ஜிலேபியா

தேதி: May 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (13 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
பட்டை - ஒரு துண்டு
ஏலக்காய் - 2
ரோஸ் வாட்டர் - சிறிது
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
ஃபுட் கலர் - சில துளிகள்
சர்க்கரை - 2 கப்
எண்ணெய் - பொரிக்க


 

மைதா மாவுடன் ஃபுட் கலர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து தேவையான நீர் விட்டு (கெட்டியாகவோ, அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) கலந்து 4 மணி நேரம் வைக்கவும். புளித்த பின் மாவின் பதத்தை சரிபார்க்கவும். பிழிந்து விடும் பதத்தில் இருக்கவேண்டும்.
மாவு புளித்த பின் ஒரு கெட்சப் பாட்டிலில் ஊற்றியோ அல்லது ஒரு ஜிப் லாக் பேக்கில் ஊற்றியோ தயாராக வைக்கவும். சுகர் சிரப் செய்ய ஒரு கப் நீர் விட்டு சர்க்கரை சேர்த்து ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வந்ததும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் ஜிலேபியாக பிழியவும். முக்கியமாக எண்ணெயின் சூடு, சிறிது மாவை விட்டதும் மேல் எழும்பி வரும் பதத்தில் இருக்கவேண்டும். அதிக சூடாக இருந்தாலோ, சூடு குறைவாக இருந்தாலோ ஜிலேபி ஜிலேபியாக வராது.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட்டு சூடான சிரப்பில் போடவும்.
சிரப்பில் 5 நிமிடம் ஊறினால் போதும். மாலத்தீவு முறையில் செய்த ஜிலேபியா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

5ஸ்டார். விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நல்லா செய்து இருக்கீங்க.செய்து பார்கீறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பு மிக அருமை வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜிலேபியா குறிப்பு அருமை விஜி,

Eat healthy

ஜிலேபியா சூப்பர்....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாவ்... ஜிலேபியா சூப்ப்பரா இருக்கு விஜி! படங்கள் அத்தனையும் பளிச் பளிச்சுனு அழகு! முன்ன எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியலையே! ;-)வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