கிழங்கு ரொட்டி

தேதி: September 27, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

மைதா மாவு - 450 கிராம்
பட்டர் - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 250 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
கடுகு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
மிளகு தூள் - காரத்திற்கேற்ப
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பட்டர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, அதன்மேல் சிறிது எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும். பிறகு தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அதனுடன் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி நன்கு கலந்து மசாலாவைத் தயார் செய்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் சிறிய உருண்டை அளவு எடுத்து பூரி போல இட்டுக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, கலவை வெளியில் தெரியாதவாறு மூடி உருண்டையாக்கி, பிறகு மீண்டும் அதை பூரி போல சற்று மொத்தமான ரொட்டியாக கைகளால் தட்டிக் கொள்ளவும்.
தவாவை சூடாக்கி எண்ணெய் தடவி அதில் தயார் செய்த ரொட்டிகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். (தனித்தனியாக வேகவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் இதேபோல் மூன்று ரொட்டிகளைப் போட்டு வேகவிடலாம்).
சூடாகப் பரிமாற சுவையான கிழங்கு ரொட்டி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிழங்கு ரொட்டி சூப்பர் உமா,செய்து கொடுத்தால் வேண்டாமென்றா சொல்லுவேன்,ஹிஹி

Eat healthy

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி ரஸியா. உங்களுக்குதான் சூடா சாப்ட்ருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Super uma.. nalla softaa oru chappathi.. enakum

Be simple be sample

நன்றி ரேவ்ஸ். உங்களுக்கு இல்லாததா

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா கிழங்கு ரொட்டி பார்க்கவே சாப்பிடனும்னு தோனுது சூப்பர் :)
கடைசி ப்ளேட்டும் ரொட்டியும் அனுப்பிவைங்கோ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கண்டிப்பா அனுப்புறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா