கத்திரிக்காய் பச்சடி

தேதி: June 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கத்தரிக்காய் - 2
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் துருவல் - கால் கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
புளி - சிறிது
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

கத்தரிக்காய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
தேங்காய் துருவலுடன் பூண்டு பல், சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கத்தரிக்காயை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு போட்டு கிளறவும்.
காரம் தேவையென்றால் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சடியில் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கத்தரிக்காய் பச்சடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்கு,நானும் இப்படிதான் வெள்ளரிக்காயில் செய்வேன்.கத்திரிக்காயில் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.