மிளகு வெங்காயக் குழம்பு

தேதி: June 12, 2008

பரிமாறும் அளவு: 6நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உரித்த சாம்பார் வெங்காயம் - ஒரு கோப்பை
புளி - எலுமிச்சை அளவு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
பொடிக்க:
மிளகு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரைத்தேக்கரண்டி
துவரம்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - நான்கு
தனியா - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

ஒரு தேக்கரண்டி எண்ணெயில் பொடிக்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும்.
இஞ்சி பூண்டு வெங்காயம் ஆகியவற்றை சிறிதாகவும், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
புளியை சுடு தண்ணீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து நான்கு கோப்பை வருமாறு நீரை ஊற்றி கரைத்து வடிகட்டிவைக்கவும்.
பிறகு அதில் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு மற்றும் மிளகைப் போட்டு பொரியவிட்டு அதில் வெங்காயம் இஞ்சி பூண்டைப் போட்டு சிறிது வதக்கவும்.
பிறகு அதில் தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூளைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு கரைந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து சற்று கெட்டியான பதம் வந்தவுடன் அடுப்பின் அனலை மிகவும் குறைத்து வைத்திருந்து பத்து நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.
இந்த சுவையான குழம்பிற்கு அப்பளம் மற்றும் உருளைக்கிழங்கு பொடிமாஸ் நல்ல பொருத்தமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம் மனோகரி மேடம் உங்கள் மிளகு வெங்காய குழம்பு செய்து சாப்பிட்டோம் நன்றாகயிருந்தது,ஆனால் ஒரே புளிப்பாகவுள்ளது.இந்த குழம்பை பார்த்தால் புளி சாதத்திற்கு புளி கரைசல் செய்வார்களே அது போல்வுள்ளது,மேலும் இதை சாப்பிட்ட எங்களுக்கு சிறிது பேதியாகியது.[குறிப்பு இந்த குழம்பு சாப்பிட்டால் உடம்புக்கு என்ன பலன்வென்று குறிப்பிடவும்]

அறுசுவை தேன் சுவை

வணக்கம் மனோகரி மேடம் உங்கள் மிளகு வெங்காய குழம்பு செய்து சாப்பிட்டோம் நன்றாகயிருந்தது,ஆனால் ஒரே புளிப்பாகவுள்ளது.இந்த குழம்பை பார்த்தால் புளி சாதத்திற்கு புளி கரைசல் செய்வார்களே அது போல்வுள்ளது,மேலும் இதை சாப்பிட்ட எங்களுக்கு சிறிது பேதியாகியது.[குறிப்பு இந்த குழம்பு சாப்பிட்டால் உடம்புக்கு என்ன பலன்வென்று குறிப்பிடவும்]

அறுசுவை தேன் சுவை

வணக்கம் மனோகரி மேடம் உங்கள் மிளகு வெங்காய குழம்பு செய்து சாப்பிட்டோம் நன்றாகயிருந்தது,ஆனால் ஒரே புளிப்பாகவுள்ளது.இந்த குழம்பை பார்த்தால் புளி சாதத்திற்கு புளி கரைசல் செய்வார்களே அது போல்வுள்ளது,மேலும் இதை சாப்பிட்ட எங்களுக்கு சிறிது பேதியாகியது.[குறிப்பு இந்த குழம்பு சாப்பிட்டால் உடம்புக்கு என்ன பலன்வென்று குறிப்பிடவும்]

அறுசுவை தேன் சுவை

வணக்கம் SHAHUL HAMEE எப்படி இருக்கீங்க? இந்த குறிப்பை செய்து பார்த்து அதன் பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.இந்த மிளகு குழம்பில் நாம் சேர்க்கும் பொருட்களுக்கு ஏற்ப நீங்க கூறியிருப்பது போல் தான் தோற்றமளிக்கும். மேலும் இதில் சேர்க்கும் முக்கிய பொருட்களான மிளகு புளி இஞ்சி பூண்டு இவைகள் அனைத்தும் ஜீரணத்திற்கு மிகவும் உகந்த பொருட்கள் மேலும் சூடு தண்மையையும் கொண்டது என்பதால் தாங்கள் கூறியுள்ள வயிற்று உபாதைகள் ஏற்பட்டருக்கலாம், அதைப் படித்ததும வருத்தமாக இருந்தது. இருந்தாலும அதற்காக அறவே நிறுத்த வேண்டாம். பொருட்களின் அளவில் சற்றுக் குறைத்து சேர்த்து செய்து பாருங்கள்.இஞ்சிக்கு பதிலாக சுக்குபொடி சிறிது சேர்த்து கொள்ளுங்கள்.குழம்பை சற்று நீர்த்த பதமாக செய்வதும் நல்லது. நம் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு பொருட்களை மாற்றி அதன் தன்மையை மாற்றி செய்து பார்ப்பதில் தவறில்லை.மருத்துவ குணம் வாய்ந்த இது போன்ற உணவுகளை மாதம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது சரீங்களா நன்றி.

