தானியக் கஞ்சி

தேதி: June 20, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

கேழ்வரகு, கம்பு, எள் போன்ற பல வகையான தானியக் கலவை - ஒரு கப்
ஓட்ஸ் - அரை கப்
ரவை - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கேரட் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
புதினா, மல்லித் தழை


 

தானியங்களை 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளியை துண்டுகளாகவும், கேரட்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். புதினா மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, தக்காளி, கேரட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் ஊறவைத்த தானியக் கலவை, ரவை, ஓட்ஸ், உப்பு, புதினா மற்றும் மல்லித் தழை சேர்த்து 2 கப் நீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் ஊற்றி வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான, சத்தான தானியக் கஞ்சி ரெடி. இதனுடன் உங்களுக்கு விரும்பமான சிறு தானியங்களைச் சேர்த்தும் செய்யலாம். நான் வெள்ளரி விதை, ஆளி விதை (Lin Seed) சேர்த்து செய்துள்ளேன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள் அக்கா....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி,உமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி,வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி,
சூப்பர் ஹெல்தி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி,கவிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கேழ்வரகு, கம்பு எல்லாம் முழு தானியமாதானே போட்டிருக்கிறீங்க, 10 நிமிடத்தில் ஊறிவிடுமா? வேக எவ்வளவு நேரம் எடுக்கும் ? தேங்காய்ப் பாலுக்குப் பதில் வெறும் பால் சேர்க்கலாம ? டின்னருக்க செய்யலாம்ன்னு இருக்கேன், சத்தான கஞ்சி
ப்ளீஸ் சந்தேகத்திற்க்கு பதில் கொடுங்க முஸி

விரும்பினால் எல்லாம் சேர்த்து கடைசியில் 2 விசில் குக்கரில் வேக‌ விடுங்களேன்.நான் ஆளி விதை,எள்,வெள்ளரி விதை அதிகம் சேர்த்து சேய்தேன்,மிக்ஸட் மல்டி கிரேன் என்று கடையில் வாங்கினேன்.சாதாரணமாகவே வெந்துவிட்டது.வெரும் பால் சேர்த்தும் செய்யலாம்.20 நிமிடம் வேக‌ போதுமான‌ நேரம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.