தேதி: March 15, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - முக்கால் கப்
கேரட் - 2
முட்டைக்கோஸ் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 4 இணுக்கு
இஞ்சி - சிறு துண்டு
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி (அ) பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை நீளவாக்கில் மிக மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவையும், அரிசி மாவையும் போட்டு, அதனுடன் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, காய்கறிகள், மிளகாய் தூள் (அ) பச்சை மிளகாய் மற்றும் உப்புப் போட்டு நன்றாக பிசறி 5 நிமிடங்கள் மூடிவைக்கவும். (தண்ணீர் ஊற்றத் தேவையில்லை). மீண்டும் ஒரு முறை பிசறினால் காய்கறிகள் மற்றும் வெங்காயத்தில் உள்ள தண்ணீர் மாவுடன் நன்றாகச் சேர்ந்திருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை உதிர்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற சத்தான, சுவையான வெஜிடபுள் பக்கோடா தயார். மிக எளிதாகச் செய்துவிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.

பச்சை மிளகாயை நறுக்கும் போது அதிலுள்ள விதையை நீக்கிவிட்டு நறுக்கவும். பச்சை மிளகாய் நல்லது தான் என்றாலும், அதன் விதைகள் அல்சரை உருவாக்குவதில் மிகப்பெரும் காரணியாக விளங்குகின்றது.
இந்த பக்கோடாவை எளிதில் வேகக்கூடிய காய்கறிகள் எது வேண்டுமானாலும் சேர்த்துச் செய்யலாம். பிஞ்சு சுரைக்காய் இருந்தால் போடலாம்.
Comments
அருள்
ரொம்ப ஈஸியா இருக்குது அருள்...கண்டிப்பா டிரை செய்துட்டு சொல்லுறேன்....நான் தான் முதல் ஆளா வந்தேன்...ப்ளேட்டோட எனக்கு தான்....வாழ்த்துக்கள்...
Expectation lead to Disappointment
VEG பக்கோடா......
ஹாய் அருள்அக்கா......
ரொம்ப நாளாயிடுச்சுங்க வீட்டுல பக்கோடா செஞ்சு அம்மாகிட்ட சொல்லி கண்டிப்பா செஞ்சுபார்த்துட்டு சொல்றேன் அக்கா.....இஞ்சி கண்டிப்பா சேர்க்க வேண்டுமா...
அருள்
சூப்பர்... ட்ரை பண்ணுவோம் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அருள்
நல்ல சத்தான டீ டைம் ஸ்னாக்ஸ்... ட்ரை பண்ணுகிறேன்....
வெஜிடபிள் பக்கோடா
அன்பு அருள்,
காய்கறிகள் சேர்த்து, சத்தான பக்கோடாவாகக் கொடுத்திருக்கீங்க. நல்லா இருக்கு.
அன்புடன்
சீதாலஷ்மி
Akka , Easy And Healthy &
Akka , Easy And Healthy & செய்முரை ,also,,,அருமையாக உள்ளது,,,2nd picture Colour fulll
Yours Lovable
Maha
மீனாள்
///ப்ளேட்டோட எனக்கு தான்///எடுத்துக்கோங்க மீனாள், உங்களுக்கு இல்லாத்தா!!
ஆமாம்பா ரொம்பவே எளிதான செய்முறை, மிக்க நன்றி மீனாள் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அனுஸ்ரீ
இஞ்சி சேர்க்காமலும் தயாரிக்கலாம். வயிற்றுக்கு நல்லது இஞ்சி சேர்ப்பது. கடலைமாவு பதார்த்தம் சாப்பிடும் போது சிலருக்கு வயிற்றுபொருமல் வரும், இதை சேர்ப்பதால் தடைசெய்துவிடும் என்பதாலேயே சேர்ப்பது நல்லது.
பிடிக்கலேனா போடவேண்டாம்.
பக்கோடா சுவை எப்படி இருந்துச்சுனு சாப்பிட்டு சொல்லுங்க அனு, மிக்க நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வனி
வனி நிச்சயம் முயற்சித்து பாருங்கள், மிக்க நன்றி வனி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ப்ரியா
ப்ரியா செய்முறையும் மிக எளிது, எப்படிஇருந்துச்சுனு சொல்லுங்க மிக்க நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சீதாமேடம்
குட்டீஸ்க்கு செய்து கொடுத்து பாருங்க, ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்வாங்க :) மிக்க நன்றி சீதாமேடம்.:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
மஹா
மஹா ரொம்ப நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
எளிதில் செய்யக் கூடிய ஹெல்தியான ஸ்நாக். ஈவினிங் டீ கூட சாப்பிட்டுகிட்டே சுவைக்கலாம் போல இருக்கே. நன்றி அருள்
அருட்செல்வி
பக்கோடா சூப்பர் செல்வி.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
அருள்
பக்கோடா சூப்பர் அருள், இந்த முறையில் நான் செய்ததில்லை, இந்த வாரமே செய்து விடுகிறேன்
அருட்செல்வி
ஈசி பக்கோடா,நல்லாருக்கு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
பக்கோடா
அன்பு அருள்,
மாவு பிசையும் போது நான் இதனுடன் 4,5 பல் பூண்டு நசுக்கி போடுவேன். அப்பயும் செய்து பாருங்க. இன்னும் மணமாக இருக்கும்:)
அன்புடன்,
செல்வி.
உமா
மிக எளிதுதான், செய்து பாருங்க, மிக்க நன்றி உமா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வாணி
மிக்க நன்றி, எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க வாணி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
musi
மிக்க நன்றி முசி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
செல்விக்கா
அடுத்த முறை பூண்டு சேர்த்து செய்து பார்க்கிறேன் :) மிக்க நன்றி செல்விக்கா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள் அக்கா
பக்கோடா செய்து பார்க்கிரேன் ரொம்ப ஈசியா குறிப்பு கொடுத்திருக்கீங்க அருள் அக்கா.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து..
சத்யசங்கரி
மிக்க நன்றி சத்யா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.