பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

பெற்றோரிடம் நம் பிரச்சனைகளை சொல்லக்கூடாது. நாம பக்குவப்பட்டவங்க என்று தானே திருமணம் செய்து வைக்கிறாங்க எல்லாப்பிரச்சனைகளையும் கணவன் மனைவியே பேசித்தீர்க்க வேண்டும். நல்ல முடிவுகளை எடுக்கிற திறமை நமக்கு வரவேண்டும். எங்கட பிள்ளை குட்டிக்கு நாங்க அந்தத் திறமைகளை சொல்லிக்குடுக்க வேணும். நாளைக்கு அதுகளுக்கு பிரச்சனை வந்தால் எல்லாவறையும் சமாளித்து ஜெயிக்கவேணும். நாங்களே சின்னப்பிள்ளை மாதிரி எப்பவும் பெற்றோரை சார்ந்திருந்தால் நாளைக்கு நாங்கள் இல்லாத காலத்தில் எங்கட பிள்ளைகள் பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறக்கூடாது. எங்களுக்கு திருமணம் ஆகி ஆறுமாதத்தால் என் தங்கைக்கு ஆகியது. அவள் தங்களுக்குள் நடக்கும் ஒவ்வொரு சின்ன பிரச்சனைகளயும் அம்மாவிடம் சொல்லுவாள். நான் பெரிசா நடந்தாக்கூட சொல்லமாட்டன். அப்ப அம்மா சொல்லுவா அவள் எல்லாம் சொல்லுறாள் நீ தான் ஒன்றும் சொல்லுறேல்லை அப்ப தான் நாங்க ஏதாவது ஆலோசனை சொல்லுவோம் என்று. நான் சொல்லுவன் அது அவளின்ர இஸ்ரம் சொல்லுறது. இது என்ர விருப்பம். நாங்களே எல்லாவறையும் பார்த்துப்போம் என்று. பெற்றோரிடம் மரியாதை இருக்க வேணும் அவர்களை மதிக்க வேணும். ஆனால் பிள்ளைகளின் திருமணத்தின் பின் பெற்றோர் சகோதரர்கள் உறவினர் அந்த அந்த உறவுக்குள்ளேயே இருக்கணும். ஏனென்றால் கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனைகளை பெற்றோர் தீர்த்துவைத்து நாளைக்கு சமாதானமாகி சேர்ந்த பிறகு என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் வந்த பிரச்சனையை இவள் அவளின்ர அம்மா அப்பாவிடம் சொல்லிட்டாள். இல்லை அவர் தன் பெற்றோரிடம் சொல்லிட்டாரே என்று மனஸ்தாபம் கோபம் குரோதம் என்று பிரச்சனை திரும்ப வர வாய்ப்பிருக்கு. பெற்றோரின் தலையீடு இல்லாமல் நாங்களே சமாளித்தால் பிரச்சனை திரும்பாது. ஆயுசுக்கும் கணவன் மனைவி சந்தோசமாக வாழலாம்.

அன்புடன்
சியாமளா

இப்படி எதிரணி சொல்றாபுல பிரச்சினையை தானே இந்த தம்பதிகள் தீர்த்துகிட்டு நல்லா இருந்தா தான் பரவாயில்லையே . நாட்டுல குடும்ப பிரச்சினை தாங்க பேப்பர்லயும் மீடியாவுளையும் இன்னும் டாப்பா இருக்கு .

பெற்றோர் டிக்டேட் செய்வாங்க ன்னு சொல்ற எதிரணியினர் , முதல்ல அவங்க சொல்றதும் சஜஷன் தான் நு எடுத்துக்கணும் . அதா விட்டு போட்டு லைவ் அப்டேட்ஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்க ப்படாது .

தம்பதிகளுக்குள் என்ன விஷயங்களில் பிரச்சினை வரும் சொல்லுங்க ?? இருங்க நானே எனக்கு தெரிந்தவரை ????:-(((சொல்லிடறேன் .....

