்க வாழ்த்துக்கு..

Be simple be sample