குதிரைவாலி தோசை

தேதி: March 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

குதிரைவாலி - 2 கப்
குண்டு உளுந்து (அ) பொட்டு உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். குதிரைவாலியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். குண்டு உளுந்தையும் நன்றாகக் கழுவி அதிகமாக தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும். (அரிசி மாவு அரைக்கும் போதும் இதே முறையில் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து அரைத்தால் மாவு நன்றாக நுரைத்து வரும். நீர்த்துப் போகாது. கறுப்பு உளுந்தாக இருந்தால் ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லை).
பிறகு கிரைண்டரில் ஊறவைக்காத வெந்தயத்தைக் களைந்து போட்டு அரைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து ஊறவைத்த உளுந்தைப் போட்டு நுரைக்க அரைத்தெடுக்கவும். அதன் பிறகு குதிரைவாலியைப் போட்டு நைசாக அரைத்தெடுத்து உளுந்து மாவுடன் சேர்க்கவும். அதனுடன் உப்புப் போட்டு கலந்து வைக்கவும்.
8 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு புளித்திருக்கும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து தோசை மாவை எடுத்து ஊற்றி சற்று மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும்.
சுவையான குதிரைவாலி தோசை தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குதிரைவாலியை ஊறவைக்கும் போது நன்றாக களைந்து ஊறவைத்தால் அதிக சத்துக்கள் வீணாகாமலிருக்கும்.

இந்த மாவில் நறுக்கிய கேரட், வெங்காயம் சேர்த்து கலந்து பணியாரமாகவும் ஊற்றி எடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு அருட்செல்வி,

சிறு தானிய‌ சமையல் பற்றிய‌ விழிப்புணர்வு நிறையவே வந்திருக்கு இப்ப‌. நிறைய‌ப் பத்திரிக்கைகளிலும் இதைப் பற்றிய‌ செய்திகள் வருகின்றன‌.

நீங்க‌ கொடுக்கும் குறிப்புகள் எல்லோருக்கும் சிறு/குறு தானியங்கள் பயன்படுத்தி சமைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

ஒரு சின்ன‌ சந்தேகம் ‍= வெந்தயத்தை ஊற‌ வைக்காமல் போட்டால், கிரைண்டரில் ஒட்டிக் கொள்ளாதா?

அன்புடன்

சீதாலஷ்மி

குதிரைவாலி dhosai very Different , Very Easy Dish ah இருக்கு, குதிரைவாலி சாதம் பன்ன‌ வாங்கினேன், இப்போ இந்த‌ Dish Easy ah இருக்கு so dhosai க்கு try பன்ற ,Mom

Yours Lovable
Maha

தோசை சூப்பர் செல்வி. குதிரைவாலி தேடிட்டு இருக்கேன். சீக்கிரம் கண்டு பிடிச்சிருவேன்னு நினைக்கிறேன். சீதாம்மாவோட சந்தேகம்தான் எனக்கும். வெந்தயத்தை ஊறவைக்காம எப்டி அரைக்கிறது? இதுலயே இட்லி ஊற்றலாமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆஹா!!!மருபடியும் குதிரைவாலியா!அசத்துங்க‌;

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு சீதாமேடம்,

ஆமாங்க, நானும் நிறைய படிச்சிருக்கேன். அரிசிக்கு மாற்றா நிறைய பேர் இதனை பயன்படுத்துகின்றனர். சுவையும் மாறுபடுவதில்லை.

முக்கியமா சர்க்கரை அளவு, உடல் பருமன் ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைக்க இது போன்ற தானியங்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். எலும்புகளுக்கும் ஊக்கம் அளிப்பவையாக இருக்கின்றனவாம்.
.
//வெந்தயத்தை ஊற‌ வைக்காமல் போட்டால், கிரைண்டரில் ஒட்டிக் கொள்ளாதா?//
ஊறவைக்காமல்தான் எப்பொழுதுமே அரைப்பேன்.(அம்மா வீட்லயும்,)கிரைண்டர் சப்தம் கொடுக்கும். ஒட்டவே ஒட்டாதுங்க. வெந்தயம் போட்டு 4 சுத்து ஓடின உடனே உளுந்தை போட்டு விடுவேன்.
மிக்க நன்றிங்க சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மஹா நான் குதிரைவாலியில் முதன்முதலாக தோசைதான் செய்தேன். பிறகுதான் ப்ரியாணி, சாதம்லாம்.
ஆமாம் செய்வது மிகவும் எளிது. சுவைல வித்யாசமே இல்லை. இட்லியும் செய்தேன் நன்றாகவே வந்தது.
முயற்சி பண்ணிப்பாருங்க, பின்னூட்டம் அளியுங்க எப்படி இருந்ததுனு.

மிக்க நன்றி மஹா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கிரைண்டர் போட்ட உடனே வெந்தயம் போட்டுவிடுவேன். சுத்தும் போதே உளுந்தை போடுவேன்.
கண்டிப்பா ஊத்தலாம்பா, நல்லா வருது.

மிக்க நன்றி உமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி முதலில் தோசை குறிப்புதான் அனுப்பினேன், ஃபோட்டோஸ் கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு, அதானால ப்ரியாணி முந்திக்கிச்சு.
மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் டீமிற்கு மிக்க நன்றி :) பொறுமையுடன் குறிப்புகளை பெற்று வெளியிடும் பாங்கினை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குதிரைவாலி தோசை மிகவும் அருமை.

உங்க ஹார்ஸ் டெயிலில் இப்போ தோசை செய்ய ஆரம்பிச்சச்சா??!! :) நடக்கட்டும் நடக்கட்டும். கிடைச்சா நாங்களும் செய்யறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்த போது தான் கம்பு இட்லி, தோசை செய்ய ஆரம்பித்தேன்.குதிரை வாலி? அடுத்த முறை ஊரிலிருந்து இந்த தானியங்களெல்லாம் வாங்கி வந்து விட வேண்டியதுதான்.
பார்க்க அரிசி தோசை போன்றே இருக்கு. சத்தான குறிப்புகள் மென்மேலும் தொடர்க...

பாலபாரதி மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆம் வனி, முறைகள் அரிசிக்கு பதிலா இதிலயே இட்லி, தோசை, பணியாரம்னு செய்ய ஆரம்பிச்சிட்டேன். மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கம்பு இட்லியா, அசத்துங்க வாணி :) வாங்கிடுங்க, நல்லாவே இருக்கு, சுவையில் மாற்றமில்லை. சொல்லப்போனா சுவை கூடுதல்னே சொல்வேன் :)
மிக்க நன்றி வாணி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருட்செல்வி,
இப்பதான் வரகரிசி வாங்கி வைத்திருக்கேன். அடுத்த மாதம் கடைக்குப் போகும் போது வாங்கி முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

ஹாய் அருட்செல்வி

குதிரைவாலி என்றால் என்ன?

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

தோசை செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்ததென‌ சொல்லுங்க‌, மிக்க‌ நன்றி செல்விக்கா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் துஷ்யந்தி, உங்களோட‌ பதிவுகள் சமையல் குறிப்புகள் பார்த்தும், படித்தும் இருக்கிறேன். முதன்முறையாக‌ பேசுவது சந்தோஷமாக‌ இருக்கிற்து :)

இது சிறுதானிய‌(millet) வகையை சார்ந்தது.

வரகு, சாமை போலவே இருக்கும். அளவில் சிறு மாற்றம் இருக்கும். தற்பொழுது பெரும்பாலான‌ மளிகைகடைகளில் கிடைக்கிறது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.