அக்கார அடிசில்

தேதி: March 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.3 (3 votes)

 

பச்சரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப்
பால் - 4 கப்
உருண்டை வெல்லம் - 2 கப்
நெய் - 4 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ - ஒரு மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 8
கிஸ்மிஸ் - 8
பொடித்த பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் பாசிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
அதனுடன் ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
வெல்லத்தைத் துருவி (அல்லது) கத்தியால் பொடியாகத் தூள் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பாலைக் காய்ச்சி அதனுடன் வறுத்த பாசிப்பருப்பு அரிசி கலவையைச் சேர்த்து குக்கரில் வைத்து 5 – 6 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
ஆறியதும் குக்கரைத் திறந்து நன்கு மசித்துவிடவும்.
அதனுடன் வடிகட்டி வைத்திருக்கும் வெல்லப் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கட்டிகளில்லாமல் கலந்து மீண்டும் ஒரு முறை குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
ஒரு மேசைக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பு மற்றும் கிஸ்மிஸை தனியாக வறுத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய்ப்பூவையும் நெய்யில் சிவக்க வறுத்து வைக்கவும்.
வறுத்த தேங்காய்ப்பூ, பொடித்த பச்சைக் கற்பூரம், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றைப் போட்டு கலக்கவும். மீதமுள்ள நெய்யையும் சேர்த்து வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் தூவி அலங்கரித்து அக்கார அடிசிலைப் பரிமாறவும்.

இதன் செய்முறை சர்க்கரைப் பொங்கலைப் போலவே இருந்தாலும் பாசிப்பருப்பை நெய்யில் வறுத்து, பாலில் வேக வைப்பதாலும், பச்சைக் கற்பூரம் சேர்ப்பதாலும் சற்று மாறுபட்ட சுவையுடன் இருக்கும். பொங்கலைவிட சற்று தளர இருக்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இனிப்பான குறிப்பு... 100வது குறிப்பு!! வாழ்த்துக்கள் சீதா. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்பெஷல் வாழ்த்துக்கள் 100 வது குறிப்புக்கு...

அக்கார அடிசில் என் ஃப்ரெண்ட் வீட்ல சாப்பிட்டுருக்கேன். நொம்ப நல்லா இருக்கும். ஆனால் எப்படி செய்வதுன்னு தெரியாது. இப்போ தெரிஞ்சுகிட்டேன். செய்து பார்க்கிறேன்... இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்...

கலை

இனிப்புடன் நூறாவது குறிப்பினை தொடங்கி இருக்கீங்க‌, இன்னும் பல‌ 100 குறிப்புகள் கொடுக்க‌ வாழ்த்துக்கள் சீதாமேடம் :)
அக்கார‌ அடிசில் இதுவரை செய்ததில்லை, முயற்சி செய்து பார்க்கிறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

100 வது குறிப்புக்கு வாழ்த்துக்கள்... அக்கார‌ அடிசல் சாப்பிடனும் போல‌ இருக்கு சூப்பர் சீதாம்மா.........

100வது குறிப்பை இனிப்பாவே தந்திருக்கீங்க வாழ்த்துக்கள்.சீதாம்மா

Seetha Mom , Very Congratz.,,,,

Mom
100 receipe also very Sweety Tasty , MY Brother Marriage 12March, நா அவங்கல‌ விருதுக்கு கூப்பிடுவேன் அப்போ Sweet Dish இது தான், கொஇன்சம் verity ah இருக்கு, கத்தரிக்காய் கொத்ஸ் நா செய்தேன் dhosai கு super ah இருந்தது.

Yours Lovable
Maha

சீதாமா நூறாவது குறிப்பிற்கு மனம் நிறைந்த‌ வாழ்த்துக்கள்..!!
எனக்கு ஒரு சந்தேகம் மசித்து விட்டு மீண்டும் குக்கரில் வைத்து 3 விசில் விட்டால் அடிபிடிக்காதா?

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

சுவீட்டான‌ 100 வது குறிப்புக்கு வாழ்த்துக்கள்;குறிப்பு அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு வனி,

முதல் பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கலை,

வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருள்,

வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பிரியா,

பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இனியா,

வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மஹா,

வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி. செய்து பார்த்து, சொல்லுங்க‌.

கொத்ஸு செய்தீங்களா, பிடிச்சிருந்ததா, மிகவும் மகிழ்ச்சி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சிவிஸ்ரீ,

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

குக்கரில் டைரக்டாக‌ வைக்க‌ வேணாம், அதோட‌, வெல்லத் தண்ணீர் ஊற்றியதும், இன்னும் கொஞ்சம் தளர‌ ஆகிடும். அதனால், பிடிக்காது. 2 விசில் விட்டாலும் போதும். வெல்லப்பாகின் பச்சை வாசனை போகணும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு முசி,

வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

இனிப்பான 100 வது குறிப்பு, கலக்கலான பிரசன்டேஷன்
மென்மேலும் குறிப்புகள் தொடர வாழ்த்துக்கள் சீதா மேடம்.

100vathu kurippukku vazthukkal seethamma. Adistil super. viruppa pattiyalil serthuruken seythuttu solren.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

nise supppar

100 குறிப்புகள் கொடுத்து கோல்டன் ஸ்டார் வாங்கிய சீதாம்மாக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பலநூறு குறிப்புகள் கொடுக்கவும் என் வாழ்த்துக்கள்மா. இந்த அக்கார அடிசல் நான் ஒரு பிராமின் வீட்டில் சுவைத்து இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும் நிச்சயம் செய்து பார்ப்பேன் சீதாம்மா

அன்பு வாணி,

பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரிஸ்வான் நூரி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமாகுணா,

பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. செய்து பார்த்து, சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி,
நூறாவது குறிப்புகளுக்கு வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். எங்கம்மா பாசிப்பருப்பு இல்லாமல் தான் செய்வாங்க, நானும் அப்படித்தான் பழகினேன். இந்த முறை முயற்சித்துப் பார்க்கிறேன்.

அன்புடன்,
செல்வி.