* வீட்டு செலவுகளில் கருத்து வேறுபாடு ,
* வீட்டு விசேஷங்களில் யாருக்கு முன்னுரிமை தருவது
* மனைவி வேலைக்கு போவதா வேண்டாமா ?
* குழந்தை வளர்ப்பில பிரச்சினைகள்
*மாமியார் மருமகள் தகராறு
* தனி குடித்தனம் என்று முடிவெடுப்பது
*வீடு வாங்குவதில் முடிவு
இதெல்லாம் ரெண்டு பெரும் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் தாங்க . ஆனா முக்காவாசி நேரம் கணவன் கை தாங்க ஓங்கி இருக்கும் . அப்போ மனசுல கோபம் வருத்தம் அழுகையோட மனைவிகள் தாங்க படாத பாடு படுவாங்க.

சில(பல ) சமயம் கணவர் எடுக்கும் முடிவுகள் தவறானது என்று தெரிந்தும் கூட அவரின் டாமினன்சால் வேறு வழியில்லாமல் மனைவி மார்கள் ஒத்து போவாங்க . பிற்பாடு அது தவறாகும் பொது ஒரு கோபம் வரும் பாருங்க. அப்பா ஹேண்டில் பண்ண முடியாது போகும் கண்டிப்பா பெற்றோரிடம் சொன்னால் மட்டு படுத்துவாங்க.

நிறைய கணவர்களின் அசட்டு தனத்தை மீறி அவர்களோடு இன்றும் வாழ்க்கை நடத்தி வரும் பெண்கள் அவர்களின் பெற்றோரால் சரியாக வழி நடத்தப்ட்டதினாலேயே தாங்க. கோபத்தை எத்தி விட மாட்டங்க பெற்றோர்கள் . மட்டுபடுத்துவாங்க . ஒரு வேலை சில பிரச்சினைகளுக்கு தாங்களாகவே தவறான முடிவு எடுத்திருந்தாலும் கூட ( அநியாய லோன் ,) " ஏம்மா எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா ?" என்பாங்க .

மேல கூரிஎதேல்லாம் சாதாரண நாரமலா எல்லா குடுமத்திலும் நடக்க . கூடியவை இதை தவிர,
கணவருக்கு கள்ள காதல்
கெட்ட சகவாசம்
வருமானம் என்ன வென்றே சொல்லாமல் தாம் தூம் ஏறனு செலவு செய்வது
அடி உதை , வன்முறை , சந்தேகம்

இதெல்லாம் பிரச்சினையா இல்லையா சொல்லுங்க. இதெல்லாம் பெரும்பாண்மையா பெண்களுக்கு இக்காலத்தில் நடக்கின்றன.

இப்போது சில பெண்களும் திருமணத்திற்கு பிறகும் முந்தைய காதலை விட முடியாமல் இருக்கிறார்கள் இதனால் ஆண்களும் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிரார்கள் .
இது ஐவும் பேசி தீர்க்கும் விஷயமாக எனக்கு படவில்லை நடுவரே.

நம்ம ?? ( உங்களையும் சேத்துகிட்டேன் மன்னிக்க ) காலத்துளையாவது திருமணத்திற்கு முன்பு பேசிக்க மாட்டங்க அவ்வளவா !! இப்போ எல்லாம் திருமணத்திற்கு முன்பு மனசு விட்டு பெசோ பேசுன்னு பேசறாங்க . ஆனா பாருங்க இப்போ பள்ளிகளில் சிங்கிள் பெரண்ட் ஜாச்த்தியாகிவிட்டங்க .

தம்பதிகள் தம்பதிகலாகவே தொடர்வதற்கு ரெண்டு தண்டவாளம் ஆ இருந்தா கூட அப்பப்போ மேயிண்டேநேன்ஸ் பண்ணினா தான் வாழ்க்கை வண்டி சீரா ஓடுமுங்க அதுக்கு பெற்றோர்கள் அவசியமுங்க .