அஸ்ஸலாமு அலைக்கும் சாஹுல் ஹமீது
இதில் காரம் அதிகமானதான் உங்களுக்கு வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவில்லை,
சில பேருக்கு சுள்ளுன்னு ஒரைக்கர மாதிரி காரம் சாப்பிடுவர்கள். அவர்களுக்கு ஒகே.

ஆகையால் இதில் பொடிக்க கொடுத்துள்ள அளவில் மிளகு இரு தேக்கரண்டியும் காஞ்ச மிளகாய் சிறிய்து இரண்டும் சேர்த்து பொடித்து கொள்ளுங்கள்.

இது என்னுடைய ஐடியா.

ஜலீலா

Jaleelakamal

மனோகரி ஆண்டி,
எப்படி இருக்கிங்க? என்னுடைய பொன்னு நன்றாக இருக்கின்றாள். நான் மிளகு குழம்பு செய்தேன். நன்றாக இருந்த்து. இந்த குளிர் காலத்தில், காய்ச்சல் இருக்கும் பொழுது இந்த குழம்பு சாப்பிட நன்றாக இருந்த்து. என்னுடைய அம்மாவும் இப்படி தான் செய்வங்க. ஆனா இஞ்சி சேர்க்க மாட்டங்க.

டியர் மனோகரி மேடம்,

நேற்று லன்ச்-கு இந்த மிளகு வெங்காய குழம்பு செய்தேன். ஏற்கனவே இங்கு இருக்கும் சில பின்னூட்டங்களையும் படித்து எங்கள் சுவைக்கு தகுந்தவாறு மிளகாய் இரண்டை குறைத்து, புளியையும் கொஞ்சம் கம்மி பண்ணி போட்டேன். ரொம்ப ரொம்ப அட்டகாசமான சுவையான குழம்பு கிடைத்தது.

இப்போ ஒரு இரண்டு நாட்களாக என் கணவருக்கு லைட்டாக ஜலதோஷம், இருமல் தொந்தரவு இருந்ததால் இந்த மிளகு குழம்பை ட்ரை பண்ண எண்ணினேன். அவருக்கு ரொம்பவே பிடித்து போயிற்று. ரொம்ப நன்றாக இருக்கு என்று இரண்டாவதாக கொஞ்சம் போட்டு சாப்பிட்டார். நிஜமாவே குளிருக்கு இந்த குழம்பை சுடு சாதத்தில் போட்டுக்கொண்டு சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டது ரொம்ப நல்ல காம்பினேஷன். சூப்பர் குறிப்புக்கு ரொம்ப நன்றி மேடம்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி ஸ்ரீ, இந்த குழம்பை எப்போ வேண்டுமானாலும்கூட செய்து சாப்பிடலாம். அதிலும் நீங்க மிகவும் சரியான தருணத்தில் செய்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

மனோகரி அக்கா மிளகு வெங்காய குழம்பு மிகவும் அருமையாக வந்தது.சுடுசாதத்தில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி பிசைந்து சாப்பிட மிகவும் சுவை. நன்றி.

நன்றி மாலினி இந்த குழம்பை நீங்களும் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

டியர் கீதா தங்களின் பின்னூட்டத்தை இப்பொழுது தான் பார்வையிட்டேன் தாமதமான பதிலுக்கு வருந்துகின்றேன்.இந்த குறிப்பு அம்மா செய்யும் குழம்பு போல் இருந்தது என்பது மகிழ்ச்சியாக இருந்தது, தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

அன்பு சகோதரி மனோகரி அவர்களுக்கு,

இன்று நான் படித்து சொல்ல பாண்டியில் லதாவும், ஒரிசாவில் நானும் இந்த குழம்பு வைத்து இருக்கிறொம் (போட்டிதான்) என் குழம்பு மிகவும் சூப்பர் அங்கு எப்படி என்று தெரியவில்லை! மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126