குண்டு மிளகாய் சட்னி

தேதி: April 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

குண்டு மிளகாய் - 10
பூண்டு - 8 (அ) 10 பல்
சின்ன வெங்காயம் - 8
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் குண்டு மிளகாயை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து பிரட்டவும்.
பிறகு குண்டு மிளகாயைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி ஆறவிடவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
சுவையான, காரம் அதிகமில்லாத குண்டு மிளகாய் சட்னி ரெடி. இட்லி மற்றும் தோசைக்குப் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிளகாய் சட்னி சூப்பர் அக்கா.. புகைபடமும் சூப்பர்...எனக்கு ஒரு சந்தேகம் இது குடைமிளகாயா இல்லை பஜ்ஜி மிளகாயா..

குண்டு மிளகாய் சட்னி சூப்பர், மிளகாய் பார்க்க ரொம்ப காரம் அதிகமாக இருக்கும் போல தெரியுது,

அன்பு வாணி,
ஆத்தீ... மிளகாயைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு. காரமா இருக்காதா? நான் இந்த‌ விளையாட்டுக்கே வரலைப்பா.

அன்புடன்,
செல்வி.

குண்டு மிளகாய் என்றால் பஜ்ஜி மிளகாயா வாணி அக்கா.

மிளகாயை பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு குண்டு குண்டா. ரொம்ப காரமா இருக்காதா வாணி.

நேத்து வரும்போது குடைபிடிச்சிட்டு வந்துட்டாரு போல இருக்கு:) இந்த காரசட்னி நான் சாப்பிட்டு இருக்கேன், ஆனா இதுவரை ரெசிபி தெரியாது, இனி என்ன காரசாரமா மூக்கை உறிஞ்சுக்கிட்டே அரைச்சு, சாப்பிட்டு பார்க்கிறேன் :)

ம்ம்ம் வாணி இங்கலாம் சொல்வாங்க நிறைய காரம் சேர்த்தா, புருவம் குறைவா வரும்னு, எதற்கும் குறைவாவே சாப்பிடுங்க :) இந்த சட்னி, இப்ப உங்கள போல ஒருத்தர் அம்மில வெச்சு, அரச்சு சாப்பிடுறதை அப்ப பார்த்திருக்கேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இங்கே ஆந்திரா ரெஸ்டாரண்ட்டில் வைப்பாங்க இந்த சட்னி. எங்காளுக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு செய்ய தெரியாது, இதை நிச்சயம் ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிளகாய் சட்னி சூப்பர் வாணி. இங்க குண்டு மிளகாய் இருக்கான்னு தெரியல. கிடைச்சா ட்ரை பண்ணி பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

செய்து பார்க்க‌ வேண்டிய‌ உங்க‌ குறிப்பு நீண்டுகொண்டே போகுது,நல்லாஇருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இது நீங்கள் குறிப்பிட்ட இரண்டுமே இல்லை, பச்சை மிளகாயிலே கொஞ்சம் உருண்டையா, குண்டா இருக்கும். குண்டு மிளகாய்ன்னு
( bullet chilli) சொல்வாங்க. பச்சை மிளகாயை விட காரம் குறைவு.
நன்றி

பச்சை மிளகாயை விட காரம் குறைவு.
பாலபாரதி, வேணும்னா பாதி மிளகாயில(ஐந்து) விதை நீக்கிட்டு செய்துப் பாருங்க.
நன்றி

என்னது பயமாக்கீதா !! ஹி ஹி ஹி பச்சப் புள்ளத்தனமா இருக்குதே :)) சமையல் களஞ்சியம் நீங்க, இதுக்குப் போயி ??!! பச்சை மிளகாய் அளவுக்கு இதிலே காரம் இருக்காது, அதையும் மீறி பயமா இருந்தா இந்த மிளகாயிலே மொத்தமே நாலு விதை தான் இருக்கும்,அதையும் நீக்கிட்டு சமைத்துப் பாருங்க செல்வி மேடம். நன்றி

பஜ்ஜி மிளகாய் நீளமாக இருக்கும், இது உருண்டையா, குண்டு குண்டா இருக்கும். நன்றி நஸ்ரியா

இந்த மிளகாயில காரம் குறைவுதான் உமாகுணா,வருகைக்கு நன்றி

ஆமாம் இங்கிருந்து குண்டு தான் அனுப்பிச்சேன், அங்கே உள்ள வெயில் தாங்காமலேயோ என்னவோ குடை பிடிச்சி கூலாயிட்டாப்புல. அப்புறம் மூக்கை உறிஞ்சுகிட்டே இது சாப்பிட வேண்டியிருக்காது, ஏன்னா காரம் குறைவுதான்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் மகளுக்கு புருவம் நல்ல அழகா அடர்த்தியா வரைந்து வைச்சது போல இருகும், ஆனா அவளும் நல்லா காரம் சாப்பிடுவா.
இருந்தாலும் நீங்க சொன்னது போல குறைச்சிக்கிரேன்.
அப்புறம்
\\இந்த சட்னி, இப்ப உங்கள போல ஒருத்தர் அம்மில வெச்சு, அரச்சு சாப்பிடுறதை அப்ப பார்த்திருக்கேன்// நானே ஒரு டிய்யுப், யாருங்க அது??

நன்றி வனி, செய்துப் பாருங்க

நன்றி உமா,டிரை பண்ணிப் பாருங்க,

நேரமும், சூழலும் அமையும் போது செய்துப் பாருங்க முசி.நன்றி

புது வகை சட்னி தான் தேடிட்டு இருந்த்தேன்... கிடச்சிடுச்சு... இப்ப‌ இங்கெல்லாம் சில‌ நேரம் பச்ச‌ மிளகாய்னு கேட்டா இது தான் கிடைக்குது.. ஆனா காரம் தான்... நீங்க‌ சொன்ன‌ மாதிரி கொஞ்சமா போட்டு ட்ரை பண்றேன்.......

வேணும்னா மிளகாயில் விதையை நீக்கிவிட்டு செய்துப் பாருங்கள் பிரியா, நன்றி