ரோஸ் மில்க்

தேதி: May 21, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

பால் - கால் லிட்டர்
சீனி - கால் கப்
ரோஸ் மில்க் எசன்ஸ் - கால் தேக்கரண்டி
ஊற வைத்த பாதாம் பிஸின் - 3 மேசைக்கரண்டி


 

பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
பாதாம் பிஸினில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காலையில் எடுத்து மேலே இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஆற வைத்த பாலுடன் சீனி சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சீனி கரைந்ததும் ரோஸ் மில்க் எசன்ஸுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலந்து அதை பாலில் ஊற்றவும்.
பிறகு அதில் ஊற வைத்த பாதாம் பிஸினை போட்டு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான ரோஸ் மில்க் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரோஸ் மில்க் மிக நன்றாக பார்பதற்கு கலர்புல்லா இருக்கிறது. . பாதாம் பிசின் என்பது என்ன? எனக்கு தெரியாது , கூறுங்கள்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

பாதம் பிசின் என்பது உடலுக்கு மிகவும் நல்லது.. உடல் சூட்டை தனிக்கும்.. மிகவும் ஆரோக்கியமானது பயன்கள் பல தரும்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இப்படி தான் நானும் செய்வேன் ஜில் ரோஸ் மில்க் பார்க்க ரொம்ப கலரா கண்ணை கவருது கமர்நிஷா

super rosemilk for summer......

பாதாம் பிசினை நான் பார்த்தது இல்லை எப்படி இருக்கும்

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

பாதம் பிசின் என்பது வெள்ளை கலரில் கல்லு மாதிரி இருக்கும்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அதை இரவே ஊற வைக்கனும்.. காலையில் பாலில் அடித்து தேவையென்றால் சக்கரை சேர்த்து சாப்பிடலாம்.. அது உடலுக்கு ரொம்ப நல்லது

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இன்டர்நெட்டில் சர்ச் செய்தால் கிடைக்கவில்லை எப்படி பார்ப்பது

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

அது தெரியல சங்கீதனா நான் அடிக்கடி பாதாம் பிசின் குடிப்பேன் ஆதலால் எனக்கு தெரியும் பா

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Hi,
Is it available in USA?
Or in India where can we get?

ரோஸ் மில்க் மிக நன்றாக இருக்கிறது.விருப்பப் பட்டியலில் சேர்க்கிறேன்

No pain No gain

Rose milk super

sasikala

பாதாம் மரத்திலிருந்து பெறப்படும் பிசின்தான் இது.
'பாதாம் பிசின் images' அல்லது 'Almond gum images' என்று தேடிப் பாருங்க. கூகுளில் தெளிவான படங்கள் இருக்கின்றன.

‍- இமா க்றிஸ்

பாதாம் பிசின் எப்படி செய்வது?

நடப்பதெல்லாம் நன்மைக்கே