மீதியை அடுத்தாப்புல சொல்லிடறேன் .

எதிரணி தோழி சொன்ன கருத்தை நானும் நூறு வீதம் ஒத்துக் கொள்கின்றேன். பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பல நல்ல பெற்றோரும் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் சில பெற்றோர்களே காரணம் பிரசிசனைகளை ஊதிப் பெரிசாக்கி விவாகரத்து வரைக்கும் போறதுக்கு. சமைக்கணும் பிறகு வாறேன்

அன்புடன்
சியாமளா

//கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? //

முதல்ல ஒரு சின்ன சந்தேகம் .... இருக்கிற பிரச்சனைய அதிகப்படுத்தவா..? இல்லை குறைக்கவா..? :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

//பெற்றோர் தீர்த்துவைத்து நாளைக்கு சமாதானமாகி சேர்ந்த பிறகு என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் வந்த பிரச்சனையை இவள் அவளின்ர அம்மா அப்பாவிடம் சொல்லிட்டாள். இல்லை அவர் தன் பெற்றோரிடம் சொல்லிட்டாரே என்று மனஸ்தாபம் கோபம் குரோதம் என்று பிரச்சனை திரும்ப வர வாய்ப்பிருக்கு. பெற்றோரின் தலையீடு இல்லாமல் நாங்களே சமாளித்தால் பிரச்சனை திரும்பாது. ஆயுசுக்கும் கணவன் மனைவி சந்தோசமாக வாழலாம். //

பெற்றோரிடம் சொல்லி பிரச்சினைகளை சரி செய்தால் ஆயுசுக்கும் அது கணவன் மனைவிக்கு இடையே உறுத்தலா இருக்கும்னு சொல்றாங்க. தலைவலி குணமாகி திருகுவலி தேவையான்னு கேட்கறாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//சில(பல ) சமயம் கணவர் எடுக்கும் முடிவுகள் தவறானது என்று தெரிந்தும் கூட அவரின் டாமினன்சால் வேறு வழியில்லாமல் மனைவி மார்கள் ஒத்து போவாங்க . பிற்பாடு அது தவறாகும் பொது ஒரு கோபம் வரும் பாருங்க. அப்பா ஹேண்டில் பண்ண முடியாது போகும் கண்டிப்பா பெற்றோரிடம் சொன்னால் மட்டு படுத்துவாங்க.//

ஒருவர் மட்டுமே எப்போதும் விட்டுக்கொடுத்து கொடுத்து ஒரு கட்டத்தில் அது பெரும் கோபமாக வெடிக்கும் போது அதை தணிக்க பெற்றோரால்தான் முடியும்னு சொல்றாங்க உஷா. இந்திய குடும்ப சூழல்களில் யோசிச்சா சரியா இருக்கற மாதிரி இருக்கு. பார்ப்போம் எதிரணி என்ன சொல்றாங்கன்னு.
//கணவருக்கு கள்ள காதல்
கெட்ட சகவாசம்
வருமானம் என்ன வென்றே சொல்லாமல் தாம் தூம் ஏறனு செலவு செய்வது
அடி உதை , வன்முறை , சந்தேகம்

இதெல்லாம் பிரச்சினையா இல்லையா சொல்லுங்க. இதெல்லாம் பெரும்பாண்மையா பெண்களுக்கு இக்காலத்தில் நடக்கின்றன.//

இந்த பிரச்சினை எல்லாம் ரெண்டுபேர் மட்டும் பேசி தீர்க்கக்கூடிய பிரச்சினையான்னு கேட்கறாங்க. ம்ம்ம்ம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

//தம்பதிகள் தம்பதிகலாகவே தொடர்வதற்கு ரெண்டு தண்டவாளம் ஆ இருந்தா கூட அப்பப்போ மேயிண்டேநேன்ஸ் பண்ணினா தான் வாழ்க்கை வண்டி சீரா ஓடுமுங்க அதுக்கு பெற்றோர்கள் அவசியமுங்க//

தண்டவாளங்களில் வரும் விரிசல்களை தண்டவாளங்களால் தானே சரியாக்க முடியாது பெற்றோர் என்ற மேற்பார்வையாளர் வேணும்னு சொல்றாங்க. எப்டீல்லாம் உதாரனம் யோசிக்கறாங்கப்பா... நீ காலி... நான் என்னைச் சொன்னேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ஜெய்லானி! இங்கேயும் உங்களுக்கு சந்தேகமா :)

பிரச்சினையை குறைக்கதான். தெளிவாயிடுச்சா. இப்போ வந்து உங்க கருத்தை சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//பிரச்சினையை இவங்களே தீர்த்துகிட்டு பிரிஞ்சி போவரதுக்கு பதிலா பெற்றோர்கிட்ட கொண்டு போனா தான் என்னப்பா !! என்ன தப்புன்றேன் .// - அதென்னங்க பிரெச்சனையை தீர்த்தா பிரிஞ்சு தான் போவாங்களா? சேர்ந்து வாழ மாட்டாங்களா?? :o

// நீங்களே சொல்லுங்க விவாகரத்து இப்போ அதிகமா குறைவா ??// - விவாகரத்து அதிகம் தாங்க நாங்க மறுக்கல. ஆனா அதுக்கு காரணம் பெற்றோரிடம் கொண்டு போகாததில்லைங்க.அந்த காலத்திலும் இது போல் விஷயங்கள் நடந்தது. ஆனா வெளிய விவாகர்த்து என்ற வார்த்தையில் வராது. வாழாவெட்டின்னு பொண்ணை கொண்டு வந்து வீட்டில் விட்டுட்டு போயிருவாங்க. மாப்பிள்ளை புது மாப்பிள்ளை ஆயிடுவார். இப்ப அதெல்லாம் சட்டம் போட்டு தடுத்ததால் விவாகர்த்துன்னு முறையா நடக்குது. அம்புட்டு தான்.

//முதலில் பெற்றோர்கள் பிரச்சினையை பெரிது பண்ணிடுவாங்க என்ற தவறான கண்ணோட்டத்தை முதலில் எதிரணியினர் எக்ஸ்ப்ளைன் பண்ணனும் . எந்த பெற்றோராவது பிள்ளைங்க வாழ்கை கெட்டு போவணும்னு நினைப்பாங்களா சொல்லுங்க.// - பெற்றோர் பிரெச்சனையை பெரிது பண்ணுவாங்க... இதுக்கு விளக்கம் தானே... இந்தா வாரேன் நடுவரே வாரேன். ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க... எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில் கல்யாணம் ஆன நாளில் இருந்து பிரெச்சனை தான். பிரெச்சனை பொண்ணுக்கு மாப்பிள்ளைக்கு இல்லைங்க. மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும். இந்த சண்டையில் கடைசியில் பிரிந்தது என்னவோ பொண்ணும் மாப்பிள்ளையும். இவங்க சண்டையிலயே இருவர் வாழ்கை அழிந்ததை பற்றி அவங்களுக்கு கவலை இல்லையாம்... இதுல பிள்ளைங்க சண்டையை இவங்க தீர்த்து வைக்கிறாங்களாமா? நல்லா இருக்கு கதை. இன்னொரு கண் முன் கண்ட சம்பவம்... மாமியாருக்கு மறுமகள் பிடிக்கல, மறுமகளுக்கு மாமியார் பிடிக்கல... ஒற்றுமையா வாழ முடியல, கணவன் மனைவிக்குள் பிரெச்சனை... மாமியார் சமாதானம் பண்ணாம வெட்டி விட்டாச்சு. இனி அவங்க வாழ்க்கை?? இது தாங்க நடக்கும் கல்யாண வாழ்க்கையில் பெற்றோருக்கு அதிக முக்கியத்துவம் தந்தா. நான் கோடி கோடியா கொட்டி கல்யாணம் பண்ணா என் பொண்ணுக்கு நீ இவ்வளவு கம்மி விளையில் புடவை எடுத்து கொடுப்பியா அவ ஸ்டாட்ஸ் என்னன்னு சண்டை போடும் பெண்ணை பெற்ற பெற்றோரும் உலகில் உண்டு... நம்ம தமிழ் நாட்டிலேயே உண்டு. கண்கூடாக கண்ட உண்மை நடுவரே. இன்று மகனை தன் வீட்டில் வைத்து கொண்டு மறுமகளை தனியாக குடித்தனம் வைத்து அவளுக்கும் பிள்லைக்கும் சமைக்க அரிசி பருப்பு பால் கொடுக்கும் குடும்பம் உண்டு. நான் கணடதுண்டு. இங்க எல்லாம் பிரெச்சனை என்ன தெரியுமா நடுவரே??? பிள்ளைகளுக்கு அவங்க வாழ்க்கையை பற்றி சுயமா முடிவெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டு/சொல்லி கொடுக்காமல் விடப்பட்டு பெற்றோறையே சார்ந்து இருப்பதால் வந்த விளைவு.

