அவல் கேசரி

தேதி: April 23, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (12 votes)

 

அவல் - 2 கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - அரை கப்
முந்திரி - 15
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை


 

தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பின் அவலை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடர் கலந்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும், அவலைச் சேர்த்து வேகவிடவும்.
அவல் வெந்து வரும் போது, சர்க்கரையைச் சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்த பின், இளகி கெட்டியான பதம் வந்ததும் நெய் சேர்க்கவும்.
நெய் பிரிந்து வரும் போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
நாவில் எச்சில் ஊறவைக்கும் அவல் கேசரி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் இனிப்பான குறிப்புக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து அறுசுவையில் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள். கலக்குங்க ரேவ்ஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் குறிப்பே இனிப்பா அட்டகாசமாக அனுப்பியிருக்கீங்க ரே... சூப்பர் வாழ்த்துக்கள் :) அவல் கைவசம் இல்லை, நாளை மார்க்கெட் போகும் போது வாங்கி டிரை செய்துடறேன்.. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அவல் கேசரி படமே பார்க்க ரொம்ப சூப்பர்ங்க அக்காங் :-) முதல் குறிப்புங்களா? சொல்லவேயில்லை, ரொம்ப அருமைங் அக்காங் :-) வாழ்த்துக்கள்

நட்புடன்
குணா

____

நட்புடன்
குணா

அட நம்ம ரேவதி !!!!! ஆரம்பமே அசத்தலா இருக்கு..அவல் அ போட்டு ஆள சாச்சுப்புட்டு புள்ள ..வாழ்த்துக்கள் ரேவதி இன்னும் நிறைய குறிப்புகள் குடுத்து அறுசுவை மக்கள் மனதில் ஆழமா பதிய வாழ்த்துக்கள் அம்மணி!!!!

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் வெளுத்து வாங்குடி ரேவதி!!!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வாழ்த்துக்கள் ரேவதி...இன்னும் நிறைய நிறைய எதிர்பாக்குறேன் உங்ககிட்ட இருந்து!!!!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அடுத்த முறை நான் உங்க வீட்டுக்கு வந்தா அவல் கேசரி செய்து தருவியா மா செல்லம்!!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ரேவ்ஸ் முதல் குறிப்பா இது நம்பவே முடில:) முதல் குறிப்பே இனிப்பா ஆரம்பிச்சிருக்கீங்க...மேன்மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது முதல் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினர்க்கு நன்றி...

Be simple be sample

முதல் நபராய் வந்து பதிவிட்டு உற்சாகபடுத்திய வனிக்கு நன்றி....இனி கண்டிப்பா முயற்சிகள் தொடரும்பா...

Be simple be sample

வாழ்த்துக்கு நன்றி சுமி....இன்னைக்கு வாழ்த்து மழைல நனைய வச்சிடிங்க....செய்து பாருங்க..ஈசியான குறிப்பு...

Be simple be sample

தம்பிங்..... வாழ்த்துக்கு நன்றி...குறிப்பு வந்ததே எனக்கே தேரியாது..தம்பிங்....

Be simple be sample

கவி செல்லம்..வாழ்த்துக்கு மிக மிக நன்றி...என்னய நம்புற ஒரே ஆளு நீதான்..உனக்கு இல்லாதா..வீட்டுக்கு வா..அவல் கேசரி கொடுத்து வெளுத்து வாங்குறேன்....சரியா....

Be simple be sample

ரொம்ப நன்றி அருட்செல்வி.....முதல் விசயம் எப்பவும் ஸ்விட்டோடதான்..

Be simple be sample

இனிப்பான முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)தொடருங்கள் :)

Kalai

வாழ்த்துக்கள் ரேவதி... அவல் கேசரி சூப்பரா இருக்கு. செய்முறை அருமை.. இன்னும் நிறைய நிறைய குறிப்புகள் போடவும். நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கோம்.

"எல்லாம் நன்மைக்கே"

மிக மிக நன்றி...கலை

Be simple be sample

பாக்யா ரொம்ப ரொம்ப நன்றிப்பா...

Be simple be sample

ஹாய் ரேவ்ஸ்,

அட்டகாசமான தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் :)

"அவல் கேசரி" முதல் குறிப்பே,இனிப்போட தொடங்கியிருக்கீங்க,அருமையான

குறிப்பு,தெளிவான செய்முறை,பாராட்டுக்கள் ரேவ்ஸ்.

மேலும் பல குறிப்புகள் தொடர்ந்து கொடுத்து அசத்த மனமார்ந்த வாழ்த்துக்கள்டா :)

அன்புடன்
நித்திலா

ஹாய் நித்தி...ரொம்ப்ப ரொம்ப தான்க்ஸ்டா...உங்க வாழ்த்திற்கும்,பாரட்டிற்கும்..

Be simple be sample

nan aval kesari seithu pathan pa.enaku aval vehamatikithu.ena seivathu.

Innaiku try pannean pa ....really superb..kalakuga..

All is well...