// சிக்கல் ச மேல சிக்கல் பண்ணிக்கிட்டு , திருமண உறவின் ஆரம்ப காலங்களிலேயே , தவறான முடிவுகள் எடுக்கும் இவர்கள் , முட்டாளுங்க தாங்க.// - திருமணம் ஆன புதிதில் எல்லா ஆணும் பெண்ணும் விட்டுக்கொடுக்க தான் நினைப்பாங்க எதிர் அணி மக்களே. அவங்களுக்குள் அப்போ பிரெச்சனையே வராது. அப்படியே வந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சற்று நேரம் ஆகும் என்பதை அவர்களும் அறிவர். இங்க மூன்றாவது மனிதறாக பெற்றோர் தலையீடு வரும் போது தான் பிரெச்சனை ஆகிறது. இன்னைக்கு சொன்ன நகையை போடலன்னு பெண்ணை திட்டி தீர்க்கும் மாப்பிள்ளை வீடுகள் உண்டு. அந்த சமயத்தில் பெண் மேல் அதிக அன்பும், பற்றும் வந்திருக்காத மாப்பிள்ளை இன்று வந்த மனைவியை விட பெற்றோரை பெரிதாக நினைத்தால் தான் அவர்கள் நடுவே விரிசல் வரும். சில உஷார் பார்ட்டிங்க அப்பவே தனியா கிளம்பிடும். ;) இவங்க தொல்லை இல்லாம நாம நிம்மதியா வாழலாம்னு.

//திருமணத்திற்கு முன்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண பெற்றோரை சார்ந்திருக்கும் நாம்// - இது எப்பங்க?? பள்ளி காலமா? அப்ப கூட இன்று பிள்லைகள் பெற்றோர் பேச்சை கேட்பதில்லை நடுவரே. நண்பன் சரி இல்லைன்னு சொல்லி பார்க்க சொல்லுங்க பெற்றோரை... அவங்களுக்கு தெரியாம போய் பார்ப்பாங்க அந்த நண்பனை. சினிமா வேணாம்னு சொல்ல சொல்லுங்க, காலேஜை கட்டடிச்சுட்டு போவாங்க. காதலிச்ச பெண்னை விட்டுடுன்னு சொல்லாத வீடு ரொம்ப கம்மி... எந்த பையன் / பொண்ணு கேட்குது??? இதுல எல்லாம் சுயமா முடிவெடுக்க தெரிஞ்சவங்களுக்கு வாழ்க்கையை வாழவும் காபாத்திக்கவும் முடிவெடுக்க தெரியாதா???

//பிள்ளைகளின் மன வாட்டத்தையும், கோபத்தையும் உங்களின் முகத்தை வைத்தே அவர்களால் கண்டுபிடிக்க இயலாது என்று நினைக்கிறீர்களா? ஆனால் உங்களின் பிரச்சனைகளை சொல்லாமல் தவிர்க்கும் போது அவர்கள் அடையும் வேதனை சொல்லி மாளாது.// - ஒரு முறை பிரெச்சனைன்னு சொல்லிட்டா அப்பறம் நீங்க உண்மையா சிரிச்சா கூட உள்ளுக்குள் பிரெச்சனையை மறைக்கிறீங்கன்னு தான் எண்னம் இருக்கும் அவங்களுக்கு.

காலை டிஃபனை சாப்பிட்டு தெம்பா வாரேன் இருங்க நடுவரே. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அதென்னங்க பிரெச்சனையை தீர்த்தா பிரிஞ்சு தான் போவாங்களா? சேர்ந்து வாழ மாட்டாங்களா?? :o//

அட ஆமால்ல. பிரச்சினை தீர்ந்த பின்னாடி ஏன் பிரியப்போறாங்க. எதிரணி விளக்கம் ப்ளீஸ் :)

//இப்ப அதெல்லாம் சட்டம் போட்டு தடுத்ததால் விவாகர்த்துன்னு முறையா நடக்குது. அம்புட்டு தான்.//

ஓஹ் எல்லாம் ஒன்னுதான் பேர்தான் வேறன்னு சொல்றீங்க :)

// பிள்ளைகளுக்கு அவங்க வாழ்க்கையை பற்றி சுயமா முடிவெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டு/சொல்லி கொடுக்காமல் விடப்பட்டு பெற்றோறையே சார்ந்து இருப்பதால் வந்த விளைவு.//

பிள்ளைகளை சுயமா முடிவெடுக்க விடுங்கப்பா எல்லாம் சரியாகிடும்னு சொல்றாங்க. சரியாத்தான் சொல்லியிருக்காங்களோ... இல்லியா அப்படீன்னா ஏன் இல்லைன்னு சொல்லிப்புடுங்கோ. நடுவருக்கு இருந்த கொஞ்சூண்டு மூளையும் காய்ஞ்சு போச்சு :(

//ஒரு முறை பிரெச்சனைன்னு சொல்லிட்டா அப்பறம் நீங்க உண்மையா சிரிச்சா கூட உள்ளுக்குள் பிரெச்சனையை மறைக்கிறீங்கன்னு தான் எண்னம் இருக்கும் அவங்களுக்கு.//

ம்ம்ம் இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

சீக்கிரமா சாப்பிட்டு தெம்பா வாங்க வனி. நடுவர் வெய்ட்டிங்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே ஒருமுரை பெற்றோர் கிட்ட நம்ம ஆலோட தப்ப சொல்லிட்டோம்னா அப்புரம் அவங்க எப்படி நம்ம ஆலை மதிபங்க இவங்களும் எப்படி உரிமையா நம்ம வீட்டுக்கு வருவாங்க உருத்தலோடதான் வருவாங்க,ஒருமுரை நம்ம பெற்றோர்கிட்ட சொல்லிட்டோம்னா காலத்துக்கும் அப்படியேதான் அந்த கரும்புள்ளி இருக்கும் மாராது,நம்ம பிரச்சினையை யேண்டா சொன்னோம்னு மண்டையை பிச்சுக வேண்டியதுதான்,அதவிட கணவன் மனைவிகுள்ளேயே இந்த பிரச்சினையை பேசி முடிவுக்கு வருவது,சமாதானம் செய்வதும் நல்லது,ஒருமுரை ,ரெண்டு முரை போனா பிரச்சினை தீர்த்து வைப்பாங்க அடுத்தடுத்து போனோம்னா அவங்களே வேர வழியில்லாமா பிரிசிடுவாங்க இது தேவையா

மேலும் சில பதிவுகள்